BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

வரவிருக்கும் பஸ்கா பண்டிகைக்காக இயேசு எருசலேமில் காத்திருக்கையில், தேவனுடைய ராஜ்யத்தின் தன்மை மற்றும் வரவிருக்கும் விஷயங்களைப் பற்றி தினமும் ஆலயத்தில் கற்பிக்கிறார். ஒரு கட்டத்தில், பல ஐசுவரியவான்கள் ஆலயத்தில் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார், ஒரு ஏழை விதவை இரண்டு காசுகளை மட்டுமே போடுகிறாள். ஐசுவரியவான்கள் அவர்களுக்கு தேவைப்படாதவற்றை தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; ஆனால் விதவையோ தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தாள் என்பதை இயேசு அறிகிறார். எனவே அவர், கேட்கும் அனைவரிடமும், "இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகக் கொடுத்தாள்" என்றார்.
பாருங்கள், இயேசு ஐசுவரியவான்களை பெரிய காணிக்கைகளால் மதிக்கும் மற்ற ராஜாக்களைப் போல அல்ல. அவருடைய ராஜ்யத்தில், அதிகமானவற்றைக் கொடுக்க மக்களுக்கு அதிகம் தேவையில்லை. இந்த உலகத்தின் செல்வம் முடிவுக்கு வருவதாகவும், அவருடைய ராஜ்யம் நெருங்கி வருவதாகவும் இயேசு கற்பிக்கிறார், ஆகவே, தம்முடைய சீஷர்களை தங்கள் இருதயங்களை வீணாகவும் கவலையுடனும் இல்லாமல் வைத்திருக்கவும், அதற்கு பதிலாக அவரை வி்சுவாசிக்கவும் அவர் கூறுகிறார் (வசனம். 21:13-19, 34-36).
Kutsal Yazı
Okuma Planı Hakkında

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More