YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 10 OF 100

நம்முடைய கனியினால் அறியப்படுவோம்

டாரதி என்று நான் அழைக்கும் ஒரு பெண், சபையின் காரியங்கள், ஒவ்வொரு அங்கத்தினர் மற்றும் விருந்தினர்களைக் குறித்து, மற்றவர்களை விட அதிகமாய் தெரிந்து வைத்திருந்தாள். அவள் வாயாடி என்று சபையில் பெயர் பெற்றவள்.

“அவளைக் குறித்து ஒரு விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் குறை காணாமல், எல்லோரைப்பற்றியும் தாராளமாகப் பேசுவாள். அவள் ஒரு வேளை பரலோகம் போனாலும், தேவன் முதலாவது அவள் நாவை வெட்ட வேண்டியதாயிருக்கும்,” என்று ஒரு நண்பர் சொல்லி சிரித்தார்.

மூப்பர் ஒருவரைக் குறித்து, பலரிடம் டாரதி பேசிக்கொண்டு இருந்ததை, ஒரு நாள் நான் கதவருகில் நின்று கேட்டேன். “அவரை நியாயம் தீர்க்க நான் யார்,” என்று அவள் சொன்னாள். வாயிலிருந்து விஷயத்தைக்கக்குவது போல, அவள் மேலும் பலரையும் பழித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் பேசினதைக் கேட்டு, ஒன்றை நான் உணர்ந்தேன். தன்னுள்ளத்தில் உள்ளவைகளைத்தான், அவள் பேசிக்கொண்டிருந்தாள். வேறு ஒன்றையும் நான் புரிந்துகொண்டேன். அவள் தன்னிலே தானே விரக்தியடைந்து, தன்னையே குறை சொல்லி வாழும் போது, மற்றவர்களைக் குறித்து அவள் எப்படி நன்றாக பேச முடியும்?

பிறரைக் குறித்து இனிமேலும் தீமையாய் பேசாமால், நன்மையாகவே பேச வேண்டும் என்று பலர் அடிக்கடி தீர்மானிக்கின்றனர். அவர்கள் இதற்கு உண்மையாக முயற்சி எடுத்தாலும், எதுவும் மாறுகிறதில்லை. இவர்கள் தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்ளாமல், தங்களுடைய பேச்சை மாத்திரம் மாற்ற முயற்சிக்கிறதினாலேயே, இப்படியே இருக்கின்றனர். இது தவறான முனையில் ஆரம்பமாகிறதினாலே வரும் விளைவு. மாறாக அவர்கள், “எனக்குள்ளே என்ன நடக்கிறது?” என்று தங்களுக்குள்ளே அவர்கள் நோக்கிப் பார்க்க வேண்டும்.

“இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்”, என்று இயேசு சொன்னார். இந்த வார்த்தைகளை நான் சிந்தித்தபோது, டாரதியின் மேல் மனதுருகினேன். குற்றம்சாட்டும் கடுமையான சிந்தனைகளால் சாத்தான் அவளுடைய மனதை நிரப்ப, அவள் இடங்கொடுத்திருந்தாள். அவள் தன்னைப் பற்றி அதிகமாய் பேசாமல் இருந்தாலும், அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளினால், அவள் மற்றவர்களை மட்டுமல்ல; தன்னையும் எந்த அளவுக்கு வெறுத்தாள் என்பது தெளிவாக இருந்தது.

மரம், அதின் கனியினாலே அறியப்படும் என்று இயேசு சொன்னார். நம்முடைய வாழ்க்கையிலும் இது உண்மை. ஒரு சிந்தைனையில் தான் எல்லாமே ஆரம்பமாகின்றன. எதிர்மறையான, அன்பற்ற சிந்தனைகளால் நம்முடைய மனதை நிறைக்க நாம் இடமளித்தால்; அதற்கேற்ற கனிகள் தான் வெளிப்படும். தீமையானவைகளையே நாம் சிந்தித்துக்கொண்டிருந்தால், நாம் கெட்ட கனிகளைத் தான் கொடுப்போம்.

ஜனங்களை நாம் சற்று கவனித்துப் பார்த்தால், அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் கனிகளை நாம் எளிதாகக் காணமுடியும். நல்ல அல்லது கெட்ட கனிகளை, அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அவரவர்களுக்குள் இருப்பதின் விளைவித்தான், அவர்கள் கனிகளாக வெளிப்படுத்துகிறார்கள். ஒருவருடைய உரையாடலை கொஞ்சம் கவனித்தாலே, அவருடைய சுபாவத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். மற்றவர்களிடம், நாம் அன்புடன் பேசி, பழகுகிறோம் என்றால், நம்முடைய சிந்தனையும் அன்புள்ளதாகவே இருக்கிறது என்று அர்த்தம்.

தேவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறார் என்று நான் விசுவாசித்து, தினமும் அவருடன் சந்தோஷமாக நான் ஐக்கியம் கொள்ளும் போது, என்னுடைய இருதயத்தில் நான் நல்ல விதைகளை விதைக்கிறேன். எந்த அளவுக்கு நல்ல விதைகளை விதைக்கிறேனோ, அந்த அளவுக்கு நல்ல கனிகளை நான் கொடுப்பேன். எந்த அளவுக்கு நல்ல, அன்புள்ள சிந்தனைகளை நான் நினைக்கிறேனோ, அந்த அளவுக்கு அதிகமாக நான் மற்றவர்களையும் நல்லவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும், நான் காணுவேன்.

“இருதயத்தின் நிறைவினால்தான் வாய் பேசும்”, அன்புள்ள அல்லது அன்பற்ற வார்த்தைகள் எதுவானாலும், அவைகள் தானாய் வருவதில்லை. நம்முடைய மனதில் இவைகள் தோன்றியிருப்பதின் விளைவாக, நம்முடைய வாயிலிருந்து இவைகள் வெளியே வருகின்றன. எந்த அளவுக்கு ஆவியானவருடைய முற்போக்கான, அன்புள்ள சிந்தனைகளுக்கு நாம் இடம் கொடுக்கிறோமோ, எந்த அளவுக்கு அதிகமாக ஜெபிக்கிறோமோ, வேதம் வாசிக்கிறோமோ அந்த அளவிற்கதிகமாக, நல்ல கனிகளை நமக்குள் கொடுப்போம். நாம் மற்றவரிடம் எப்படி நடந்துக்கொள்ளுகிறோமோ, அதன் மூலம் இந்த கனிகள் வெளிப்படும்.


மன்னிக்கும் அன்புள்ள தேவனே, மற்றவர்களைக் குறித்த கடுமையாய் சொன்ன வார்த்தைகளுக்காக என்னை மன்னியும். என்னுடைய இருதயத்தை; என்னைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் தீமையான எண்ணங்களால் நிறைத்ததற்காக என்னை மன்னியும். இதைவிட அன்பாக இருக்க எனக்கு இயலாது, ஆனால் உம்மால் என்னை மாற்ற முடியும். ஆரோக்கியமுள்ள, முற்போக்கான சிந்தனைகளால் என்னை நிறைக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.

Day 9Day 11

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More