BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 32. gün

ரோம பேரரசு முழுவதும் பவுலின் சுவிஷேச பயணம் பற்றி லூக்கா தொடர்ந்து கூறுகிறார். அவன் பயணிக்கையில், இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தை தைரியமாகப் பகிர்ந்து கொள்கிறான், மேலும் பவுலின் செய்தியை அவர்களின் ரோம வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக பலர் கேட்கிறார்கள். ஆனால் பவுலின் செய்தியை ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் ஒரு நல்ல செய்தியாக இறுதியில் அங்கீகரிக்கும் மற்றவர்களும் உள்ளனர். உதாரணமாக, பிலிப்பியைச் சேர்ந்த ஒரு சிறைச்சாலைக்காரனை பற்றி லூக்கா சொல்கிறார். பவுல் மற்றும் சீலாவின் தவறான சிறைவாசத்தின் சம்பவத்தை வாசிக்கும்போது அவனைச் சந்திக்கிறோம்.

பட்டணம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், பவுலும் அவனது சக ஊழியரான சிலாவும் அநியாயமாக அடித்து சிறையில் தள்ளப்படுகிறார்கள். நொறுக்கப்பட்டு இரத்தக்களரியாக தங்கள் அடைக்கப்பட்ட அறையில் விழித்திருந்து, அவர்கள் தேவனிடம் ஜெபிக்கவும் துதிக்கவும் ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெரிய பூமி அதிர்ச்சி சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை மிகவும் கடுமையாக அசைக்கும்போது கைதிகள் தங்கள் ஆராதனை பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், இதனால் கைதியின் சங்கிலிகள் உடைந்து சிறைக் கதவுகள் அனைத்தும் திறந்து பறக்கின்றன. சிறைச்சாலைக்காரன் இதைப் பார்த்து, கைதியை தப்பிக்க அனுமதித்ததற்காக அவன் தூக்கிலிடப்படுவான் என்பதை அறிவான், எனவே வாழ்க்கையை வெறுத்து, தனது பட்டயத்தை உருவி தன்னைக் தானே கொலைசெய்து கொள்ளப்போனான். ஆனால் பவுல் சரியான நேரத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அவனைத் தடுக்கிறான். இந்த நேரத்தில், கடின மனமுடைய சிறைச்சாலைக்காரன் மனதுருகி பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக கீழே விழுகிறான். தனது உயிரையும் நித்தியமாகக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவன் உணர்கிறான், மேலும் அந்த வழியை அறிய விரும்புகிறான். பவுலும் சீலாவும் அவனுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், அன்றே சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் இயேசுவை விசுவாசிக்க தொடங்குகிறார்கள்.

Gün 31Gün 33

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More