இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

இளைப்பாறுதலைக் காணுதல்

7 ல் 6 நாள்

இயேசுவின் சாந்தம் உன்னை உயர்த்தும்

இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

ஒருவர் இந்தக் கூற்றை நன்றாய் சொல்லியிருக்கிறார், “உண்மையான சாந்தம் ஒருபோதும் மறைந்திராது; அது புல்வெளிக்குள் மறைந்திருந்து தன் நறுமணத்தை வெகு தூரம்வரை வீசச்செய்யும் ஒரு வசந்தகால மலர் போன்றது."

ஆத்துமாவின் உண்மையான அழகே மனத்தாழ்மைதான். மனத்தாழ்மையும் சாந்தமும் மிகப்பெரிய அளவில் வெளியே தெரிவதில்லை. ஆத்துமாவை சோர்வடையச் செய்யும் கோபம் மற்றும் பெருமையைப் போலல்லாமல், அவை இளைப்பாறுதலைக் கண்டடைய உதவுகின்றன.

இந்த குணங்களை அவதரித்தவரான இயேசுவே மனத்தாழ்மை மற்றும் சாந்தத்தின் மிகச்சிறந்த ஆசிரியர் ஆவார். "இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்" என்று இயேசுவைப் பற்றி தேவன் கூறுகிறார்.” (ஏசாயா 42:1-3)

இயேசு கூக்குரலிடவில்லை. தாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்று பலவந்தம்பண்ண முயலவில்லை. அவர் சாந்தமுள்ளவராய் இருக்கிறார்.

இயேசு உன் வாழ்வை நொறுக்குவதில்லை. மாறாக, அவர் உன்னை மீட்டெடுக்கிறார்; அவர் உன் ஆத்துமாவை மீட்டெடுக்கிறார். அவர் மங்கி எரிகிற தீயை அணைக்க மாட்டார். இன்று உனக்கென எஞ்சியிருப்பது இன்னும் துடித்துக் கொண்டிருக்கும் இதயம் மட்டுமே என்றால், இன்னும் உனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆண்டவரால் எப்போதும் உனக்கு அழகான காரியங்களைச் செய்ய முடியும்.

இன்று, சாந்தத்துடன், அவர் உன்னை உயர்த்தி மீட்டெடுக்கிறார். உனக்கு சமாதானத்தை அருளும் தண்டனை அவர் மீது விழுந்தது. நீ இனி பயப்பட வேண்டியதில்லை.

சாந்தமும் மனத்தாழ்மையும் அன்பும் நிறைந்த நம் இரட்சகரை துதித்து மகிழ்வாயாக!

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

இளைப்பாறுதலைக் காணுதல்

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest