BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 37. gün

பவுல் தன்னைப் பாதுகாக்க மதத் தலைவர்களின் சபை முன் நிற்கிறான். கடுமையாக குறுக்கிடப்பட்டு பின், பிரதான ஆசாரியரை வேறொருவருக்காக தவறாகப் புரிந்துகொண்ட பிறகு, விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்று பவுல் பார்த்து, அடுத்து என்ன செய்வது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். சபை இரண்டு மதப் பிரிவுகளாகப் பிரிவதை அவன் காண்கிறான்: சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள். சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் அல்லது தேவதூதர்கள் போன்ற ஆவிக்குரிய உண்மைகளை விசுவாசிக்கவில்லை, அதே நேரத்தில் பரிசேயர்கள் சட்டத்தை மிகவும் கண்டிப்பாக விளக்குகிறார்கள், மேலும் சதுசேயர்கள் மறுக்கும் ஆவிக்குரிய உண்மைகளை பற்றி ஆர்வமாக உள்ளனர். சபைக்கு இடையேயான பிளவை பவுல் தன்னிடமிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஒரு வாய்ப்பாகக் கருதுகிறான், மேலும் தான் ஒரு பரிசேயன் என்று கூச்சலிடத் தொடங்குகிறான், மேலும் இறந்தவர்களின் உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்திற்காக உபத்திரவத்தில் இருக்கிறான்.

இந்த நேரத்தில், ஒரு நீண்டநேர விவாதம் வெடிக்கிறது. இது முதலில் செயல்படுவதாகத் தெரிகிறது, பரிசேயர்கள் கூட பவுலைக் காக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் கொஞ்ச நேரத்தில், விவாதம் மிகவும் சூடாகிறது, பவுலின் ஜீவன் மீண்டும் ஆபத்தில் உள்ளது. அவன் அந்த வன்முறையிலிருந்து விலக்கப்பட்டு ரோம தளபதியால் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளான். அடுத்த நாள் இரவு, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பவுல் உண்மையில் இயேசுவின் விஷயத்தை ரோமுக்குக் கொண்டு வருவார் என்று கூறி ஊக்குவிப்பதற்காக பவுல் அருகில் நிற்கிறார். ஆகவே, காலையில், 40-க்கும் மேற்பட்ட யூதர்கள் அவனைப் பதுங்கியிருந்து கொல்ல சதி செய்கிறார்கள் என்று பவுலின் சகோதரியின் குமாரன் அவனிடம் சொல்லும்போது, தன்னை நிலைநிறுத்த பவுலுக்கு அதிக ஆறுதலான வார்த்தை இருக்கிறது. பவுலின் ஊழியப்பணியை முடிப்பதற்கு பதுங்கித் தாக்கி வெற்றி பெற முடியாது. இயேசு சொன்னதைப் போலவே அவன் ரோமைக் காண வாழ்வான். நிச்சயமாக, சதித்திட்டத்தைத் தடுத்து நிறுத்த எச்சரிக்கை சரியான நேரத்தில் தளபதியை அடைகிறது. பவுல் தனது பாதுகாப்பான வருகையை உறுதிப்படுத்த 400-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆட்களுடன்

செசேரியாவுக்கு அனுப்பப்படுகிறான்.

Gün 36Gün 38

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More