மனதின் போர்களம்Sample
என்னுடைய இயல்பான மனநிலை
எபேசியருக்கு எழுதின நிருபத்தில் உள்ள இந்த வசனங்கள் அநேகருக்கு புரிந்துகொள்ள கடினமானது என்று நினைக்கிறேன். “பிரகாசமான மனக்கண்கள்...”(வ.19) என்று பவுல் எதைக் குறிப்பிடுகிறார்? பவுல், நம்முடைய மனதை குறிப்பிடுகிறார் என்றுதான் நான் நம்புகிறேன். ஏனென்றால், நம்முடைய மனதிற்குதான் ஒரு தெளிவான வெளிப்பாடு தேவையாக இருக்கிறது. நம்முடைய மனதைக்கொண்டுதான் தேவன் தரும் வெளிப்பாட்டை கிரகித்து, பிடித்துக் கொள்ளுகிறோம்.
நம்மில் அநேகர், பல்வேறு காரியங்களில் திசைத் தெரியாமல், கலக்கத்தோடு, நமக்கு “பிரகாசமான...” என்ற நிலை கஷ்டமான ஒன்றாகும். அப்போஸ்தலன், நாம் ஒரு “இயல்பான மனநிலையை” பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நமக்காக ஜெபிக்கிறார். அந்த இயல்பான மனம், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய, திறந்து கொடுக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான், நாம் தேவனுடைய திட்டங்களைத் தொடர்ந்து நம் வாழ்க்கையை வளமாக்குவோம்.
இயல்பான மனநிலையை நாம் காத்துக்கொள்ள, ஆண்டவராகிய இயேசுவின் இரண்டு நண்பர்களைக்குறித்துப் பார்ப்போம். மரியாள், மார்த்தாள் ஆகிய இருவரைக் குறித்தும், இயேசுவானவர் பெத்தானியாவில் இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்றதைக் குறித்தும் நம்மெல்லாருக்கும் தெரியும். மார்த்தாள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, பற்பல வேலைகளில் அலுவலாயிருந்தாள். மரியாளோ இயேசுவின் பாதத்தில் அமர்ந்தாள். மார்த்தாள் பற்பல வேலைகளினால் மிகவும் வருத்தமடைந்து (லூக்கா 10:40), தன்னுடைய சகோதரி உதவி செய்ய வரவில்லை என்று இயேசுவிடம் புகார் சொல்லுகிறாள்.
“மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” (வ.41), என்று சொல்லிவிட்டு, மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள்,” என்று மரியாளை மெச்சுகிறார் இயேசு.
நான் அந்த சம்பவத்தை யோசித்துப் பார்த்தபோது, மார்த்தாள் பற்பல வேலைகளினால் மிகவும் வருத்தமடைந்தது மட்டுமல்ல, அதற்கு மேல் அவளுடைய மனம், இங்கும் அங்குமாக அலைபாய்ந்துகொண்டு எல்லாம், சரியாக இருக்கிறதா; இயேசுவுக்கு என்ன விருந்து உபசரணை செய்வது என்று பல்வேறு காரியங்களை தன் மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் முடித்துவிட்டு இனியாவது இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்போம் என்று உட்கார்ந்திருக்கலாமே! அவள் மனம், வேறு காரியங்களை யோசித்து, குழம்பிக்கொண்டே இருந்திருக்கும்.
மார்த்தாக்கள் தான், நம்முடைய உலகத்தையே கட்டுப்படுத்துகிறார்கள். இல்லையா? அவர்கள்தான் காரியங்களை செய்ய வைக்கிறார்கள். அவர்களுடைய சொந்த இலக்குகளை முடிக்காவிட்டாலும், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். பல்வேறு வேலைகளை செய்யும் இன்றைய நவநாகரீக உலகில், மார்த்தாக்கள்தான் பரிசுகளையும், பாராட்டுகளையும் தட்டிச் செல்கின்றனர். சிலர், எப்பொழுதும் அலுவல் நிறைந்தவர்களாயிருப்பார்கள். அதையே, ஒரு அடையாள அட்டையைப் போல மாட்டிக்கொண்டு, தாங்கள் முக்கியமானவர்கள் என்று காட்டிக்கொள்வார்கள்.
