உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?மாதிரி

உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?

4 ல் 3 நாள்

"இல்லை" என்று எப்படிச் சொல்வது என்பதைத் தெரிந்துகொள், அப்போது நீ "ஆம்" என்று சிறப்பாகச் சொல்லப் பழகிக்கொள்வாய்!

உனது நேர அட்டவணை முழுவதும் நிறைந்து இருப்பதால், உனது முன்னுரிமைகளுக்கு நேரத்தை ஒதுக்குவதில் உனக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் உனக்கு ஆர்வம் இல்லையென்றோ, அர்ப்பணிப்பு இல்லையென்றோ சொல்லிவிட முடியாது.

ஒரு போதகர் ஒருமுறை இவ்வாறு கூறினார்: "உன் எதிரியால் உன்னை மோசம்பண்ண முடியாவிட்டால், அவன் உன்னை அதிக‌ அலுவல் நிறைந்த நபராக ஆக்கிவிடுவான்!" இந்த அறிக்கை உன்னை சிந்திக்க வைக்கிறது, இல்லையா?

உன் நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதை நீ அறிய விரும்பினால், இதை அறிந்துகொண்டு தொடங்கலாம்: செய்யக்கூடியது மற்றும் நல்லது என்று தோன்றுவதால் அது அவசியம் என்று அர்த்தமல்ல.

யாராவது உன்னிடத்தில் ஏதாவது செய்யச் சொன்னால், நீ நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு எளிய பயிற்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: "நான் இதைச் செய்யவா?" என்று சொல்வதற்குப் பதிலாக, "இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் இதை நான் செய்ய வேண்டுமா?" என்று சொல்.

உதாரணத்திற்கு:

  • "எனது குடும்ப சூழ்நிலையைப் பார்க்கும்போது, நான் இதைச் செய்ய வேண்டுமா?"
  • "எனது உடல்நிலையைப் பார்க்கும்போது, நான் இதைச் செய்ய வேண்டுமா?"
  • "மன அழுத்தத்தை கையாளுவதற்கான எனது திறமையைக் கருத்தில்கொள்ளும்போது, நான் இதைச் செய்ய வேண்டுமா?"
  • "என் மனைவியின் தேவைகளை கருத்தில்கொள்ளும்போது, நான் இதைச் செய்ய வேண்டுமா?"
  • "எனது முன்னுரிமைகளின் மத்தியில் நான் இதைச் செய்ய வேண்டுமா?"

ஒரே நேரத்தில் நீ பல விஷயங்களில் கவனம் செலுத்துவது சாத்தியமானதாகவும், நன்றாகவும் உனக்குத் தோன்றலாம். ஆனால் அந்த நாளின் முடிவில், அது பயனுள்ளதாக இருக்காது. நீ விரைவாக ஆற்றலை இழந்து, விரக்தியடைந்துவிடுவாய்.

ஒரு நோக்கத்துடனும் தொடர்ந்தும் சில விஷயங்களில் கவனம் செலுத்து. நீ அவற்றை சிறப்பாகச் செய்வதில் உறுதியாக இரு! இதை நினைவில்கொள்:

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." (மத்தேயு 6:21)

உதாரணமாக, இந்த ஆண்டு, நீ இவைகளில் கவனம் செலுத்துவதைத் தேர்வு செய்யலாம்:

  • நீ குடும்பமாக விடுமுறைக்குச் செல்லுதல்
  • உன் நண்பர்களுடன் பயணம் செல்லுதல்
  • உன் வேதாகம வகுப்புகளுக்கு செல்லுதல்

நீ நிச்சயமாக முடியாது என்று இவைகளுக்குச் சொல்ல வேண்டும்:

  • அந்த வார இறுதி நாட்களை நீ எப்படிக் கழிக்க வேண்டும் என்று உன்னுடன் பணிபுரிவோர் திட்டமிடுதல்
  • ஒரு புதிய தன்னார்வலர் திட்டம்
  • உன் நேரத்தை அதிகம் எடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இந்த விஷயங்கள் நல்லது, ஆனால் நீண்ட காலத்திற்கு, அவை உன் தாலந்துகளை வளர்ப்பதைத் தடுக்கக்கூடும். சில பெரிய விஷயங்களுக்கு "ஆம்" என்று சொல்ல ஏதுவுண்டாகும்படிக்கு, பல சிறிய விஷயங்களுக்கு "முடியாது" என்று சொல்ல பயப்பட வேண்டாம்.

உன் நாள் ஆசீர்வதிக்கப்பட்டு அவருடைய கிருபையால் நிரப்பப்படுவதாக!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

உன் நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?

எனது வேதாகமத்தை அதிகமாகப் படிக்கவும், என்னைக் கவனித்துக்கொள்ளவும், என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும் நான் விரும்புகிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் நேரமில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கிறாயா? நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாவிட்டால், முக்கியமானவற்றை நீ தவறவிடக் கூடும். உன் நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதை நீ அறிய விரும்பினால், இந்த வார்த்தைகளைத் தியானித்து பயனடைவாயாக!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=howtomanageyourtime