மனதின் போர்களம்Sample

தயாரான மனநிலை
எழுத்தாளரான என் நண்பர் ஒருவர், அதிகமான புத்தகங்களை பிரசுரித்துக்கொண்டிருந்தவர், எழுத்தாளர்களுக்காக ஒரு கருத்தரங்கு நடத்தினார். எழுத்து ஊழியத்தை செய்ய கர்த்தரால் அழைப்பை பெற்றவர்களை எப்படியாவது சந்தித்து, அவர்களும், தங்களுடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை பிரசுரிக்கும் அளவை எப்படி அதிகத் தரமுள்ளதாக வெளியிடுவது என்று கற்றுத்தர விரும்பினார்.
முதலில் வந்திருந்தவர்களிடம் எத்தனை வருடங்களாக எழுது கின்றனர் என்றும், ஏதையாவது பிரசுரித்து இருக்கிறார்களா என்றும் கேட்டார். முன்வரிசையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள், நாங்கள் பன்னிரென்டு ஆண்டுகளாக எழுதுகிறோம், ஆனால் ஒன்றையும் பிரசுரித்ததில்லை என்று சொன்னார்கள்.
முதல் சொற்பொழிவு முடிந்த உடனே, அந்த இரு பெண்களில், ஒருவர், “இதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான். நாம் அடுத்த வகுப்பிலிருந்து வரவேண்டியதில்லை”, என்று சொல்வதை என் நண்பர் கவனித்தார். அவர் கற்றுக்கொடுத்தவற்றை, அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஆனால், அவர்கள் கற்றுக்கொண்டதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை. அந்த வகுப்புகளுக்கு வந்தவர்களிலே எவர்கள் ஏற்கனவே பிரசுரிக்கத் தொடங்கிவிட்டார்களோ, அவர்கள்தான் அதிக ஆவலுடன் கற்றுக்கொள்ளுகிற மாணவர்கள் என்றும் வெளிப்படையாக சொல்லிவிட்டார். அப்படிப்பட்டவர்கள், கற்றுக்கொள்ளவும்; தாங்கள் கற்றதில் முன்னேறிச் செல்லவும் விரும்பினார்கள். எனவே, தொடர்ந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தாழ்மையுடன் இருப்பவர்கள்தான், வெற்றியை பெறமுடியும்.
இந்த நிகழ்ச்சியானது, என்னை அப்போஸ்தல நடபடிகளில் உள்ள ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும், சீலாவும் தெசலோனிக்க பட்டணத்தில் பிரசங்கம் பண்ணினார்கள். அங்குள்ள மக்கள், அவர்களை கொல்வதற்கு வகை தேடினார்கள். அவர்கள் தப்பிச் செல்ல, விசுவாசிகள் உதவினார்கள். அங்கிருந்து பெராயாவுக்கு போனார்கள். “அந்த பெராயா பட்டணத்தில் உள்ள மக்கள், தங்கள் சிந்தனைகளில் ஓரளவு தெளிவுள்ளவர் களாயிருந்தார்கள்,” என்று லூக்கா சொல்லுகிறார். பிரசங்கிக்கப்பட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள, அவர்கள் மனம் “தயார் நிலையில்” இருந்தது.அல்லது, வேறு விதமாக சொல்லவேண்டுமானால், அவர்கள் மனமும், சிந்தனையும், தயாரான நிலையில் இருந்தது.
இதன் அர்த்தம்; அந்த மக்கள், தேவனுக்கு தங்கள் மனதை முற்றிலும் திறந்துகொடுத்தவர்களாக; கேட்க இனிமையான செய்தியோ, விரும்பாத செய்தியோ, தேவன் எதைச் சொல்வாரோ, அதைக் கேட்க ஆயத்தமாக, தயார் நிலையில் இருந்தனர்.
ஒரு குழுவாக இருக்கும் விசுவாசிகளைப் பார்த்து, “நீங்கள் ஆயத்தமான மனநிலையோடு இருக்கிறீர்களா?” என்று கேட்டால், உடனே “ஆம்” என்று சொல்லுவார்கள். விசுவாசி என்றாலே, நமக்கு என்ன நினைப்பு என்றால்; நாம் தயாராக, ஆயத்தமாக, திறந்த மனதோடு, கர்த்தர் சொல்லும் காரியத்தை அப்படியே கேட்டு, அவர் சொல்வதற்கு கீழ்ப்படியவும் செய்வோம், என்றுதான் நாம் நினைக்கிறோம்.
