மனதின் போர்களம்Sample
எனக்கு மனதில் ஒரு மாற்றம் தேவை
நான் எப்படிப்பட்டவளாக இருந்தேன், ஆனால் இப்பொழுது எப்படிப்பட்டவளாக மாறியிருக்கிறேன் என்று சிந்திக்கும்போது, அது எனக்கு மிகவும் ஆறுதலைத் தருகிறது. நான் தவறுகளை செய்யும்போதும், வாழ்க்கையில் தடுமாறும்போதும், அது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. நான் எங்கு ஆரம்பித்தேன், இப்பொழுது எங்கு இருக்கிறேன் என்று பார்க்கும்போது, நான் பெரிதும் உற்சாகமடைகிறேன்.
எபேசியர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல், கிறிஸ்துவுக்கு புறம்பானவர்களைக் குறித்து எழுதுகிறார். அவிசுவாசிகள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக, ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடக்கிறார்கள் (வ.1,2). முற்காலத்திலே, அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தோம். ஆனால், விசுவாசிகளாகிய நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப் பட்டுவிட்டோம். நாம் இனியும் நம்முடைய மாம்ச இச்சையின் ஆளுகையின் கீழ் இல்லை என்பதை அவர் நமக்கு தெரிவிக்கிறார்.
தங்கள் மனதைக் கட்டுப்படுத்த அறியாததால், அநேக விசுவாசிகளுக்கு இதில்தான் பிரச்சனை. ஒரு பெண், ஒரு நாள் என்னிடம் இப்படியாக சொன்னாள், “என்னுடைய மனதை நான் சரியாக செலுத்தி, ஆரோக்கியமாகவும், முற்போக்காகவும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை”. சிந்தனைகளையும், மனதையும் எப்படிக் கட்டுப்படுத்துவது என்று பிரசங்கியார் பிரசங்கித்திருந்தாலும், அதை நான் கவனிக்கவேயில்லை. இருப்பினும், ஒரு நாள் சிந்தனையின் வல்லமை என்ற கட்டுரையை நான் வாசிக்க நேர்ந்தது. தேவன் என்னை உணர்த்தினார். அப்பொழுதுதான் என்னுடைய சிந்தனையை நான் மாற்றிக்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தேன்.
இந்தப் பெண் தன் காரை ஓட்டிச் சென்றபோது, வழியில் ஒரு கார் படத்தைப் பார்த்தாள். அந்த படத்தில் உள்ள காருக்கு, பெரிய கண்கள் வரையப் பட்டிருந்தன. அந்தக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து வருவதுபோல வரைந்து, அதற்கு கீழ் இப்படியாக எழுதப்பட்டிருந்தது; “தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். எனக்கு ஆயில் மாற்றப்பட வேண்டும்”.
அவள் கடந்து செல்லும் போது,“எனக்கும் மனதில் மாற்றம் தேவை” என்று யோசித்தாள். என் மனம் இஷ்டப்பட்டபடி போகும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. நான் கர்த்தருடைய பிள்ளையாக, என்னுடைய பொறுப்பு, என் சிந்தனைகளை ஆரோக்கியமுள்ளதாகவும், பெலம் வாய்ந்ததாகவும் வைத்துக்கொள்ளவேண்டும், என தீர்மானிதேன்.
நான் ஒழுங்காக சபைக்கு சென்றேன். அநேக வருடங்களாக மிகவும் மும்முரமாக என்னை ஈடுபடுத்தியிருந்தேன். எனக்கு நிறைய வேத வசனங்கள் தெரியும். சபையில் உதவியாளராக நிறைய வேலைகளையும் செய்திருக்கிறேன். ஆனால், என் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தியதே இல்லை. நான் சர்ச்சில் நின்று பாடும்போது கூட, என் மனம் அடிக்கடி தாவிக்கொண்டிருக்கும். நாங்கள் சந்தோஷத்தைக் குறித்தும், கிருபையைக் குறித்தும் பாடிக்கொண்டிருப்போம். என் மனமோ, சமையலறையில் ‘சிங்க்கீல்’ உள்ள பாத்திரங்கள் இன்னும் கழுவாமல் இருப்பது, துவைக்காத துணிகள், மதியம் நான் என்ன சாப்பிடுவது போன்ற காரியங்களை சிந்தித்தன.
