உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?மாதிரி

விடியற்காலம் உதித்தது… ☀️
வழக்கமாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் பற்றிய கருத்தைத் தூண்டுவதற்கு வேதாகமம் அடிக்கடி விடியற்காலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு நாளின் காலைப்பொழுது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது பல நல்ல பழக்கங்களின் தொடக்கப் புள்ளியாகக் காணப்படும். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நான் என்ன செய்கிறேன் என்பதில் தனிப்பட்ட முறையில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்.
காலை நேரம் பற்றி வேதாகமம் குறிப்பிடும் சில பகுதிகள் இங்கே:
- “ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, …” (லேவியராகமம் 6:12)
- "அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், ..." (2 நாளாகமம் 13:11)
- “அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; …” (ஏசாயா 28:19)
- "காலைதோறும் உங்கள் பலிகளையும்... செலுத்தி" (ஆமோஸ் 4:4)
- "அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; ..." (செப்பனியா 3:5)
ஒவ்வொரு நாளும் காலை வேளையானது ஒரு நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்க உனக்கு வாய்ப்பளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு காரியத்தைச் செய்ய ஒரு நாள் முழுவதிலும் உன்னால் ஒரு குறிப்பட்ட நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது அரை மணி நேரத்துக்கு முன்னதாகவோ எழுந்திருந்து பின்வருவனவற்றை செய்யலாம்:
- உன்னைக் கவனித்துக்கொள்ள நேரத்தை செலவிடலாம்.
- ஆண்டவருடன் நேரத்தை செலவிடும்படி வேதாகமத்தை வாசிக்கலாம்.
- உன் நாளின் காரியங்களை முன்னதாகவே திட்டமிட்டு, கடைசி நிமிடத்தில் அவசரமாக காரியங்களைச் செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
- உனது நாள்/வாரத்திற்கான உன் எதிர்பார்ப்புகளை எழுதி, நேர்மறையான குறிப்பில் அதைத் தொடங்கலாம்.
- நீ பயப்படும் ஒரு பணியை தவிர்க்க அந்த நாளை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை செய்யத் தொடங்கு (மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது, அல்ஜீப்ரா வீட்டுப்பாடத்தை செய்யத் தொடங்குவது, கழிப்பறையை சுத்தம் செய்தல்...)
இன்று, குறிப்பாக, உன் நாளின் தொடக்கத்தில், ஆண்டவருக்குக் கொடுக்கும் நேரத்தை நீ ஒருபோதும் வீணடிக்கவில்லை என்பதை அறிந்துகொள். இது உன் நாள் முழுவதும் உனக்கு மிகவும் பயனுள்ளதாக மாறும். நீ புதுபெலனடைவதற்கும் உனக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கும் நேரம் ஒதுக்கு: சமாதானம், உறுதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, பெலன் போன்றவை உனக்குத் தேவை.
ஒவ்வொரு காலைப்பொழுதையும் உன் நாளின் மிகச்சிறந்த சொத்தாக ஆக்கிக்கொள்!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
இந்த திட்டத்தைப் பற்றி

எனது வேதாகமத்தை அதிகமாகப் படிக்கவும், என்னைக் கவனித்துக்கொள்ளவும், என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும் நான் விரும்புகிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் நேரமில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கிறாயா? நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாவிட்டால், முக்கியமானவற்றை நீ தவறவிடக் கூடும். உன் நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதை நீ அறிய விரும்பினால், இந்த வார்த்தைகளைத் தியானித்து பயனடைவாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=howtomanageyourtime
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சீடத்துவம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

நம்மில் தேவனின் திட்டம்

ஒரு புதிய ஆரம்பம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