நிறைய பேருக்கு, தங்களுடைய மனதுக்கு பிடித்த செய்தியைக் கொடுத்தால், அதைக் கேட்க நான் தயார் நிலையில் இருக்கிறேன் என்பார்கள். அவர்களுக்குப் பிடிக்காத செய்தியைக் கேட்டால், தெசலோனிக்க மக்களைப் போல் பிரசங்கியாரை கொன்றுபோட மாட்டார்கள், ஆனால், “ஓ, இந்த செய்திதானே, எங்களுக்கு எல்லாம் தெரியும்,” என்று சொல்லி, கேட்பதை நிறுத்திவிடுவார்கள்.
நம்முடைய மனமும், சிந்தனையும், “தயார்நிலையில்” இருக்கவேண்டும் என்பதின் அர்த்தம்தான் என்ன? பிசாசு சொல்லும் ஒவ்வொரு பொய், மற்றும் வஞ்சகத்திலிருந்து, முற்றுமாக திரும்பிவிட வேண்டும் என்றுதான் அர்த்தம். “நான் தவறு செய்துவிட்டேன்,” என்று சொல்ல முன்வரவேண்டும். நாம் விரும்பியதை மட்டும் கேட்கிறவர்களாயில்லாமல், எது நமக்கு தேவையோ அதைக் கேட்கவேண்டும் என்று அர்த்தம்.
“தயார் நிலை” என்பது, நாம் கேட்கும் குரலை, ஆரம்பத்திலிருந்தே பகுத்தறிவதாகும். நம்மை சந்தோஷப்படுத்தி, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைத்தான் நாம் கேட்க விரும்புவோம். ஆனால், நம்முடைய தவறுகளை உணர்த்தும் வார்த்தைகளை நாம் கேட்க விரும்புவதில்லை. சாத்தானின் தந்திரங்களில் ஒன்று, “செய்தி முக்கியமல்ல, இதுதான் ஏற்கனவே தெரியுமே,” என்று நம்மை நம்பச் செய்வதுதாகும். செய்தியே சரியல்லை என்று கூட அவன் சொல்லுவான். அவன் அப்படி செய்வதின் மூலம், நாம் எதைக் கேட்டு விடுதலையை பெறவேண்டுமோ, அதைக் கேட்காதபடி, தடுத்துவிடுவதுதான் அவன் வேலை.
உதாரணத்திற்கு, ஒரு நாள், ஒரு பாஸ்டர் தன் சபையிலே வம்பு பேசுவதைக் குறித்து பிரசங்கித்தார். அவருடைய சபையிலே வம்புக்காரியான ஒரு பெண்ணை நோக்கியே அந்த செய்தியைக் கொடுத்தார். அவளுக்கு மற்றவர்களைப் பற்றி கதைகட்டிவிடுவதில் அலாதி பிரியம். தானே கற்பனை செய்துகொண்டு இல்லாதவைகளைப் பேசுவாள். ஆராதனை முடிந்தவுடன், அந்தப் பெண் நேராக பாஸ்டரிடம் வந்து, “இது மிகவும் அருமையான செய்தி. நம் சபையில் உள்ளவர்களில் அநேகர் இதை அவசியம் கேட்கவேண்டும்,” என்று சொன்னாள்.
பாஸ்டரோ, “அவள் ஏதோ கேலியாகவோ, மாய்மாலமாகவோ, அதைச்சொல்லவில்லை, அவளுக்கு அந்த செய்தி மண்டையில் ஏறவில்லை,” என்று அவளைக் குறித்து சொன்னார். அவளுக்கு மனதில் அப்படிப்பட்ட ஒரு “தயார் நிலை” இல்லை. அந்த கிருபையின் செய்தி, தேவனுடைய உதவியை பெறும் செய்திக்கு, அவள் தன் உள்ளத்தை திறந்து ஏற்றுக்கொள்ள மனமில்லை. அவளுக்கு அந்த செய்தி தேவை என்றே தோன்றவில்லை. ஒரு “தயாரான மனநிலையோடு” இருப்பது சுலபமல்ல. உண்மையாக சொல்லவேண்டுமானால்; எந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இடைபடவேண்டும் என்று மும்முரமாக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு சாத்தான், “இதெல்லாம் நமக்கு தெரியும், நாம் கேட்கவேண்டியது இதுவல்ல,” என்று சொல்லி, நம்மை நம்ப வைப்பான்.
பரிசுத்தமுள்ள தேவனே, எனக்கு ஒரு “தயாரான மனநிலையைத்” தாரும். நான் சுலபமாக, தெளிவாக உம்முடைய சத்தத்தை கேட்க எனக்கு உதவி செய்யும். “ஆம், கர்த்தாவே,” உம்முடைய ஆவியானவர் சொல்லும் காரியம் எதுவாக இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் உம்மைப் பிரியப்படுத்தும்படி, தயார் நிலையிலுள்ள மனதை, சிந்தையை எனக்குத் தாரும், இயேசுவின் நாமத்தினால் இதைக் கேட்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More