YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 33 OF 100

தியானம் வெற்றியைத் தரும்

“தியானம்” என்று நாம் சொல்லும்போது, நாம் ஆழமாக சிந்தித்து, அதற்கு நம்முடைய முழுக்கவனத்தையும் கொடுப்பதைத்தான் பொருள் படுத்துகிறோம். ஒரு பிரெஞ்சு தம்பதியர், தியானம் என்பது நாம் சாப்பிடுவது போன்றது என்று கற்றுத் தந்தனர். தட்டிலே அழகாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள உணவை ஒரு வாய் சாப்பிடுவார்கள். அதை வாயிலே சுவைக்க சுவைக்க, அதன் வாசனை, அதிலுள்ள இரண்டு விதமான சுவைகள், இதையெல்லாம் சொல்லுவார்கள். அதுவும், வேகமாக அடைத்துக்கொள்ளாமல், மிகவும் மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து, மென்று, அவர்கள் வாய்க்குள்ளாக அதை அனுபவித்து சாப்பிடும் உணர்வை என்னிடம் கூறுவார்கள்.

அமெரிக்கர்களான எங்களுக்கு அது கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது. தேவனுடைய வார்த்தையை “தியானிப்பதற்கு” இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாம் வேத வசனங்களை அவசர அவசரமாக வாசித்து மற்ற வசனங்களுக்கு ஓடிவிடக்கூடாது. ஒரு வசனத்திலோ, வாக்கியத்திலோ அல்லது வார்த்தையிலோ ஜெபத்துடன் சற்று நிறுத்தி நாம் “தியானிக்கவேண்டும்”. இதனுடன் மனதிற்கு வருகிற மற்ற வசனங்களையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். அந்த அதிகாரத்தை வேகமாக முடித்துவிட வேண்டும் என்று ஒரேயடியாக அவசரப்படக்கூடாது. இந்த வசனங்களின் கருத்தை உணர்ந்து, சுவைத்து, ரசித்து அகமகிழவேண்டும். எத்தனை வசனங்களை நாம் வாசித்து விட்டோம் என்பதை விட, எந்த அளவிற்கு அவைகளைப் புரிந்து, உணர்ந்து கொண்டோம் என்பதே மிகவும் முக்கியம். ஒன்றுமே புரியாமல் ஐந்து அதிகாரங்களை வாசிப்பதை விட, ஒரே வசனத்தை ஜெபத்துடன் ஆழமாக தியானித்து, புரிந்துகொள்வது மிகவும் சிறந்ததாகும்.

கர்த்தருடைய வார்த்தையை நாம் “தியானிக்க வேண்டுமானால்”, நமக்கு ஒரு ஒழுங்கு இருக்கவேண்டியது அவசியம். அதிவேகமான உலகத்தில் நாம் வாழ்வதால், நம்மில் ஒரு சிலர் மட்டுமே நேரமெடுத்து வேதத்தை தியானிக்கிறோம். தம்மை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் தந்திருக்கும் அருமையான வாக்குத்தத்தங்களையும், மற்ற வசனங்களையும் நினைத்துப் பார்க்க, கொஞ்சம் நேரத்தை ஒதுக்க நாம் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். முதலாம் சங்கீதத்தில், பாக்கியவான் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் மனுஷன், கர்த்தருடைய வேதத்தை “இரவும், பகலும்” தியானிக்கிறவன். “இரவும், பகலும்” என்று சொல்லும்போது, அந்த மனுஷனுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி தியானத்தில் செலவிடப்படுகிறது என்றுதான் அர்த்தம். தேவனுடைய வார்த்தையை நாம் மனதில் வைத்து, அதை நினைவில்கொள்வது நம்முடைய அன்றாட அலுவல்களில் ஒன்றாக இருக்கவேண்டும். வேண்டாத, தவறான சிந்தனைகளை புறம்பே தள்ளிவிட்டு, நமக்கு பிரயோஜனமான நல்ல காரியங்களை சிந்திப்பதாகும். நம்முடைய கவனத்தை இப்படியாக, முழுவதும் கர்த்தருடைய வார்த்தையின்மேல் வைக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது உதவும்.

ஒவ்வொரு நாள் காலையிலும், வேதத்தைப் படித்து தியானிப்பதிலும், ஜெபத்திலும் ஆண்டவருடன் நேரத்தை செலவழிப்பேன். படித்த வார்த்தையை அந்த நாளுக்குரிய சூழ்நிலைகளுக்கேற்றவாறு பொருத்தி பயன்படுத்துவேன். இந்த தியானப்புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, தொலைபேசியில் எனக்கு ஒரு கெட்ட செய்தி வந்தது. அதற்கு உடனே, நான் வேத வார்த்தைகளை சொல்லி, கர்த்தருடைய பல்வேறு வாக்குத்தத் தங்களை சூழ்நிலைக்கேற்ப நினைவுக்கூர்ந்து, அறிக்கையிட்டேன். அவருடைய வார்த்தை நம்மை பலப்படுத்தி, நமக்கு உதவிசெய்து, சமாதானத்துடனும், மகிழ்ச்சியுடனும், நம்மைக் காக்கிறது.

இந்த அதிகாரத்திற்கு, “தியானம் வெற்றியைத் தரும்” என்று நான் பெயரிட்டதின் காரணம், ஏதோ வேத வசனங்களை நாம் நினைவில் கொள்வது நமக்கு நல்லது என்பது மட்டுமல்ல, அல்லது அது வேத பண்டிதர்களுக்கு உரியது என்றும் அல்ல. இது நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கொடுத்த கட்டளையாகும். மேலும், உண்மையான வெற்றிக்கு இது தேவையான ஒன்றாகும்.

இஸ்ரவேல் மக்களை, வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்குள் நடத்திச் செல்ல, யோசுவாவிற்கு கர்த்தர் கட்டளையிட்ட அவருடைய நியமங்களையும், அவருடைய ஆயத்தத்தையும் சிந்தித்துப்பார்த்தேன். யோசுவாவின் புத்தகத்தில் ஆரம்ப வசனங்களில் கர்த்தரின் கட்டளையை நாம் பார்க்கலாம். குறைந்தபட்சம் இருபது லட்சம் மக்களை கானான் தேசத்திற்குள் நடத்திச் செல்லும் பெரிய பொறுப்பை யோசுவாவுக்கு தேவன் கொடுத்திருந்தார்.

மோசேயுடன் இருந்ததுபோல், நான் உன்னுடனும் இருப்பேன். பலங்கொண்டு திடமனதாயிரு என்று யோசுவாவை தேவன் தைரியப் படுத்தினார். அதன்பிறகு தேவன் சொன்னது, “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிற வைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி,இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துக்கொள்வாய்” (யோசுவா 1:8).

கர்த்தர் கட்டளையை தெளிவாய் கொடுத்து விட்டார். யோசுவாவோ, பொறுப்புடன்அவற்றை தியானித்து, அந்த நியாயப்பிரமாண வார்த்தைகளில் மூழ்கி, அதன் மூலம் தேவனுடைய வழிகளை அவன் கற்றுக்கொண்டு வந்தான். யோசுவா, தன்னுடைய இருதயத்தையும் சிந்தையையும் முழுவதுமாக அந்த வார்த்தைகளில் வைத்தால், அவனுக்கு நல்ல வெற்றியும் செழிப்பும் கிடைத்தது.

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை தியானிப்பதை விட்டுவிட்டு, அநேகர் தங்கள் பிரச்சனைகளையே தியானிக்கின்றனர். அப்படி செய்யும்போது, அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் பெரிதாகி, தேவனுடைய வல்லமை கிரியை செய்யாதபடி செய்து விடுகின்றன.

சாத்தான் உங்கள் மனதை நிரப்ப, தேவன் விரும்ப மாட்டார். அவன் உங்கள் மனதை தவறான, பிற்போக்கான நினைவுகளால் நிறைப்பதையும், அவர் விரும்புவதில்லை. உங்களை சிந்தனையை கட்டுப்படுத்தினால் உங்கள் மனதை, அவனால் கட்டுப்படுத்திவிடமுடியும். அவன் அப்படி செய்வதற்கு, நான் அவனை அனுமதிக்கமாட்டேன் என்று இப்பொழுதே தீர்மானியுங்கள். அவன் உங்களைத் தோற்கடிக்க இடம் கொடுத்துவிடாதீர்கள்.


பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தையை தியானிக்க வேண்டும் என்று எனக்கு நீர் சொல்லியிருக்கிறீர். அதற்கு எனக்கு நீர் உதவி செய்யும். உம்முடைய வார்த்தையே என்னுடைய வாழ்க்கையின் முழு கவனமாக இருக்கட்டும். பிரச்சனை வரும்போது, உடனே உம்முடைய வார்த்தைக்கு நேராக நான் திரும்ப எனக்கு உதவும். பிசாசு என் மனதை தாக்கும்போது, உம்முடைய வார்த்தையைக் கொண்டு எதிர்தாக்குதல் செய்ய, எனக்கு நினைவுபடுத்தும். உம்முடைய வார்த்தையை நான் நாள்தோறும் தியானிக்கும் போது, என்னுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பேன். இயேசுவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.

  

Day 32Day 34

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More