நான் சர்ச்சுக்கு செல்வதில் உண்மையாயிருந்தேன். ஆனால், தேவனுடைய வார்த்தையை “கேட்பதில்” எனக்கு உண்மையில்லை. பிரசங்கம் செய்பவர் குறிப்பிடும் வேத வசனங்களை கவனிப்பேன். என்னுடைய வேதத்திலும் வசனத்தை படிப்பேன். மனமோ கேட்பதிலும், வாசிப்பதிலும் இராது. என் கண்கள் மட்டும் அதைப் பார்க்கும். வெளியரங்கமாக, நான் நல்லதை செய்வது போல் காட்சியளித்தேன். என்னுடைய சிந்தனையோ சரியில்லை, எல்லாமே குழப்பம். அதை எப்படி சரி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
“எனக்கு மனதில் ஒரு மாற்றம் தேவை”, என்று திடீரென்று சத்தமாக சொன்னாள் அந்தப் பெண். தான் சொன்ன வார்த்தையை யோசிக்கவும் தொடங்கினாள். அவள் பார்த்த கார் படத்தைப் போல அவளுக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. “மனதில் ஒரு மாற்றம்”. அதாவது, பிசாசு அவள் சிந்தனைகளை நடத்துவதற்கு பதிலாக, பரிசுத்த ஆவியானவர் அவளை வழிநடத்த அவள் அனுமதிக்கவேண்டும்.
“நான் ஏதாவது செய்யவேண்டுமா?” என்று அவள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள். நான் உடனே என் வாழ்க்கையின் செயல்பாடுகளை மாற்றவேண்டும். இல்லாவிட்டால், என்னுடைய சிந்தனைகளில் உள்ள புதிய மாற்றத்தையும், பிசாசானவன் குழப்பி பழைய நிலைக்கு மாற்றிவிடுவான் என்பதை உணர்ந்தாள்.
அடுத்த சில தினங்களாக, அவள் “படிப்பது”, “தியானிப்பது” என்ற வார்த்தைகளை, வேதத்தில் அலசி ஆராய்ந்து குறிக்க ஆரம்பித்தாள். மனதைக் குறித்தும், சிந்தனைகளைக் குறித்தும் உள்ள வேதப்பகுதிகளையும் கவனித்தாள். அந்த வசனங்களை காகிதங்களில் எழுதி, சத்தமாக வாசித்து, அதையே நினைத்துக்கொண்டிருந்தாள்.
கீழே மூன்று வசனங்களை நாம் காணலாம்;
அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான் (நீதிமொழிகள் 23:7)
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி... (எபேசியர் 4:23)
நான் பிரியப்படுகிற உம்முடைய கற்பனைகளின் பேரில், மன மகிழ்ச்சியாயிருப்பேன் (சங்கீதம் 119:48).
சரியானவைகளை அவள் அதிகமாக தியானிக்க ஆரம்பித்தவுடனே, பிசாசு அவள் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்தான். இதே போல் தான் நாமும் செய்யவேண்டும். நாம் எவ்வளவுக்கதிகமாக கர்த்தர் மேல் நம் கவனத்தை பதியவைக்கிறோமோ, பிசாசு நம்மை தோல்விக்குள் நடத்த முடியாது!
பெரிய தேவனே, எனக்கு ஒரு மனமாற்றத்தை தந்ததற்காக உமக்கு நன்றி. என்னுடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும், என் முழு மனதோடும், விடுதலையோடு உமக்கு ஊழியம் செய்ய எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More