இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் உனக்கு போதிக்கட்டும்!
இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)
இந்தக் கேள்வியை உன்னிடம் கேட்க எனக்கு இடங்கொடு: நீ கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், யாரிடம் செல்வாய்? நீ பொதுமருத்துவம் பார்க்கும் மருத்துவரைப் பார்ப்பதில் திருப்தி அடைவாயா அல்லது உனக்கு உதவி தேவைப்படும் பகுதியில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த மருத்துவரைத் தேடுவதில் ஆர்வம் காட்டுவாயா?
நாம் அனைவரும் தன் மருத்துவப் பணியில் சிறந்து விளங்கும் ஒருவரிடம் செல்லவே விரும்புவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம்மில் எவரும் நம் ஆரோக்கியத்தை சரியாய் கவனிக்கத் தெரியாத அல்லது அனுபவமில்லாத ஒருவரிடம் நம்மை ஒப்படைக்க விரும்பமாட்டோம். நிபுணத்துவம் பெற்றவரிடம்தான் செல்வோம்.
நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டது? நாம் நிலைத்திருக்க வேண்டுமானால், விசுவாசத்திற்குத் தொடர்ச்சியான போதனை தேவைப்படும், மேலும் போதனையின் உறுதியான ஆதாரம் தலைசிறந்த ஆசிரியரான இயேசுவிடமிருந்தே வருகிறது. தமது அன்பினால் எல்லாவற்றையும் அவர் நமக்குப் போதிக்க விரும்புகிறார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்." (சங்கீதம் 32:8)
அப்படியானால் அவர் நமக்கு என்ன கற்பிக்க வேண்டும்? இயேசுவின் போதனையின் சாராம்சத்தைப் புரிந்துகொண்ட பேதுரு, "... ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" என்று சொன்னான். (யோவான் : 6:68)
கர்த்தர் உனக்கு இப்போது கற்பிக்க விரும்புவது இதுதான்.
- இளைப்பாறுதல் என்பது ஒரு காரியத்தை நிறுத்துவது எப்படி என்பதை அறிந்திருப்பது.
- இது போராடுவதை நிறுத்துவது.
- காரியங்களை விட்டுவிடுவது, போகவிடுவது.
மரியாளைப்போல, இயேசுவின் பாதபடியில் நின்று நல்ல பங்கினைத் தேர்ந்தெடு: நித்திய ஜீவ வார்த்தைகளை உடையவரால் நீ போதிக்கப்படுவாயாக.
இன்று, உன் அறையில் உள்ள தனிமையான இடத்திற்குச் சென்று, உன் பாரத்தை ஆண்டவருடைய பாதத்தில் வைக்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன். பிறகு, நீ வெளியே செல்லும்போது, உன் பிரச்சனையை உன் அறையிலேயே இயேசுவிடம் விட்டுவிடு. இப்போது, ‘நீர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளப்போகிறீர்’ என்று அவரிடம் சொல்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

கவலையை மேற்கொள்ளுதல்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
