YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 26 OF 100

முற்போக்கான விசுவாசம்

ஆபிரகாமை குறித்து எத்தனை முறை வாசித்தாலும், அது என்னை வியப்பில் ஆழ்த்தும். அவன் நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது... அவனுக்கு குழந்தை பிறந்ததினால் அல்ல; அது ஒரு பெரிய அற்புதம்தான். ஆனால், அதற்காக அவன் இருபத்தைந்து வருடங்கள் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்ததுதான் வியக்கத்தக்க ஒன்றாகும். தேவன் அவனுக்கு ஒரு மகனை வாக்குத்தத்தம் பண்ணினபோது, அவனுக்கு எழுபத்து ஐந்து வயதாகும்.

நம்மில் எத்தனை பேர் தேவனை விசுவாசித்து, இருபத்தைந்து வருஷம் எதிர்பார்த்து காத்திருப்போம் என்று தெரியவில்லை. அநேகமாக, “நான் தேவனிடமிருந்துதான் உண்மையாகவே இந்த காரியத்தை கேட்டேனா?” “ஓ, நிஜமாகவே தேவன்தான் அதைச் சொன்னாரா?” “ஒருவேளை, வேறு எங்காவது போய், திரும்பவும் கர்த்தரிடமிருந்து ஒரு புதிய வார்த்தையை நான் கேட்கவேண்டும் போல் இருக்கு,” என்றுதான் நாம் சொல்லியிருப்போம்.

சாராளுக்கும், ஆபிரகாமுக்கும் கூட, வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பதில், பிரச்சனை இருக்கத்தான் செய்தது. அவர்கள் வாஞ்சித்ததை அடையும்படிக்கு, அடிமைப் பெண்ணாகிய, ஆகார் மூலமாக பிள்ளையை பெற முயற்சி செய்தனர். ஆனால், தேவனோ, இந்த விதத்தில் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றபோவதில்லை என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அவர்களுடைய இந்த செய்கை யானது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளையைப் பெற்றுக்கொள்வதைத் தாமதப்படுத்தியது. 

அநேக வேளைகளில், நாம் பொறுமையில்லாமல், காரியங்களை நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம். நமக்கு அப்பத்தான் “புதிய கருத்துக்களும்”, “சொந்தத் திட்டங்களும்” உருவாகும். இதன் பிறகு, தேவன் அதை ஆசீர்வதிப்பார் என்று எதிர்ப்பார்ப்போம். நம்முடைய திட்டங்கள் குழப்பத்தில்தான் போய் முடியும். அந்தக் குழப்பத்தை நாம் சரி செய்வதற்குள், நமக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நாமே தாமதிக்க செய்து விடுவோம். 

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்தபோது, ஜனங்கள் காத்திருக்க பொறுமையில்லாமல் பொல்லாத காரியங்களை நடப்பித்ததை மோசே பார்த்த மாத்திரத்தில், கையிலிருந்த கற்பலகைகளை; அதாவது, கர்த்தரிடத்திலிருந்து பெற்ற தேவனால் கைப்பட எழுதப்பட்ட கற்பலகைகளை கோபத்தில் உடைத்துப்போட்டான். மோசேயுடைய கோபத்தை நாம் புரிந்து கொண்டாலும், அந்த கற்பலகைகளை உடைத்தது, தேவனால் நேர்ந்த செயல் அல்ல; மோசே மறுபடியும் சீனாய் மலையில் ஏறி, மறுபடியும் அதேபோல பத்துக்கற்பனைகளை பெற்றுக்கொண்டு வரவேண்டியதாக இருந்தது. மோசே, கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலினால், மறுபடியும் கர்த்தரிடத்தில் போய் அதைப்பெற வேண்டியதாயிற்று. இது நமக்கு ஒரு நல்ல பாடம். முதலில் நாம் ஜெபிக்கவேண்டும், அடுத்து, தேவனுடைய திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே முதலில் திட்டத்தை தீட்டிவிட்டு, அதன் பிறகு ஜெபிப்பது அல்ல. அது ஒருபோதும் வேலை செய்யாது.

நமக்கு அடிக்கடி கடினமாக இருக்கும் காரியம் எது தெரியுமா? ஒவ்வொரு வருஷமும், தேவனையே பிடித்துக்கொண்டு, வருஷங்களைக் கடப்பதுதான்.

சில நேரங்களில், என்னுடைய கூட்டத்திற்கு வருகிறவர்கள், முடிந்தவுடன் என்னிடம் தங்களுடைய சோகமான கதைகளை சொல்லுவார்கள். முற்போக்கானவர்களாக மாற, நான் அவர்களை ஊக்குவிப்பதுண்டு. சிலர், நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும், கவனமாகக் கேட்டு, தலையை அசைத்து, புன்முறுவலோடு ஏற்றுக்கொள்வது போலிருக்கும். கடைசியில், மிகவும் பிற்போக்கான ஒரு வார்த்தையைச் சொல்வார்கள். அந்த மோசமான ஒரு வார்த்தை, நான் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அழித்துவிட்டதுபோல் ஆகி விடும். ஆபிரகாமோ, இப்படி இருக்கவில்லை.

