YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 36 OF 100

எதை சிந்திக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்

“நாம் இப்படியே இவ்வளவு நாட்களாக இருந்து விட்டோமே,” என்று சிலர் அதைக்குறித்து சந்தோஷமற்று இருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்று இன்னொரு சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை, அவர்கள் உணர்வதே இல்லை. நானும் அப்படியே இருந்தது, எனக்கு நன்றாக ஞாபகத்திற்கு வருகிறது. மற்றவர்கள் நடந்துக்கொள்கிற விதம்தான், என்னுடைய துயரத்திற்கு காரணம் என்று நான் பழிசுமத்தினேன். என் கணவரும், என் பிள்ளைகளும்தான் எனக்கு அதிக துன்பத்தை வருவித்தார்கள் என்று எண்ணினேன். அவர்கள் மட்டும் மாறி, நான் எதை விரும்புகிறேனோ அதற்கு இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பார்களானால், எனக்கு நிம்மதியாக இருக்கும். அவர்கள் எனக்கு வீட்டுவேலைகளில் இன்னும் அதிகமாக உதவி செய்வார்களேயானால், வெளிவேலைகளை செய்வதற்கு “நான் போகிறேன்” என்று தயாராக இருப்பார்களானால், அல்லது நான் எப்படி இருக்கிறேன் என்று என்னை விசாரிப்பார்களேயானால், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன். நான் அவர்களிடம் இப்படி எதையும் சொன்னதில்லை என்பது உண்மைதான். அவர்கள் மட்டும் சற்று புரிந்துகொண்டு, கரிசனையுள்ளவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், மேலும், நானும் என் வேலையை எளிதாக செய்ய, அது எனக்கு உதவுமே என்றும் எண்ணினேன்.

இதைக்குறித்து நான் ஜெபம் பண்ணினேன். இவர்களெல்லாரும் என்னோடு ஒத்துழைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆண்டவரிடம் அடிக்கடி கூறுவேன். ஆனால் அவர்கள் மாறவில்லை.

ஒரு நாள் தேவன் என்னோடு பேசினார் - நான் எதிர்பார்த்தது போல் அல்ல. அவரோ: “நீ எதை சிந்திக்கிறாய் என்பதை சிந்தி,” என்று சொன்னார். அவர் என்ன சொல்லுகிறார் என்று எனக்கு புரியவில்லை. சொல்லப்போனால், அந்த வார்த்தைகளே அர்த்தமில்லாததுபோல் இருந்தது. நான் எதை சிந்திக்கிறேன் என்பதை எப்படி சிந்திக்க முடியும்?

அதன் பின் நான் அதன் உண்மையை உணர்ந்தேன். என்னுடைய மனம், ஒரு சிந்தனையிலிருந்து மற்றொரு சிந்தனைக்குத் தாவியது. அது கெட்டதாக இருந்தது. இதில் மோசமான காரியம் என்னவென்றால், என் நினைவுகள் என்னை சுற்றியும், என் தேவைகளை பற்றியுமே இருந்தது. என் வாழ்க்கையிலுள்ள மற்றவர்கள் மாறினால்தான், நான் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தேன். கடைசியில், ஒருவேளை அவர்கள் மாறினாலும், நான் துக்கமாக இருக்க, வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடித்திருப்பேன் என்பதை ஒத்துக்கொண்டேன். நான் மகிழ்ச்சி இன்றி இருந்ததற்கு, எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை. முதலில் ஒன்றைக் குறை கூறுவேன், பிறகு இன்னொன்று என்று அப்படியே தொடருவேன். 

என்னுடைய நிலைமையை நான் ஆழமாக யோசித்தபோது, பிலிப்பியர் 4:8ல் பவுல் எவைகளையே நாம் சிந்திக்கவேண்டும் என்று பட்டியல் போட்டிருக்கிறாரோ, அதை நான் யோசித்தேன். நான் சிந்திக்கும் காரியங்களை, நான் இனி சிந்திக்கக்கூடாது என்று தேவன் விரும்புவாரேயானால்; நான் எவைகளை இனிமேல் சிந்திக்க வேண்டும் என்று அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி, நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன். வருடக்கணக்காக நான் சபைக்கு சென்று வந்தாலும், என் வாழ்க்கை தரமுள்ளதாக இருக்க, என்னுடைய சிந்தனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை, ஒருவரும் சொல்லவில்லை, எவரும் கேள்விப்பட்டதாகவும் தெரியவில்லை.

