BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 28. gün

அப்போஸ்ருடைய நடபடிகளில் இந்தக் கட்டத்தில், யூதரல்லாத மக்கள் வர்த்தக பட்டணமான அந்தியோகியாவில் இயேசுவை ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளதைப் பற்றி புதிய அறிக்கைகள் வருகின்றன. ஆகவே, எருசலேமில் உள்ள சீஷர்கள் பர்னபா என்ற மனிதனை விஷயங்களைச் சரிபார்க்க அனுப்புகிறார்கள். அவர் அந்தியோகியாவுக்கு வரும்போது, உலகெங்கிலும் உள்ள பல மக்கள் இயேசுவின் வழியைக் கற்றுக்கொண்டதைக் காண்கிறான். பல புதிய விசுவாசிகள் மற்றும் செய்ய வேண்டியவை ஏராளமாக இருந்தது, எனவே பர்னபா சவுலை அவருடன் அந்தியோகியாவில் ஒரு வருடம் உபதேசிக்க வருமாறு நியமிக்கிறான்.

அந்தியோகியா என்பது இயேசுவைப் விசுவாசிக்கிறவர்களை முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் இடம், அதாவது “கிறிஸ்துவினுடைய” என்பதாகும். அந்தியோகியாவில் உள்ள தேவாலயம் முதல் சர்வதேச இயேசு சமூகமாகும். திருச்சபை இனி முக்கியமாக ஜெருசலேமில் இருந்து வந்த மேசியானிய யூதர்களைக் கொண்டிருக்கவில்லை; இது இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒரு பல இன சுவிஷேசம் ஆகும். அவர்களின் தோல் நிறங்கள், பாஷைகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டவை, ஆனால் அவர்களின் விசுவாசம் ஒன்றே, எல்லா தேசங்களின் ராஜா, சிலுவையில் அறையப்பட்ட மற்றும் உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவிஷேசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் தேவாலயத்தின் செய்தியும் அவர்களின் புதிய வாழ்க்கை முறையும் சராசரி ரோம குடிமகனுக்கு குழப்பமானதாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ரோம சாம்ராஜ்யத்தின் கைப்பாவை ராஜாவான ஏரோது ராஜா கிறிஸ்தவர்களை தவறாக நடத்தி கொலை செய்ய தொடங்குகிறான். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது சில யூதத் தலைவர்களை மகிழ்விப்பதை ராஜா எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவர் தொடர்ந்து அதைச் செய்கிறார், இது இறுதியில் பேதுருவைக் கைது செய்வதற்கு வழிவகுக்கிறது. பேதுருவின் வாழ்க்கை மரணத்தின் விளிம்பில் உள்ளது, ஆனால் அவனது நண்பர்கள் அவனை விடுவிக்க வேண்டும் என்று ஆவலுடன் ஜெபிக்கிறார்கள். ஏரோது வஞ்சகக் கூட்டத்திற்கு பேதுருவைக் கொடுக்கத் திட்டமிட்டதற்கு முந்தைய நாள் இரவு, ஒரு தேவதூதன் அவனது சிறை அறைக்குள் சென்று, அவனது சங்கிலிகளை உடைத்து சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றான்.

Gün 27Gün 29

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More