வேதாகமம் நமக்கு வாக்குத்தத்தங்களையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அவருக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு, தேவன் நன்மையை வாக்களித்திருக்கிறார். சூழ்நிலைகள் நமக்கு எவ்வளவு பயங்கரமானவைகளாக இருந்தாலும், அதுவும் சிலருக்கு கொடுமையானவைகளாக இருந்தாலும், இதன் மத்தியிலும், தேவன் நமக்கு நன்மையைத்தான் வர்ணிக்கிறார். அது ஒருவேளை, நம்முடைய புத்திக்கு எட்டாத ஒன்றாக இருக்கலாம். மேலும், நாம் விரும்பும் காரியங்களை உடனே பெற்றுக்கொள்வது நமக்கு ஒருவேளை சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். சில நேரங்களில், நாம் விரும்பியவற்றை பெற்றுக்கொள்ள காத்திருப்பது, நமக்கு சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், தேவனுடைய குணாதிசயத்தை நம்மிலே உருவாக்கக்கூடிய ஒறு வாய்ப்பாக அது இருக்ககூடும்.

ஆண்டவர் நமக்கு நன்மை செய்து, நம்மை சந்தோஷமாக்க விரும்புவார். பிசாசு, நமக்கு கெடுதி செய்து, நம்மை வேதனைக்குள்ளாக்கத் தீர்மானிப்பான். நாம் பொறுமையோடு தொடர்ந்து கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து காத்திருக்கலாம்; அல்லது பொல்லாத பிசாசு நம்முடைய காதுகளில் முணுமுணுப்பவற்றைக் கேட்டு, வழிவிலகியும் போகலாம்.

அற்புதங்களின் ஆரம்பமே நம் “தேவன்தான்” என்பதை அநேகர் மறந்து விடுகின்றனர். சாத்தியமற்றவைகளை, சாத்தியமாக்குவதில் அவர் விசேஷமானவர். மலடியாயிருந்த சாராளுக்கு, ஒரு மகனைக் கொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் கால்நடையாய் நடந்து, கடந்து செல்ல, செங்கடலை இரண்டாக பிளந்தார். கவண்கல், ஒன்றினால் கோலியாத் தரையில் விழும்படி செய்தார். இவையெல்லாம் அற்புதங்கள். இதுதான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. இது, இயற்கை விதி முறைகளுக்கு சவால் விடுவது போன்றதாகும். (விதிமுறைகளை ஏற்படுத்தியவரே நம்முடைய தேவன்தான், அதை முறியடிக்கவும் அவரால் முடியும்)!

எபிரெயர் 11ஆம் அதிகாரம் முழுவதுமாக விசுவாச வீரர்களைக் குறித்தும், அவர்கள் எப்படி வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை விசுவாசித்தார்கள் என்றும் பார்க்கிறோம். “ஆனால்,விசுவாசம் இல்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்” (வ.6).

இந்த வசனத்தை நான் பார்க்கும்போது, பிசாசு இதை எப்படித் தந்திரமாக சொல்லுவான் என்று யோசித்தேன். “அவர்களெல்லாம் விசேஷமானவர்கள், நீ ஒன்றுமில்லாதவன். தேவன் உனக்கென்று ஒன்றும் விசேஷமாக செய்யமாட்டார். உனக்குபோய், அவர் ஏன் செய்ய வேண்டும்?”

பிசாசு சொல்லும் இந்தப் பொய்யை, அநேகர் அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றனர். தேவன், நம் ஒவ்வொருவர்மேலும் அன்புள்ளவராக இருக்கிறார். வேதம் அவரை, நம்முடையத் “தகப்பன்” என்று கூறுகிறது. எந்த ஒரு நல்ல தகப்பனும், தன் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களைத்தான் செய்ய விரும்புவான். உங்களுக்கும், எனக்கும், தேவன் நன்மையையே செய்ய விரும்புகிறார்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை எதிர்பாருங்கள். அநேக அற்புதங்களையும் எதிர்பாருங்கள்.

“முற்போக்கான விசுவாசம்”... “நல்ல” விளைவுகளைக் கொடுக்கும். ஏனென்றால், “நல்லவர்” அதை அனுப்புகிறார். அதை விட்டுவிடாதீர்கள். உங்கள் முற்போக்கான விசுவாசத்திற்கு ஏற்ற விளைவை நீங்கள் காண்பீர்கள்.


அன்புள்ள பரம தகப்பனே, என் அவிசுவாசத்தை எனக்கு மன்னியும். உம்முடைய அற்புதத்தைப் பெற்று அனுபவிக்க நான் தகுதியில்லாதவன் என்று சாத்தான் சொல்லும் பொய்யை நம்பினதற்காக என்னை மன்னியும். நீர் என்னைத் தகுதிப்படுத்தியதால், நான் தகுதியுள்ளவள். நீர் சாத்திய மற்றவைகளின் தேவனாயிருக்கிறபடியால், நான் விட்டு விடாமல் உமக்காக காத்திருக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென். 

Day 25Day 27

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More