பவுல் அந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ளது போல, நாம் அவைகளில் முழு கவனம் செலுத்தி, நல்ல சிந்தனைகளை, சிந்திப்போமானால், நாம் நிச்சயமாக கட்டப்படுவோம். நாம் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், கர்த்தருக்குள்ளும் பெலவான்களாக வளருவோம்.

நான் தொடர்ந்து தேவனுடைய செய்தியை கவனித்தபோது, என்னுடைய சிந்தனை எந்த அளவுக்கு என்னுடைய மனப்பான்மையை பாதித்திருக்கிறது என்று உணர்ந்தேன். நம்மெல்லாரை பற்றியும், இதுதான் உண்மையான நிலை. நமக்கு எது நல்லதோ, அதைத்தான் தேவன் நம்மை செய்யச்சொல்லுகிறார். நாம் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருக்கவேண்டுமென்றுதான் அவர் விரும்புகிறார். நமக்கு நிறைவும், மகிழ்ச்சியும் வேண்டுமென்றால், கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் வழியில் அதைக் கண்டுபிடிக்கவேண்டும். நாம் அதை விட்டு விலகி, தவறான சிந்தனைகளினால் நிறைந்திருந்தால், நாம் பரிதாபமாகத்தான் இருப்போம். இது ஏதோ தத்துவமல்ல. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இதை நான் பேசுகிறேன். நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். நாம் துயரம் நிறைந்தவர்களாக இருப்பதன் மூலம், நம்மை சுற்றியிருப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் இழக்கசெய்து விடுகிறோம்.

அந்நாளிலிருந்து, நான் என்னுடைய சிந்தனைகளை வரிசைப்படுத்தி சரியாக சிந்திக்கிறேனா என்று பரிசோதிப்பதை, என்னுடைய பழக்கமாக்கிக் கொண்டேன். என்னுடைய சிந்தனையை மறுபரிசீலனை செய்வேன். நான் எதைக்குறித்து யோசிக்கிறேன் என்று, என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

என்னுடைய சொந்த அனுபவத்தினால் இதைக்கற்றபடியால்தான், நான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன். நாம் படுகிற வேதனை, துன்பம் இவற்றிற்கு; மற்றவர்கள்தான் காரணம் அல்லது சூழ்நிலைதான் காரணம் என்று பிசாசு நம்மை ஏமாற்றிவிடுவான். நம்முடைய சொந்த சிந்தனைகள்தான், எல்லாத் துயரத்திற்கும் காரணம் என்ற உண்மையை, நாம் சந்திக்காதபடி செய்துவிடுவான். நாம் பிற்போக்கான, குற்றம் கண்டுபிடிக்கிற, சோர்வூட்டுகிற சிந்தனைகளுடன், நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைப்பது, நடைமுறையில் முடியாத காரியம் என்று துணிந்து சொல்லுகிறேன்.

நம்முடைய சிந்தனையில், மனதில் உள்ள போராட்டத்தை நாம் ஜெயித்தே ஆக வேண்டும். நாம் கேட்போமேயானால், நமக்கு உதவி செய்ய கர்த்தர் ஆயத்தமாக இருக்கிறார். 


அன்புள்ள தேவனே, நான் எதை சிந்திக்கிறேன் என்பதைக் குறித்து கவனமாக சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியற்ற, சோகமான நிலைமைக்கு மற்றவர்கள் அல்ல, நானே காரணம் என்று ஒத்துக்கொள்கிறேன். என்னுடைய வெற்றியின் ஊற்றுக் காரணர் நீர்தான். உம்முடைய நாமத்தினால் எனக்கு பெரிய வெற்றியைத் தாரும் என்று கேட்கிறேன். என்னுடைய சிந்தனைகளை, பரிசுத்த ஆவியானவருடைய உதவியுடன் ஆராய்ந்து பார்ப்பேன். ஆமென்.

Day 35Day 37

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More