BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 22. gün

இயேசு பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் ஒன்றாக இருந்ததாக லூக்கா சொல்கிறார். இது ஒரு பண்டைய இஸ்ரேலிய வருடாந்திரப் பண்டிகையாகும், அதைக் கொண்டாட ஆயிரக்கணக்கான யூத யாத்ரீகர்கள் எருசலேமுக்கு பயணம் செய்தனர். இந்த நிகழ்வின் போது, இயேசுவின் சீஷர்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அப்போது திடீரென காற்று வீசும் சத்தம் அறையில் நிரம்பியது, அவர்கள் அனைவரின் தலையிலும் அக்கினி ஜுவாலை சுற்றுவதைக் கண்டார்கள். இந்த விசித்திரமான மனக்காட்சி எதைப் பற்றியது?

இங்கே, லூக்கா மீண்டும் மீண்டும் பழைய ஏற்பாட்டின் கருத்தை வலியுறுத்துகிறார், அங்கு தேவனின் பிரசன்னமும் அக்கினியாகத் தோன்றுகிறது. உதாரணமாக, தேவன் சீனாய் மலையில் இஸ்ரவேலுடன் ஒரு உடன்படிக்கை செய்தபோது, அவருடைய பிரசன்னம் மலையின் உச்சியில் ஜொலித்தது (யாத்திராகமம் 19:17-18). இஸ்ரவேலின் மத்தியில் வாழ கூடாரத்தை நிரப்பியபோது தேவனின் பிரசன்னம் அக்கினித் தூணாகத் தோன்றியது (எண்ணாகமம் 9:15). ஆகவே, தேவனின் பிள்ளைகளைப் பார்க்க அக்கினி வருவதை லூக்கா விவரிக்கும்போது, நாம் அந்த வடிவத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் மட்டுமே, ஒரு மலை அல்லது ஒரு கட்டிடத்தின் மேல் உள்ள ஒரு தூணில் தோன்றுவதற்குப் பதிலாக, அக்கினி பலரின் மேல் அக்கினி ஜூவாலையாக சிதறுகிறது. இது குறிப்பிடத்தக்க ஒன்றை தெரிவிக்கிறது. சீஷர்கள் புதிய நடமாடும் ஆலயங்களாக மாறி வருகிறார்கள், அங்கு தேவன் குடியிருந்து தம்முடைய சுவிஷேசத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

தேவனின் பிரசன்னம் இனி ஒரு தனி இடத்தில் மட்டும் இருக்காது. அது இப்போது இயேசுவை சார்ந்து இருக்கும் மனிதர்களுக்குள் இருக்கலாம். இயேசுவின் சீஷர்கள் தேவனின் அக்கினியைப் பெற்றவுடன், அவர்கள் முன்பு அறியாத பாஷைகளில் இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தை பேச ஆரம்பித்தார்கள் என்று லூக்கா சொல்கிறார். யூத யாத்ரீகர்கள் அவற்றை சரியாக புரிந்து கொள்ள முடிகிறதென்று திகைக்கிறார்கள். எல்லா தேசங்களையும் ஆசீர்வதிப்பதற்காக இஸ்ரவேலுடன் கூட்டு சேருவதற்கான தனது திட்டத்தை தேவன் இன்னும் கைவிடவில்லை. சரியான நேரத்தில், பெந்தெகொஸ்தே நாளில், இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களிலிருந்தும் பிரதிநிதிகள் எருசலேமுக்குத் திரும்பும் நாளில், சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவாகிய இஸ்ரவேலின் ராஜா, சுவிஷேசத்தை அறிவிக்க அவர் தனது ஆவியை அனுப்புகிறார். இந்தச் செய்தியை ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த பாஷையில் கேட்டு அன்றே இயேசுவைப் விசுவாசிக்க தொடங்கினர்.

Gün 21Gün 23

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More