YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 28 OF 100

தீமையை எதிர்ப்பார்க்குதல்

பரிசுத்த வேதாகமத்தை, மிகவும் கருத்தோடு நான் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில், என்னைச் சுற்றிலும் ஒரு பாரமான சூழ்நிலையை உணர்ந்தேன். ஏதோ தீங்கு நடக்கப்போவதுபோல், எல்லாமே வருத்தமாக இருந்தது. அதைத் திட்டவட்டமாக என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு அர்த்தமற்ற மன அழுத்தம், ஏதோ தீமையான, கெட்ட காரியம் நடக்கும் என்பது போன்ற போலியான உணர்வு.

“ஓ ஆண்டவரே, என்ன நடக்கப்போகிறது? எனக்கு ஏன் இப்படிப்பட்ட உணர்வு”, என்று ஜெபித்தேன்.

இந்தக் கேள்வியை நான் கேட்டு முடிப்பதற்குள், தேவன் என்னிடம் சொன்ன வார்த்தை, “தீமையை எதிர்ப்பார்க்குதல்” என்பதாகும். 

இதைக்குறித்து நான் சற்று நேரம் சிந்திக்க வேண்டியதாக இருந்தது. ஏனென்றால், நான் இதைக்குறித்து, இதற்கு முன் கேள்விப் பட்டதே இல்லை. அதுவும், ஆண்டவரே என்னோடு பேசியிருக்கிறார். அதனால், அவரே எனக்கு அதற்குரிய பதிலைக் கொடுக்கட்டும் என்று நான் அமைதலாக அவருக்கு முன்பாக இருந்தேன். 

என்னுடைய அங்கலாய்ப்புகள் எல்லாம், உண்மையானதல்ல என்பதை முதலில் உணர்ந்தேன். அவை உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளையோ சூழ்நிலைகளையோ, அடிப்படையாகக்கொண் டவை அல்ல. நம்மில் அநேகருக்கு இருப்பது போல, எனக்கும் பிரச்சனைகள் இருந்தன. ஆனால், பிசாசு என்னிடம் காண்பித்தது போல, அவை ஒன்றும் மோசமாக இல்லை. அவன் காட்டினப் பொய்களை, நான் அப்படியே ஏற்றுக் கொண்டதுதான், தீமையான காரியங்கள் நடக்கப்போகிறது என்று என்னை எதிர்ப்பார்க்க வைத்தது. நான் என் வாழ்நாளில் முக்கால்வாசி நேரம் இப்படித்தான் உணர்ந்தேன் என்பதை முடிவில் கண்டுக்கொண்டேன். நல்லது நடக்கவேண்டும் என்று மும்முரமாக எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு; கெட்ட, தீமையான காரியங்கள் நடப்பதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு விதமான இனம்புரியாத பயம், விவரிக்க முடியாத பதஷ்டம் என்னை சுற்றிலும் இருந்தது. எதையும் குறிப்பாக என்னால் கையிட்டுச் செய்யமுடியவில்லை. ஏதோ தீங்கு பயங்கரமாக வருவது போன்ற உணர்வு.

“லிவிங் பைபிள்,” என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பு இப்படியாக கூறுகிறது, “ஒரு மனிதர் சோகமாக இருந்தால், எல்லாமே தவறாக போவதுபோல் இருக்கும்”.

நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னதுபோல, என் வாழ்க்கையின் பெரும்பகுதியானது பரிதாபமானதாக இருந்ததின் காரணம், தீய எண்ணங்களும், நான் அங்கலாய்த்து தீமையை எதிர்நோக்கியதும் தான்.

நான் தொடர்ந்து, “தீமையை எதிர்நோக்கும்” காரியங்களைத் தியானிக்கும்போது, தேவன் இடைப்பட்டு, எனக்கு ஒரு தெளிவான வெளிப்பாட்டைத் தந்தார். நான் பரிதாபமாக, பாரத்தோடு இருந்ததன் காரணம், என்னுடைய எண்ணங்கள், துயரத்தால் நிறைந்திருந்த படியால்தான். என்னுடைய தீய சிந்தனைகள், என் வாழ்வின் மேலோட்டத்தை கெடுத்துவிட்டது. என்னுடைய தீய சிந்தனைகள்,என் வாழ்வை நான் சந்தோஷமாக அனுபவிக்க முடியாதபடி, என் மகிழ்ச்சியை திருடின. “இந்த நாளுக்காக நன்றி ஆண்டவரே, என் கணவர் டேவ், மற்றும் பிள்ளைகளுக்காக நன்றி, உம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி”, என்று நான் சொல்லியிருக்கவேண்டும். ஆனால், இப்படி முற்போக்கானவளாக இருப்பதை விட்டுவிட்டு; ஒரு தொலைபேசி மணி அடித்தாலும்கூட, யார் என்ன கெட்ட செய்தி சொல்லிவிடுவார்களோ என்று தொலைபேசியை எடுத்துப் பேச பயந்து நடுங்கினேன்.

