உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?மாதிரி
![உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F49784%2F1280x720.jpg&w=3840&q=75)
உனது நேரத்தை நிர்வகித்தல் என்பது உனது முன்னுரிமைகளை நிர்வகிப்பதாகும்
ஒரு நாளில் உனது நேரத்தை அதிகமாக எடுக்கும் விஷயங்களை நீ பட்டியலிட வேண்டுமென்றால், அதில் எந்தெந்த விஷயங்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்? நீ அவற்றைப் பட்டியலிட்டு அதில் திருப்தி அடைவாயா? அல்லது சில விஷயங்களை மாற்றி அமைத்து, அவற்றைக் குறைக்க முற்படுவாயா?
“எனது குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட விரும்புகிறேன், ஆனால் நான் வேலையில் மூழ்கியிருக்கிறேனே. நான் இன்னும் அதிகமாக வாசிக்க விரும்புகிறேன், ஆனால் என்ன செய்வது... நான் சமூக வலைதளங்களில் அல்லது சில டிவி தொடர்களைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகிறேன்...” என இப்படிப்பட்ட வார்த்தைகளை ஒருவேளை நீ சொல்ல முற்படலாம்.
பாஸ்டர் கிரெய்க் க்ரோஷெல் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “நீ தொடர்ந்து விரக்தியடைந்தால், நீ அதிகம் பொருட்படுத்தாத காரியங்களில் அதிக நேரத்தையும், உண்மையில் முக்கியமான விஷயங்களைச் செய்ய குறைவான நேரத்தையும் நீ செலவிடுவாய்".
ஒரு நாளின் முடிவில் எப்படியாயினும் நாம் அனைவரும் நம் நேரத்தை ஏதாவது ஒன்றில் செலவு செய்திருப்போம்: நமதுவேலை, நமது குடும்பம், நமது பொழுதுபோக்குகள் என இப்படிப்பட்ட ஒன்றில் நம் நேரத்தைச் செலவிட்டிருப்போம்.
"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." (மத்தேயு 6:21)
உனது நேரம் உனது பொக்கிஷம் என்றால், அதை முதலீடு செய்யும் பகுதிகளே உனது முன்னுரிமை.
நீ உன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்போது மட்டும்தான் உன் உறவுகள் பலப்படும். நீ ஆண்டவருக்காக நேரத்தை ஒதுக்கும்போதுதான் அவர் மீதான உன் அன்பு வளர்ச்சியடையும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உன் நாட்களை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் அந்த நாளைத் தொடங்குவது என்பது மிக முக்கியமான விஷயம்: உனது முன்னுரிமைகள் என்ன? ஆராய்ந்து பார்.
பிரதானமானது எதுவென நீ தீர்மானித்துவிட்டால், இந்தச் செயல்களை மையமாகக்கொண்டு உன் நேரத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை நீ நன்கு அறியத் தொடங்கிவிடுவாய். அவைகளுக்காக நீ எவ்வளவு நேரத்தையும் கவனத்தையும் செலவிடுகின்றாயோ, அவ்வளவு அதிகமாக அவைகளின் மீது உன் ஆர்வம் வளருவதை நீ காணலாம்.
இயேசு அதிக அலுவலாக இருந்தபோதிலும், ஆண்டவருடன் செலவிட நிறைய நேரத்தை ஒதுக்கினார். மேலும் அவர் ஒரு புயலின் மத்தியில் கூட நித்திரை செய்துகொண்டிருந்தார்! ஓய்வும், பிதாவுடனான நிலையான உறவும் அவரது ஊழியத்திற்கு அவசியமாக இருந்தது.
இன்று, உன் முன்னுரிமைகளுக்கு உரிய நேரத்தைக் கண்டறிய உதவும்படி ஆண்டவரிடம் கேள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F49784%2F1280x720.jpg&w=3840&q=75)
எனது வேதாகமத்தை அதிகமாகப் படிக்கவும், என்னைக் கவனித்துக்கொள்ளவும், என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும் நான் விரும்புகிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் நேரமில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கிறாயா? நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாவிட்டால், முக்கியமானவற்றை நீ தவறவிடக் கூடும். உன் நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதை நீ அறிய விரும்பினால், இந்த வார்த்தைகளைத் தியானித்து பயனடைவாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=howtomanageyourtime
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)