எருசலேமின் சிறப்புவாய்ந்த தேவாலயத்தை ஆராயுங்கள்மாதிரி

இயேசு ஆலயத்தைச் சுத்தம் செய்தல்
எருசலேமில் உள்ள பழைய உடன்படிக்கை ஆலயம் ஒரு புனித இடம் - பூமியில் தேவனின் சொந்த வசிப்பிடமாகும். தேவனின் ஜனங்களாகிய இஸ்ரவேல் இங்கு வழிபடவும், பலிகளை செலுத்தவும், ஜெபத்தில் தேவனுடன் தொடர்பு கொள்ளவும் வந்தார்கள் (ஏசாயா 56: 8). இந்தக் ஆலயத்துக்குச் சென்றால் அருமையாக இருக்கும் அல்லவா? இது ஒரு கண்கவர் இடம், புதிரான கலைப்பொருட்கள் மற்றும் சக்திவாய்ந்த அடையாளங்கள் நிறைந்தது. தொலைதூரத்திலிருந்து வந்த ஜனங்களும் அனைத்து தரப்பு ஜனங்களும் நிரம்பியிருந்தனர். அவர்களில் பலர் விலங்குகளை ஆசாரியனிடம் கொண்டுவந்தனர், பல்வேறு நோக்கங்களுக்காகப் பலியிடும்படி, உதாரணமாக பாவப் பலிகள் அல்லது நன்றிப் பலிகள், குறிப்பாக பஸ்கா போன்ற யூதர்களின் விடுமுறை நாட்களில். அவர்கள் எருசலேமுக்கு வந்ததும் ஒரு விலங்கை வாங்கலாம் அல்லது ஆலய காணிக்கைக்கு பணத்தை மாற்றலாம்.
ஆனால் ஒருமுறை பஸ்கா பண்டிகையின்போது இயேசு ஆலயத்துக்குச் சென்றபோது, வியத்தகு சம்பவம் ஒன்று நடந்தது:
"பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். -யோவான் 2: 13-17.
பிரச்சனை என்னவென்றால், வியாபாரிகள் பலியிடுவதற்காக விலங்குகளை விற்றது அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக வழிபாட்டாளர்களை ஏமாற்றி - அவர்கள் அதை தேவனுடைய வீட்டின் நடுவில் செய்தார்கள்! தேவனையும் அவருடைய தொழுகொள்ளுதலையும் மகிமைப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் கேட்டிலும், சுயநலவாதிகளாயும் இருந்து தேவனின் நல்ல ப்ரமாணங்களை மீறினார்கள்.
இந்த நிகழ்வு பொதுவாக இயேசு ஆலயத்தை சுத்தம் செய்தபோது குறிப்பிடப்படுகிறது, மேலும் இது புதிய உடன்படிக்கையில் மிகவும் அடையாளமாக உள்ளது. உண்மையான விசுவாசிகளுக்கு, ஆலயம் இனி ஒரு பௌதிக கட்டிடம் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொருவரும், நாம் யாராக இருந்தாலும், பரிசுத்த ஆவியின் வசிப்பிடமாக இருக்க முடியும்-இரண்டு கால்களில் கடவுளின் ஜீவனுள்ள, சுவாசிக்கும் ஆலயம்! (1 கொரிந்தியர் 6: 19-20). இந்த ஆலயத்தின் மீது இயேசு கொண்டிருந்த அதே மரியாதையை நாம் கொண்டிருக்க வேண்டும், மேலும் தேவனுடனான நமது உறவில் அசுத்தம் தலையிட அனுமதிக்கக்கூடாது. நாம் எப்போதும் அவருக்குத் திறந்திருக்க வேண்டும், அவருடைய மகிமைக்காக வாழ வேண்டும்!
வேத வசனங்களைப் படித்து, இந்த சிறிய காணொளியில் இயேசு ஆலயத்தை சுத்தப்படுத்துவதைப் பாருங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி

முதல் நூற்றாண்டில் எருசலேம் தேவாலயத்துக்கு நேராக நடந்து சென்று அங்கு நடந்த சம்பவங்களை அனுபவிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! இந்த மூன்று நாள் திட்டம், இன்று நமக்கு தேவாலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வேத வசனங்களுடன் அதைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது கேட் ஜீரோவின் வசீகரிக்கும் வீடியோக்களைக் கொண்டுள்ளது, இது வேதத்தை நெருக்கமாக அனுபவிக்க உதவும் தனித்துவமான வீடியோ கேம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Gate Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://gatezero.game/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

சீடத்துவம்

ஒரு புதிய ஆரம்பம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

நம்மில் தேவனின் திட்டம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