இந்த தீய, துயரமான, கெட்டவைகளையே எதிர்பார்க்கும் நிலை, எனக்கு, என் சிறியப் பிராயத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்ச்சிகளால் தான் நடந்தன. என்னுடைய கடந்தகால வாழ்க்கை, மிகவும் துயரம் நிறைந்ததாயும், சந்தோஷமேயில்லாமல் ஏமாற்றம் நிறைந்ததாயும் இருந்தது. எதிர்காலத்தைக்குறித்து அர்த்தமற்ற, பயங்கரமான, பயத்திலும், திகிலிலும் வாழத் துவங்கினேன். பின்னானவைகளை மறந்து, முன்னேறிக் கடந்து செல்லவேண்டுமென்று எனக்குக் கற்றுத்தர ஒருவருமில்லை. எனக்கு தற்போது கொடுக்கப்ட்டிருக்கும் வாழ்க்கையில், மகிழ்ச்சியடையவோ, நன்மையான காரியங்களில் சந்தோஷப்படவோ முடியவில்லை. கடந்தகால நிகழ்ச்சிகளிலேயே என் கவனம் முழுவதும் பதிந்திருந்தது. அதனால், வரப்போகும் காரியங்களும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அதேசமயம், தேவனுடைய வார்த்தையை உபயோகித்து, அதன் மூலம் அவற்றை நான் உடைத்தெறிய முடியும் என்று அறியும் வரை; தற்போது நடந்துகொண்டிருந்த காரியங்களும் கூட குழப்பங்களும், துயரங்களும் நிறைந்தவைகளாயிருந்தன. ஏனென்றால், நான் அதையே எதிர் நோக்கியிருந்ததால்; சாத்தான் பலமான அரண்களை என் மனதை சுற்றிலும் கட்டியிருந்தான். 

எனக்கு மர்லின் என்ற ஒரு சிநேகிதி இருந்தாள். அவள் தொடர்ந்து குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை உடையவளாக இருந்தாள். ஒருநாள், அவள் சரீரத்திலே சுகவீனம் இருந்தது. அடுத்த நாளே, அவள் மகன் வேலையை இழந்தான். அதனால், அவனையும், அவன் குடும்பத்தையும் இவள்தான் தாங்கவேண்டியிருந்தது. இது நடந்து முடிந்தவுடனே, மற்றுமொரு காரியம் வெடித்து எழும்பும். மர்லின் ஒரு விசுவாசிதான், ஆனால், கெட்ட செய்தி என்றால் அவளுக்கு திகில். குழப்பமில்லாத வாழ்க்கையென்றாலே, அவளுக்கு என்ன வென்று தெரியாது. அவள் சம்பாஷனைகள் முழுவதுமே பிற்போக்கானவை, துயரம் நிறைந்தவை. அவள் முகபாவமும், சோகமாக இருக்கும்.

நானும் மர்லினைப்போல் மாறுவதை உணர்ந்தேன். என் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்காமல், பிசாசு என் மகிழ்ச்சியை திருடுவதற்கு, நான் அனுமதித்ததினால்தான், நானும் இப்படி பரிதாபமாக மாறினேன் என்று அறிந்தேன். முற்போக்காக, நல்ல, ஆரோக்கியமான சிந்தனைகளை சிந்திக்கத் துவங்கும்போது, கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் சிந்தனைகளை மாற்றிக் கொண்டேன். அதனால், என் வாழ்க்கையிலும் மாற்றம். இனியும் கெட்ட, தீய காரியங்களை எதிர்நோக்கி, பயந்து வாழ வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது வேண்டுமென்றே, நல்ல காரியங்கள் என் வாழ்க்கையில் நடைபெற எதிர்பார்க்கிறேன். நான் யோசிக்கும் என் நினைவுகளை எப்படி சிந்திக்கவேண்டும் என்று தேர்வு செய்ய என்னால் முடியும். பிசாசின் பொய்களை நான் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

எல்லோரைப் போலவும், பிற்போக்கான நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் அவ்வப்போது நடைபெறாமல் இருப்பதில்லை. ஆனால், அதன் விளைவாக, நான் பிற்போக்கானவளாக மாறிவிடுகிறதில்லை. நான் முற்போக்கானவைகளாகவே இருக்கிறேன். அது எனக்கு புயலின் மத்தியிலும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க உதவி செய்கிறது.


அருமையான ஆண்டவரே, என்னுடைய வாழ்நாட்களில் எத்தனையோ நாட்களை பிசாசானவன் தீங்கான காரியங்களை எதிர்பார்க்கவைத்து, நீர் தந்த மெய்யான சந்தோஷமான, நிறைவான நாட்களை திருடிவிட்டான். அப்படிப்பட்ட தீமையான உணர்வுகள் எனக்கு வரும்போது, நீர் ஆளுகை செய்கிறவர் என்பதை எனக்கு ஞாபகப் படுத்தும். உம்மிலே நான் இளைப்பாறவும், உம்முடைய வல்லமையிலே நான் களிகூறவும், எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Day 27Day 29

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More