அவர்களுடைய இந்த அலுவல் நிறைந்த தன்மையானது; தேவனுடன் ஒரு பலமான உறவில் முன்னேறிச் செல்லமுடியாதபடி, எளிதில் அவர்களைத் திசை திருப்பும் என்று அறியாதிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களே, ஒரு ஆழமான சமாதானமில்லாதவர்களாய், ஆவிக்குரிய நிறைவு இல்லாதவர்களாய் இருப்பவர்கள். கர்த்தர் சொல்லுகிற “இயல்பான மனநிலை”, அவர்களுக்கு இல்லை. கர்த்தர் விரும்பும் மனநிலையில் அவர்கள் இருப்பதில்லை!
அளவுக்கதிகமாக வேலை, வேலை என்று அலைபவர்கள், இரவிலே படுத்தாலும் தூங்குவதில்லை. பகல் முழுவதும் தாங்கள் செய்த வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அல்லது, மனதிலே, அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளைக் குறித்து, பட்டியல் போடுவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ, இயேசு நம்மை அழைக்கவில்லை. விசுவாசிகளாகிய நாம் ஆவிக்குரியவர்கள்தான். அதே நேரத்தில, இயல்பானவர்களும் கூட. இயற்கையானது, ஆவிக் குரியவைகளை புரிந்துகொள்ளாததால், தொடர்ந்து இரண்டு பிரமாணங் களுக்கும் போராட்டம் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய இயல்பான வாழ்க்கையிலும் இது வெளிப்படுகிறது. ஆனாலும், நம்முடைய மனதும், ஆவியும், இணைந்து செயல்படமுடியும் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.
நம்முடைய கவனத்தை திருப்பும்படி, நம்மை சுற்றிலும் பல காரியங்கள் நடந்தாலும், நாம் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தாலும், அதை மீறி, கர்த்தருடன் நேரத்தை செலவிட நம்முடைய மனதில் நாம் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இயல்பாகவே விசுவாசிகளுக்கு இருக்கவேண்டிய கிறிஸ்துவின் சிந்தையானது, நமக்கும் இருக்கவேண்டுமானால், மரியாளைப்போல இயேசுவின் பாதத்தில் நாம் இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அவளைச் சுற்றிலும் பரபரப்பான பல வேலைகள் நடந்துக்கொண்டிருந்தாலும், மரியாள் அமைதியாக அமர்ந்து, இயேசுவின் குரலைக் கவனித்துக் கொண்டிருந்தாள். நம்முடைய மனமும் இப்படித்தான் செயல்படவேண்டும். ஆனால், நாமோ, நம்முடைய மனதை அநேக நேரங்களில் தவறான திசையில் பயன்படுத்துவதால், ஆவியானவர் நமக்கு உதவி செய்வதை இது தடைசெய்கிறது.
இந்த தியானப்பகுதியை படிக்கும்போது, உங்களுடைய மனம் சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்துகொள்வீர்களானால், “ஆண்டவரே, என்னை மன்னித்து, உம்முடைய இராஜ்யத்தில் சரியான மனநிலை என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுத்தாரும் என்று அவரிடம் கேளுங்கள்.
பரலோகத்திலுள்ள அன்பின் தேவனே, என் கவனம் தொடர்ந்து திசைதிருப்பப்படுகிறது. நான் சற்று நிறுத்தி, உம் மேல் என் கவனத்தை பதிக்க முயலும்போது, நான் செய்ய வேண்டிய பற்பல வேலைகள் என் மனதை நெருக்குகிறது. எனக்குத் தேவையானது ஒன்றே என்று உணருகிறேன் (- உம் மேல், நான் கவனம் செலுத்த வேண்டும்). எல்லாத் தடைகளையும், சத்தங்களையும் தள்ளிவிட எனக்கு உதவி செய்யும். அப்பொழுது - “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற நீ என்னிடம் வாருங்கள், நான் உனக்கு இளைப்பாறுதலைத் தருவேன் என்று சொல்லுகிற உம்முடைய சத்தத்தை மட்டும் நான் கேட்கட்டும். ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More