BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 21. gün

இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரலோகத்துக்கு ஏறியது பற்றிய ஆரம்பகாலப் பதிவுகளில் ஒன்றை எழுதியவர் லூக்கா, இந்தப் பதிவை லூக்காவின் சுவிஷேசம் என்று அழைக்கிறோம். ஆனால் லூக்காவிற்கு இரண்டாவது தொகுதியும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை அப்போஸ்தலருடையநடபடிகள் புத்தகமாக நாம் அறிவோம். அது, உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்கு ஏறியபின், தம்முடைய ஜனங்களில் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தொடர்ந்து என்ன செய்கிறார், போதிக்கிறார் என்பது பற்றியதாகும்.

சீஷர்களுக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவிற்கும் இடையிலான சந்திப்புடன் லூக்கா அப்போஸ்தலருடையநடபடிகள்தொடங்குகிறார். பல வாரங்களாக, இயேசு தம் தலைகீழான ராஜ்யத்தைப் பற்றியும், அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் அவர் தொடங்கிய புதிய படைப்பு பற்றியும் அவர்களுக்குத் தொடர்ந்து போதிக்கிறார். சீஷர்கள் சென்று அவருடைய போதனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு புதிய வகையான வல்லமையைப் பெறும் வரை காத்திருக்கும்படி இயேசு சொல்கிறார், இதனால், இயேசுவின் ராஜ்யத்திற்கு உண்மையுள்ள சாட்சிகளாக இருக்க அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வைத்திருக்க முடியும். அவர்களுடைய ஊழியப்பணி எருசலேமில் தொடங்கி, பின்னர் யூதேயா மற்றும் சமாரியாவிற்கும், அங்கிருந்து எல்லா நாடுகளுக்கும் வெளியே செல்லும் என்று அவர் கூறுகிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் முக்கிய கருப்பொருளும் வடிவமைப்பும் இந்தத் தொடக்க அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. தம்முடைய ராஜ்யத்தின் அன்பிலும் சுதந்திரத்திலும் வாழ எல்லா தேசங்களையும் அழைக்க இயேசு தம்முடைய ஆவியினால் தம் மக்களை வழிநடத்தியது பற்றிய சம்பவம் இது. முதல் ஏழு அதிகாரங்கள் எருசலேமில் அழைப்பு எவ்வாறு பரவத் தொடங்கும் என்பதைக் காட்டுகிறது. அடுத்த நான்கு அதிகாரங்கள் யூதரல்லாத அண்டை பகுதிகளான யூதேயா மற்றும் சமாரியாவுக்குச் சுவிஷேசம் எவ்வாறு பரவுகிறது என்பதைக் குறிக்கிறது. இயேசுவின் ராஜ்யத்தின்சுவிஷேசம் எவ்வாறு உலகத்தின் எல்லா தேசங்களையும் அடையத் தொடங்குகிறது என்பதை 13 ஆம் அதிகாரத்திலிருந்து லூக்கா சொல்கிறார்.

Gün 20Gün 22

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More