எருசலேமின் சிறப்புவாய்ந்த தேவாலயத்தை ஆராயுங்கள்மாதிரி

எருசலேமின் சிறப்புவாய்ந்த தேவாலயத்தை ஆராயுங்கள்

3 ல் 2 நாள்

வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் சுத்தம் செய்யுங்கள்

ஆலயம் மிக மிக புனிதமாக இருந்தது. "பரிசுத்தம்" என்றால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அது வெளி உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது, மேலும் ஒரு ஆசாரியன் உள்ளே சென்று தனது ஆலய சேவையை, அவர் வந்தது போலவே செய்ய முடியாது. முதலில் அவர் கைகளைக் கழுவி, சம்பிரதாயப்படி சுத்தமாக இருக்க வேண்டும், மேலும் பரிசுத்தமற்ற காரியங்களிலிருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். சுத்திகரிப்பு என்பது உடல் தூய்மையைப் பற்றியது அல்ல, ஆவிக்குரிய ரீதியில் புனிதமாக மாறுவது மற்றும் ஜனங்கள் சார்பாக தேவனுடன் தொடர்பு கொள்வதாகும். ஆலயத்தின் வெளிப் பகுதியில், ஆசாரியர்கள் கழுவிக் கொள்ள பெரிய குளங்கள் அல்லது நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.

ஆசாரியர்களின் சேவையின் ஒரு பகுதியாக நன்றி பலிகள் மற்றும் பாவநிவாரண பலிகள் போன்ற பல்வேறு காணிக்கைகளை கொண்டு வருவதாகும். பாவ பலிகளில் ஒரு விலங்கை பலிகொடுத்து, பின்னர் இரத்தம் தேவனுக்கு செலுத்தப்பட்டது, பாவத்திற்கு பரிகாரம் (செலுத்த) இது செய்யப்பட்டது, ஏனென்றால் பாவம் தான் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சேதப்படுத்தியது. மன்னிப்பைப் பெறலாம், ஆனால் பலிகளின் இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபிரேயர் 9: 22), மேலும் ஒரு ஆசாரியர் ஆராதனை முறைமையின்படி சுத்தமாக இல்லாவிட்டால் இந்த ஊழியத்தை செய்ய முடியாது.

புதிய உடன்படிக்கையில், இயேசு நமது பிரதான ஆசாரியரானார். இயேசுவின் வாழ்க்கை ஆரம்பம் முதல் இறுதிவரை பரிசுத்தமாகவும், தூய்மையாகவும் இருந்ததால், அவருக்காக பாவநிவாரண பலி எதுவும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை, மாறாக அவர் கொண்டுவந்த பலி அவருடைய சொந்த ஜீவனும் இரத்தமுமாகும். இந்த இறுதி தியாகம் எல்லா ஜனங்களின் பாவங்களுக்கும் பரிகாரம் செய்ய போதுமானதாக இருந்தது. இப்போது அவரை விசுவாசிக்கிற அனைவரும் இரட்சிக்கப்பட்டு, மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெறுகிறார்கள் (யோவான் 3: 16-7).

பாவமும் சுயநலமும் இருதயத்தில் நிலைத்திருந்தால், வெளிப்புற சுத்திகரிப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். இவற்றைப் பிடித்துக்கொண்டு தேவனை சேவை செய்ய முயற்சிப்பது இறுமானதும் - பரிசுத்தமில்லாததுமாகும், அது தேவனோடு ஐக்கியப்படுவதை தடுக்கும். ஆனால் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டால், வெளிப்புறமும் சுத்தமாகும் (மத்தேயு 15: 18-20; மத்தேயு 23: 25-28).

இயேசு பிரதான ஆசாரியர், உண்மையான விசுவாசிகள் அனைவரும் தேவனுடைய சேவையில் "ஆசாரியர்கள்". அவர்கள் தங்கள் இருதயங்களைச் சுத்திகரித்து, பாவத்திலிருந்து விலகி, தேவனிடம் திரும்பினார்கள். அவர்கள் அவரிடத்தில் நெருங்கி சேருகிறார்கள், அவர் அவர்களுடன் நெருங்கி சேருகிறார், அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவருடைய மகிமைக்காக பரிசுத்த வாழ்க்கையை வாழ அவர்களை உயர்த்துகிறார் (1 பேதுரு 2: 9-10; யாக்கோபு 4: 7-10). இந்த பரிசுத்தமான, ஆவிக்குரிய வாழ்க்கை என்பது தேவனைப் பிரியப்படுத்தும், மேலும் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நன்றிப் பலியாகும்.

இந்தக் குறும்படத்தில், ஆலய சதுக்கத்தில் இந்தக் கழுவும் பாத்திரங்களில் ஒன்றைச் சந்திப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்து, வேத வசனங்களைப் படியுங்கள், இது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எப்படிப் பொருந்தும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

எருசலேமின் சிறப்புவாய்ந்த தேவாலயத்தை ஆராயுங்கள்

முதல் நூற்றாண்டில் எருசலேம் தேவாலயத்துக்கு நேராக நடந்து சென்று அங்கு நடந்த சம்பவங்களை அனுபவிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! இந்த மூன்று நாள் திட்டம், இன்று நமக்கு தேவாலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வேத வசனங்களுடன் அதைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது கேட் ஜீரோவின் வசீகரிக்கும் வீடியோக்களைக் கொண்டுள்ளது, இது வேதத்தை நெருக்கமாக அனுபவிக்க உதவும் தனித்துவமான வீடியோ கேம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Gate Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://gatezero.game/