BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 38. gün

பவுல் செசேரியாவுக்கு வரும்போது, அவன் ஆளுநர் பெலிக்ஸ் முன் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். பவுல் தனது வழக்கை முன்வைக்கிறான், அவன் இஸ்ரவேலின் தேவனை விசுவாசிக்கிறான் என்றும், அவன்மீது குற்றம் சாட்டியவர்களின் உயிர்த்தெழுதலின் அதே நம்பிக்கையில் பங்கு கொள்கிறான் என்றும் சாட்சியமளிக்கிறான். பெலிக்ஸ் அந்த மனிதனைத் தண்டிக்க எந்தக் காரணத்தையும் காணவில்லை, ஆனால் அவனுக்கு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை, எனவே அவன் இரண்டு வருடங்கள் சட்ட காரணமின்றி அவனைக் காவலில் வைத்திருக்கிறான். பவுல் காவலில் இருக்கும் நாட்கள் முழுவதும், பெலிக்ஸின் மனைவி பவுலிடமிருந்தும் இயேசுவைப் பற்றி சொல்ல கேட்கிறாள். பெலிக்ஸும் கேட்க வருகிறான், இயேசுவின் ராஜ்யத்தின் தாக்கங்களால் பயப்படுகிறான். அவன் விவாதத்தைத் தவிர்க்கிறான், ஆனால் அவனிடமிருந்து லஞ்சமாகப் பணம் பெறலாம் என்ற நம்பிக்கையில் பவுலை திரும்பத் திரும்ப வரவழைக்கிறான். இறுதியாக பெலிக்ஸுக்கு பதிலாக பொர்க்கியுபெஸ்து மாற்றப்படுகிறான், மேலும் பவுலின் வழக்கு அவனது மரணத்தை நாடும் யூதர்கள் முன் மீண்டும் வருகிறது. பவுல் மீண்டும் குற்றமற்றவன் என்று கூறுகிறான், அதற்கு பதிலளிக்கும் விதமாக, விசாரணையை எருசலேமுக்கு மாற்ற அவன் தயாரா என்று பொர்க்கியுபெஸ்து கேட்கிறான். ஆனால் பவுல் அதற்கு உடன்படவில்லை, ராயனுக்கு முன் ரோமில் விசாரிக்கப்பட வேண்டும் என்று முறையிடுகிறான். பெஸ்து அவனது கோரிக்கைக்கு அனுமதிளிக்கிறான். இப்போது இயேசு சொன்னது போலவே (அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11),பவுல் இயேசுவின் சுவிஷேசத்தை ரோமுக்கு கொண்டு வருவான்.

Gün 37Gün 39

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More