எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் மாதிரி
நாள் இரண்டு: தேவனுடைய நன்மைகளை நினைவுகூரு
நாம் யாவரும் ஆத்தும மறதி நோயினால் வாதிக்கப்பட்டிருக்கிறோம், தேவன் யாரென்றும் ஒவ்வொருநாளும் நமக்கு அவர் செய்த காரியங்களையும் மறந்துபோகிறோம். உங்களைப்போல, நானும் ஒவ்வொரு ஆண்டும் இயேசு யாரென்றும் அவருடைய பிறப்பு ஏன் அற்புதமானதென்றும் நினைவுபடுத்தவேண்டியவனாக இருக்கிறேன். என் மனது அதை அறியாதிருப்பதினால் அல்ல, என் இருதயம் அதை மறந்துபோவதினால் இவ்வாறு நடக்கிறது. பழமொழி சொல்வதுபோல, பழக பழக பாலும் புளிக்கும், சோகமாக நம்முடைய இருதயம் அந்த அற்புத உணர்வை மறந்துபோகிறது.
இந்த காரணத்திற்காக தான் இஸ்ரவேலர்கள் தேவனுடைய அற்புதமான கிரியைகளை தொடர்ந்து நினைவுகூர அறிவுரைக்க பட்டார்கள். அதன்மூலம் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் மறந்துபோகாதபடி, தேவனுடைய பிரசன்னமும் வல்லமையும் அவர்கள் மனதுகளில் எப்போதும் இருக்கும்.
நாம் கிருஸ்துமஸ் நாட்களை எதிர்நோக்கி அதற்காக ஆயத்தப்படும்போது, நாம் நம்முடைய சொந்த குளிர்ந்த பிரதேசங்களை உருவாக்க தோன்றும். ஆகவே நாம் தேவனுடைய நன்மைகளையும், அவர் யாரென்றும் நமக்கு என்ன செய்தார் என்றும் நினைவுகூர முயற்சி எடுக்கவேண்டும்.
இவ்வாறு செய்ய ஒரு அழகான வழி இயேசுவின் நாமங்களை தியானிப்பது, இன்றும் நம் அருகாமையில் அவர் இருக்கிறார் என்று அறிந்துகொண்டு கிறிஸ்துமஸின் அர்த்தத்தை உள்வாங்குவதுதான்.
ஒரு வைரத்தை சூரிய ஒளியில் பார்ப்பதுபோலதான், இயேசுவின் நாமங்களை தியானிப்பது அவருடைய குணங்களை ரசிக்க வைக்கும். அவருடைய நாமங்கள் ஒவ்வொன்றும் அழகானதாக, அவைகளை ஒன்றாக சேர்க்கும்போது நம்மை ரட்சிக்க வந்த தேவ குமாரனின் முழு உருவமாக இருக்கிறது.
நம்முடைய இரட்சகரை குறித்த தீர்க்கதரிசனங்களில் குறிக்கப்பட்டிருக்கும் இயேசுவின் நாமங்களை நினைவுபடுத்தி தியானிக்க உங்களை அழைக்கிறேன்.
இயேசு என்றால்இம்மானுவேல் /em>, தேவன் நம்மோடே, எல்லா மகிமையும் வல்லமையும் கொண்ட சிருஷ்டிகர் இந்த உலகில் ஒரு பாலகனாக நம்மோடு வசிக்கும்படியாக நம் உறவை சரிசெய்வதற்காக வந்தார்.
இயேசு என்றால் தேவ வார்த்தை, அவரை தேடுபவர்களுக்கெல்லாம் அவரால் கொடுக்கப்பட்ட நேரடியான முழுமையான மிக ஞானமான செய்தி.
இயேசு என்றால்தேவனுடைய பரிசுத்தர், ராஜரீகத்தில் அழகானவரும், வல்லமையில் மகா வல்லமையானவரும், பாவமற்ற பரிபூரணரும், நமக்கு நம்பிக்கையை அளித்து நம்மை திவ்விய நீதியில் உடுத்துகிறவரும், நம்மை அவர் பரிசுத்தத்தினால் பயமுறுத்தாதவருமாகிய அவர்.
அழைப்பு: இயேசுவின் எந்த நாமம் உங்களுக்கு மிக பொருத்தமாக தோன்றுகிறது? கொஞ்சம் நேரம் அமைதலாக இருந்து அவருடைய குணத்தின் ஐசுவரியத்தில் தியானியுங்கள், இன்று உங்களை எந்த விதத்தில் அவருடைய நாமங்கள் சந்திக்கின்றன என்று சொல்லிப்பாருங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும்.
More