எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் மாதிரி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

5 ல் 5 நாள்

நாள் ஐந்து: அவருடைய உண்மைத்தன்மையை விசுவாசி:

“என்னை விசுவாசிக்கிறாயா?”

இந்த கேள்வி நம்மை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறது, நாம் எழுந்தவுடனிருந்து நாம் படுக்கைக்கு செல்லும்வரை. ஏனென்றால் நம்புவது என்றால் இளைப்பாறுவது, இளைப்பாற நம்பிக்கை வேண்டும்.

யோசித்து பாருங்கள்: உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை காலில்லாத ஒரு நிலையில் நீ நிறுத்த மாட்டாய். எப்போதும் தாமதமாக வரும் ஒரு நபர் கிறிஸ்துமஸ் பலகாரங்களை கொண்டுவரவும் நீ அனுமதிக்க மாட்டாய்.

தெரிந்தோ தெரியாமலோ, நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய பொருட்களையும் மனிதர்களையும் நம்பமுடியுமா என்று அளவிட்டு கொண்டே இருக்கிறோம். நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவிலும் அவ்வாறே செய்கிறோம், அவரிடம் நம்பி எவ்வளவு ஒப்புக்கொடுப்பதென்று பேரம் பேசிக்கொண்டே இருக்கிறோம்.

நம்முடைய நிதி காரியங்களோ, உடைக்கப்பட்ட உறவுகளோ, மறைக்கப்பட்ட காயங்களோ, வருங்கால கனவுகளோ நாம் கடந்த காலத்தில் தேவன் செய்த காரியங்களை பொறுத்தே நிகழ் காலத்தில் ஒப்புக்கொடுக்க அளவிடுகிறோம்.

ஆனால் இந்த கிறிஸ்துமஸ் நாட்களின் போதுதான் நம்முடைய விசுவாசம் அல்லது அவ்விசுவாசம் வெளிப்படுகிறது.

…நாம் நம்மை இனிப்புகளாலும், பலகாரங்களிலும் நிரப்பி கொள்வோம், இயேசுவை ஜீவ அப்பம் என்று நம்பாத வரையில், அவரே நம்முடைய ஆழமான வாஞ்சைகளை நிறைவேற்றுவார்.

…நாம் நம்முடைய கேட்ட குமாரனை குறித்தது வருந்திக்கொண்டே இருப்போம், இயேசுவை நல்ல மேய்ப்பன் என்று நம்பாத வரையில், அவரே காணாமல்போன ஆட்டை தேடி செல்பவர்.

…நாம் நம்முடைய தனிமையில், மறக்கப்பட்ட சூழ்நிலையில் தங்கியிருப்போம், இயேசுவை இம்முன்வெல், என்று நம்பாத வரையில், அவரே நம்மோடு தங்கி நம்மை தனிமையில் விடாதவர்.

…நாம் சிறந்த கிறிஸ்துமஸை உருவாக்க இங்கும் அங்கும் ஓடி கிரியைகளை செய்வோம், இயேசுவை தேவனுடைய பரிசுத்தர் என்று நம்பாத வரையில், அவரே நம்மை பரிபூரணமாக்குகிறவர்.

ஒவ்வொரு நிமிடமும் தேவனுடைய உண்மைத்தன்மையை விசுவாசிக்க புதிய தருணமாக இருக்கிறது. அது அனைத்தும் அவரில் இளைப்பாற கற்றுக்கொள்வதில்தான் துவங்குகிறது.

நாம் ஒவ்வொரு நாளும் அவசரப்பட்டு துவங்காமல், ஒவ்வொரு நாளையும் இளைப்பாறும் பயிற்சியை கொண்டு துவங்கினால் என்ன? சங்கீதக்காரன் சொல்வதுபோல நாமும், அவரில் மாத்திரம் இளைப்பாறுதலை பெற நம் ஆத்துமாவிற்கு கற்றுக்கொடுப்போம்: அவருடைய கிரியைகளையும் நன்மைகளையும் நினைவுகூர, நமக்கு அவர் நிச்சயம் தேவை என்று வெளிப்படுத்த, அவருடைய சமூகத்தில் நம்முடைய மனதையும் இருதயத்தையும் அமைதிப்படுத்த, அவருடைய நம்பகத்தன்மையில் நம்முடைய நிச்சயத்தை பிரகடனப்படுத்த.

ஏனென்றால் இந்த முழு உலகத்தையும் தன வார்த்தையால் சிருஷ்டித்தவர், ஆனாலும் ஒரு சிறு பாலகனாக அந்த பரிசுத்த அமைதலான இரவிலே இன்று நம் வாழ்வில் சமாதானத்தை கொடுக்க வந்தார்.

பிரதிப்பளிப்பிற்கான கேள்விகள்: இயேசுவின் நாமங்களில் எது உன்னோடு பேசுகிறது, உன்னுடைய ஜீவியத்தின் சூழ்நிலைகளுக்கு பேசுகிறது? இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் தேவனின் நம்பிக்கை வைத்து இளைப்பாறுவது எப்படி உள்ளது? எதை வித்தியாசமாக செய்வாய்?

இன்னும் தகவலிற்கு பதிவிரக்குக இயேசுவின் நாமங்களை புரிந்துகொள்ள என்ற தியான திட்டத்தை. அதன்மூலம் இயேசுவின் நாமம் ஜெப புத்தகம், இளைப்பாறுதலின் ஜெப குறிப்பு, கிறிஸ்துமஸ் இளைப்பாறுதல் என்ற தலைப்பில் ஜெபம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.


நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://onethingalone.com/advent/ஐ பார்வையிடுங்கள்