எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் மாதிரி

நாள் நான்கு: அவருடைய அமைதியை நாடு
எப்போதாவது பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துமஸ் ஆயத்தங்களிலிருந்து சிறிது அமைதியை பெற்று இயேசுவின் சமூகத்தில் அமர உங்களை ஏவியிருக்கிறாரா? அதை நீங்கள் ஒதுக்கித்தள்ளிவிட்டு அடுத்த வேலையை நாடி சென்றதுண்டா?
நான் நிச்சயம் அவ்வாறு செய்திருக்கிறேன்.
நாம் எப்போதும் அதிவேகத்தில் இயங்குகிறோம், சீக்கிரம் எழுந்து, அதிக நேரம் விழித்திருந்து, நாள் முழுதும் ஏதாவது சாதிக்க முயலுகிறோம். அதற்குப்பிறகு நம்முடைய வேலையினால் அதிக சோர்வடைந்து, அந்த கிறிஸ்துமஸின் நாட்களை அனுபவிக்ககூடாமல் இருக்கிறோம்.
சிலவேளைகளில், நாம் நம்முடைய ஆழமான காயங்களை மறைக்க நம்மை மும்முரமாக வைத்துக்கொள்கிறோம். நாம் மும்முமரமாக இருந்துவிட்டால் நம்முடைய மோசமான காயங்களை ஏற்கவேண்டாம். நாம் அமைதியை கண்டு அஞ்சுகிறோம், ஆகவே எந்த வேலையையும் செய்யாமல் விடாமல் நம்மை இன்னும் அதிகம் காயப்படுத்துகிறோம்.
இதற்கு தீர்வாக எதோ நாம் கொண்டாட்டங்களை தூக்கியெறிந்து ஒரு தனிமையான நபராக மாறிவிடவேண்டும் என்றல்ல. அதற்கு மாறாக, நம்முடைய மும்முரமாக நேரங்களில் அமைதியை பொருத்திக்கொண்டு, அதன்மூலம் முழுமையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ளவேண்டும். உண்மை என்னவென்றால் நாம் மனந்திரும்பி இளைப்பாறும்போது தேவனுடைய இரட்சிப்பு நமக்கு வருகிறது, நாம் அமைதியாக இளைப்பாறும்போது அவருடைய பெலன் நமக்கு வருகிறது.
இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், அமைதலாய் இருந்து பாருங்கள், வெறுமனே நாளுக்கு இரண்டு நிமிடங்களாக இருந்தாலும் பரவாயில்லை. செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் இயேசுவினிடம் கொண்டுவந்து அவர் பாதத்தில் வையுங்கள். அவருடைய நாமங்களில் தியானிக்கும்போது அவருடைய அழகை உள்வாங்கி உள்ளான காயங்களை ஆற்றுங்கள்.
உங்கள் ஜீவியத்தில் அவருடைய கர்த்தத்துவத்தை பிரகடனப்படுத்துங்கள். அவருடைய தேவையை ஏற்றுக்கொள்ளுங்கள், அமைதலாக இருக்க உங்களை ஒப்புக்கொடுங்கள், அவருடைய சமூகத்தை உணருங்கள்.
அவர் இம்மானுவேல் - தேவன் நம்மோடே. அவர் காண்கிறார். அவர் அறிவார். அவரு கேட்கிறார். அவருடைய அன்பினால் உங்களை அமைதியாக்குவாராக.
ஜெபம்: தேவனே உம்முடைய அன்பினால் என் இருதயத்தை அமைதியாக்கும். புயலான கடலில் அமைதியை கொண்டுவந்ததைப்போல என் ஜீவியத்திலும் சமாதானத்தை கொண்டுவரும். ஒரு அன்பானவரை இழந்ததினாலோ, ஒரு கவலையாலோ, நம்பிக்கை இல்லாமல் கனவுகள் உடைந்து இருக்கும் என் இருதயத்தை சுகமாக்கி சரிசெய்யும். உயிர்த்தெழுதலும் ஜீவனுமாகிய நீர் என் ஆத்துமாவின் மரித்த பாகங்களில் உம்முடைய ஜீவனை ஊதும். என்னுடைய வருங்காலத்தில் புது நம்பிக்கையை கொண்டுவரும். நான் அமைதலாய் இருக்க உம்முடைய ஜீவன் கொடுக்கும் சமூகத்தை பெற்றுக்கொள்ள உதவும். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

இயேசு: நம் ஜெயக்கொடி

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்

தெளிவாக சிந்திக்க போதுமான இடம்

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

சிலுவையும் கிரீடமும்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்
