இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

இளைப்பாறுதலைக் காணுதல்

7 ல் 7 நாள்

இது உனக்கான வாக்குத்தத்தம்: நீ அவரில் இளைப்பாறுவாய்!

மத்தேயு 11:28-29 வசனங்களை அடிப்படையாகக்கொண்ட, இளைப்பாறுதலைக் கண்டறிவதற்கான ஆய்வை நாம் இன்று‌டன் நிறைவு செய்கிறோம். உனக்கான இந்தப் புதிய ஊக்கத்தை இன்றே பெற்றுக்கொள்.

இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

இது ஒரு வாக்குத்தத்தம்: நீ அவரில் இளைப்பாறுவாய். எந்த பாரங்கள் உன்னை நெருக்கினாலும் சரி, அது உனக்குள்ளே கொதித்துக்கொண்டிருக்கும் மனப்போராட்டங்களாய் இருந்தாலும் சரி, நம் பலவீனங்களைச் சுமக்கவே ஆண்டவர் மனிதனாக வந்தார். ஆண்டவராகிய இயேசுவே மனிதனாகப் பிறந்து வாழ்ந்ததால் தீர்க்கமுடியாத பிரச்சனையென்று எதுவும் மனிதனுக்கு இல்லை.

இளைப்பாறுதல் என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. இது கண்டறியப்பட வேண்டும்:

  1. உன்னில் இளைப்பாறுதல்: உன் கவலைகள் உன் மீதோ உன் விருப்பத் தேர்வுகள் மீதோ அல்லது உன் சுபாவங்கள் மீதோ அதிகாரம் செலுத்த முடியாது.
  2. உன்னுடன் இளைப்பாறுதல்: நீ பூரணமான நபர் அல்ல, எனவே எல்லாவற்றையும் உன்னால் சுமக்க முடியாது: நீ ஒரு நேரத்தில் ஒரு அடி முன்னோக்கி எடுத்துவைக்கும்படி, ஆண்டவர் உன்னை ஆளுகை செய்து வழிநடத்துகிறார்.
  3. உனக்காக இளைப்பாறுதல்: உன்னதத்திலிருந்து வரும் சமாதானத்தை நீ அறிந்தவுடன், இந்த சமாதானத்தின் மூலம் வரும் உறவுகள் மற்றும் சூழ்நிலைகளை நோக்கி நீ எளிதாகச் செல்லலாம்.

தெய்வீக இளைப்பாறுதலைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்த்த இந்த நாட்களில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? கடந்த நாட்களில் கர்த்தர் உனக்கு வெளிப்படுத்திய அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி நினைவில் வைத்துக்கொள். சகலமும் ஆண்டவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறந்துவிடாதே!

இந்தத் திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

இளைப்பாறுதலைக் காணுதல்

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest