எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் மாதிரி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

5 ல் 3 நாள்

நாள் மூன்று: உன் தேவையின் நிலையை வெளிபடுத்து:

“நன்றி, ஆனால் என்னால் என்னை பார்த்துக்கொள்ளமுடியும்.”

உனக்கு உதவி தேவையாக இருந்தபோதிலும், உதவியை நீ வேண்டாம் என்று நீ தள்ளினதுண்டா?

நம்மால் எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது என்று ஒப்புக்கொள்வது சிலவேளைகளில் மிக கடினமாக இருக்கும். எங்கள் கிருஸ்துமஸ் ஆயத்தங்களின்போதெல்லாம், நாங்கள் சோர்வடைந்து விடுவோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியங்களில், இந்த சுய-சார்பு ஒரு ஆபத்தாக இருக்கக்கூடும்.

உண்மையென்னவென்றால் நமக்கு இயேசு தேவை. ஆனால் நாமே எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்பதுபோல் நாம் நம் ஜீவியங்களை வாழ்கிறோம். தேவனுடைய அழகை காணாமல் இருக்கும் மட்டும் இவ்வாறு தான் நடைபெறும் - அவர் பரிசுத்தத்தை, அவர் அன்பு மற்றும் தயவை, அவருடைய மீட்பின் பலியை - அப்போதுதான் அவர் நமக்கு எவ்வளவு அதிகமாக தேவையென்பதை உணருகிறோம். நம்முடைய தேவையை ஒப்புக்கொள்வது ஒரு பாதிப்பாக இருக்கக்கூடும், ஆனால் இயேசு ஆவியில் எளியவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதிக்காக பசிதாகம் கொண்டவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று வாக்களிக்கிறார்.

நம்முடைய தேவையை ஏற்றுக்கொள்வது மாத்திரமே தேவன் நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிற கிறிஸ்து இயேசுவின் மகிமையின் ஐசுவரியங்களை பெற்றுக்கொள்ள ஒரே வழியாக இருக்கிறது.

சங்கீதக்காரன் தேவனுடைய மக்களை சிருஷ்டிகருக்கு முன்னாள் பணிந்து முழங்காலிட்டு பணிந்துகொள்ள அழைக்கிறார். ஆராதனைக்கு எபிரேய வார்த்தையின் அர்த்தம் முகங்குப்புற விழுந்து பணிவதாகும். சரீரப்பிரகாரமாக, நாம் முழங்காலிட்டு இயேசுவின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதைக்குறிக்கும். ஆவிக்குரிய முறையில் அது நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து என்று பொருளாகும்.

இந்த விளங்கிக்கொள்ளுதலின் மாற்றம் தேவனுடைய மகாபெரியத்தன்மையை புரிந்துகொள்ளும்போது மாத்திரமே நமக்கு சாத்தியமாகும். ஆராதனை நம்மை தேவனின் சரியான பார்வைக்குள்ளாக கொண்டுவரும், அது அறிக்கை மற்றும் மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும்.

இயேசு தன்னை ஒரு திராட்ச கோடி என்றும் சீடர்களை கிளைகளென்றும் கூறும்போது இதை காட்சிப்படுத்துகிறார். "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது", "ஆனால் நீங்கள் எண்ணில் நிலைத்திருப்பீர்களென்றால் அதிக கனி கொடுப்பீர்கள்" என்று சொல்கிறார். ஆச்சரியவிதமாக, இயேசு கனிகொடுக்க நம்மை அதிக வேலைசெய்ய அழைக்கவில்லை. அதற்கு மாறாக நம்மை அவரில் நிலைத்திருக்க அல்லது காத்திருக்க அழைக்கிறார். அவரோடு தொடர்பில் இருப்பவர்கள் இயற்கையாகவே அதிக கனி கொடுப்பார்கள், ஏனென்றால் கனியை உருவாக்குவது அவருடைய ஆவியானவரே.

இந்த கிறிஸ்துமஸின்போது இயேசுவின் தேவையை உங்களில் இளைப்பாறுதலையும் அமைதியையும் கொண்டுவர செய்யுங்கள். அழுத்தம் நீங்கிற்று. எல்லாவற்றையும் நீங்களாகவே இனி செய்யவேண்டாம். உண்மையில் சொல்லப்போனால், நீங்கள் இளைப்பாற வேண்டும்.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: இயேசு திராட்சை கொடியென்னும் காட்சி உங்களை எவ்வாறு பாதிக்கிறது? உங்களுக்கு இயேசு தேவையென உணர இயேசுவின் எந்த நாமம் உங்களை தூண்டுகிறது? அவரின் தேவையையும் அவரில் இளைப்பாறுதலின் தேவையையும் எவ்வாறு நீங்கள் வெளிப்படுத்த முடியும்?

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://onethingalone.com/advent/ஐ பார்வையிடுங்கள்