BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 25. gün

ராஜ்யத்தின் செய்தி எருசலேம் முழுவதும் பரவுகிறது, சீடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தலைவர்கள் தேவை, ஆகவே அப்போஸ்தலர்கள் தொடர்ந்து இயேசுவின் செய்தியைப் பகிர்ந்துகொள்வதால் ஸ்தேவான் என்ற மனிதன் ஏழைகளுக்கு சேவை செய்ய முன்வருகிறான். தேவனுடைய ராஜ்யத்தின் வல்லமையை ஸ்தேவான் நிரூபிக்கிறான், பல யூத ஆசாரியார்கள் இயேசுவை விசுவாசித்து, பின்பற்றத் தொடங்குகிறார்கள். ஆனால் ஸ்தேவானை எதிர்க்கும் மற்றும் வாதிடும் பலர் இன்னமும் உள்ளனர். ஸ்தேவானின் பதில்களின் புத்திசாலித்தனத்தை அவர்களால் கையாள முடியவில்லை, எனவே மோசேயை அவமதித்ததாகவும், ஆலயத்தை அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்ட பொய்யான சாட்சிகளைத் தேடினர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அவரை அவர்கள் தவறாக நடத்தியது ஒரு கணிக்கக்கூடிய முறையைப் பின்பற்றுகிறது என்பதைக் காட்ட பழைய ஏற்பாட்டின் சம்பவத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு வல்லமைவாய்ந்த உரையை ஸ்தேவான் அளிக்கிறான். யோசேப்பு மற்றும் மோசே போன்ற கதாபாத்திரங்களையும், தங்கள் சொந்த மக்களால் மறுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களையும் அவன் எடுத்துக்காட்டுகிறான். இஸ்ரவேல் பல நூற்றாண்டுகளாக தேவனின் பிரதிநிதிகளை எதிர்த்து வருகிறது, எனவே அவர்கள் இப்போது ஸ்தேவானை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. இதைக் கேட்டு மதத் தலைவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் அவனை பட்டணத்திலிருந்து துரத்திச் சென்று கற்களை எறிந்து கொன்றார்கள். ஸ்தேவான் கற்களால் அடிப்பட்டு துடிக்கப்படுகையில், அவன் மற்றவர்களின் பாவங்களால் அவதிப்பட்ட இயேசுவின் வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். "ஆண்டவரே, இவர்களுக்கு எதிராக இந்தப் பாவத்தை சுமத்த வேண்டாம்" என்று கூக்குரலிடுகையில் ஸ்தேவான் பலஇரத்த சாட்சிகளில் முதல்வராகிறான்.

Gün 24Gün 26

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More