BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek
இன்றைய வாசிப்பைத் தொடங்குவதற்கு முன், ஏசாயா 53-இன் பாடுபடும் ஊழியராக மாறுவதன் மூலம் இஸ்ரவேல் மீது தனது ஆளுகையை உறுதிப்படுத்த இயேசுவின் ஆச்சரியமான திட்டத்தை லூக்கா வெளிப்படுத்தும் அதிகாரம் ஒன்பதை மீண்டும் பார்ப்போம். எலியாவும் மோசேயும் இயேசுவின் புறப்பாடு அல்லது "யாத்திரை" பற்றி எப்படி பேசுகிறார்கள் என்பதை லூக்கா நமக்குச் சொல்கிறார். அவர் புதிய மோசே ஆவார், அவர் தனது யாத்திரையின் மூலம் (மரணம்), இஸ்ரவேலை அதன் அனைத்து வடிவங்களிலும் பாவத்தின் மற்றும் தீமைகளின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிப்பார். இந்தக் குழப்பமான வெளிப்படுத்தலுக்குப் பிறகு, பஸ்காவிற்காக தலைநகருக்கு இயேசுவின் நீண்ட பயணத்தின் காரியத்தை லூக்கா தொடங்குகிறார், அங்கு அவர் இஸ்ரவேலின் உண்மையான ராஜாவாக முடிசூடப்பட்டு மரணிப்பார்.
ஆகவே, இன்று 22 ஆம் அதிகாரத்திற்குத் திரும்பும்போது, வருடாந்திர பஸ்கா பண்டிகையைக் கொண்டாட இயேசு எருசலேமுக்கு வந்திருப்பதைக் காண்கிறோம்──இதுஇஸ்ரவேலைஅடிமைத்தனத்திலிருந்துதேவன்எவ்வாறுவிடுவித்தார்என்பதைக்கொண்டாடும்ஒருயூதவிடுமுறை. பாரம்பரியபஸ்கா பண்டிகைக்காகஇயேசுபன்னிரண்டு சீடர்களுடன் கூடிவருகையில், அப்பம் மற்றும் கோப்பையின் குறியீட்டு அர்த்தத்தை அவர் தம்முடைய சீஷர்கள் இதற்கு முன்பு கேள்விப்படாத வகையில் விளக்குகிறார், ஆனால் யாத்திராகம சம்பவத்தை எப்போதும் சுட்டிக்காட்டியது. பிட்ட அப்பம் தன் உடலையும், திராட்சை இரசம் அவருடைய இரத்தத்தையும் குறிக்கிறது என்று அவர் தம் சீடர்களிடம் கூறுகிறார், இது தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கை உறவை ஏற்படுத்தும். இதில், இயேசு பஸ்காவின் அடையாளங்களை தனது வரவிருக்கும் மரணத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த பயன்படுத்துகிறார், ஆனால் அவருடைய சீஷர்களுக்கு அது புரியவில்லை. தேவனுடைய ராஜ்யத்தில் யார் பெரியவர் என்று அவர்கள் உடனடியாக மேஜையில் விவாதிக்கத் தொடங்குகிறார்கள், அன்றிரவு அவர்கள் இயேசுவோடு ஜெபிக்க கூட விழித்திருக்கவில்லை. பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் இயேசுவின் கொலையில் ஒரு கூட்டாளியாகிறார், மற்றொரு சீடர் தான் இயேசுவை ஒருபோதும் அறிந்ததில்லை என்று மறுதலிக்கிறார்.
Kutsal Yazı
Okuma Planı Hakkında
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More