BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 34. gün

யூதர்களுக்கும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் மேசியாவான ராஜா இயேசு என்று அறிவித்ததற்காக பவுல் தொடர்ந்து அடித்து, சிறையில் அடைக்கப்பட்டார் அல்லது பட்டணங்களை விட்டு விரட்டப்படுகிறார் என்று லூக்கா சொல்கிறார். பவுல் கொரிந்துக்கு வரும்போது, அவன் மீண்டும் துன்புறுத்தப்படுவான் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் இயேசு பவுலை ஆறுதல்படுத்தி, ஒரு இரவு அவனை ஒரு தரிசனத்தில் சந்தித்து, “நீ பயப்படாமல் பேசு மவுனமாயிராதே . நான் உன்னுடனே கூட இருக்கிறேன். உனக்கு தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை இந்த பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு” என்கிறார் பவுல் ஒன்றரை வருடம் முழுவதும் பட்டணத்தில் தங்கியிருக்கவும், வேதவசனங்களிலிருந்து போதிக்கவும், இயேசுவைப் பற்றி பகிர்ந்து கொள்ளவும் முடியும். இயேசு சொன்னது போல் மக்கள் பவுலைத் தாக்க முயற்சிக்கும்போது, அவர்கள் வெற்றிபெறவில்லை. உண்மையில், பவுலுக்கு தீங்கு செய்ய முயன்ற தலைவன் அதற்குப் பதிலாக தாக்கப்படுகிறான். பவுல் கொரிந்துவிலிருந்து விரட்டப்படவில்லை, ஆனால் நேரம் சரியாக இருக்கும்போது, சிசேரியா, அந்தியோக்கியா, கலாத்தியா, பிரிகியா மற்றும் எபேசுவில் வாழ்ந்த சீஷர்களை வலுப்படுத்த அவர் புதிய நண்பர்களுடன் பட்டணத்திலிருந்து செல்கிறான்.

எபேசுவில், பவுல் புதிதாக இயேசுவை விசுவாசிப்பவர்களை பரிசுத்த ஆவியின் பரிசாக அறிமுகப்படுத்துகிறான், மேலும் அவன் ஓரிரு ஆண்டுகள் போதிக்கிறான், ஆசியாவில் வாழும் அனைவருக்கும் இயேசுவைப் பற்றிய சுவிஷேசத்தைபெருக்கினான். பல மக்கள் அற்புதமாக குணமடைந்து விடுவிக்கப்படுவதால் ஊழியம் செழித்தோங்கி வருகிறது, இதனால் பலர் மாய மந்திரத்திலிருந்து விலகி, இயேசுவை விசுவாசிப்பதற்காக தங்கள் சிலைகள் வழிபாட்டை விட்டுவிடுவதால் பட்டணத்தின் பொருளாதாரம் மாறத் தொடங்குகிறது. உருவ வழிபாட்டிலிருந்து லாபம் ஈட்டும் உள்ளூர் வியாபாரிகள் வருத்தமடைந்து, தங்கள் தெய்வத்தைப் பாதுகாக்கவும், பவுலின் பயணத் தோழர்களுக்கு எதிராகப் போராடவும் கூட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். பட்டணம் குழப்பத்தில் தள்ளப்படுகிறது, ஒரு பட்டண அதிகாரி தலையிட்டு பேசும் வரை கலவரம் தொடர்கிறது.

Gün 33Gün 35

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More