எருசலேமின் சிறப்புவாய்ந்த தேவாலயத்தை ஆராயுங்கள்மாதிரி
தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது: தேவனிடம் திரும்பும் வழி
உட்புறத்தில், ஆலயத்தின் இரண்டு பகுதிகள் இருந்தன: முதல் பகுதி பரிசுத்த ஸ்தலம், இரண்டாவது பகுதி, மகா பரிசுத்த ஸ்தலம், தேவனின் பிரசன்னம் தோன்றியது: இது பூமியில் அவருடைய வாசஸ்தலமாக இருந்தது. ஒரு பெரிய, அடர்த்தியான திரை அல்லது முக்காடு, மகா பரிசுத்த ஸ்தலத்தின் நுழைவாயிலை மூடியது. அது தேவனின் பிரசன்னத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் ஒரு தடையாக இருந்தது, மேலும் அது தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் பாவத்தை அடையாளப்படுத்தியது.
பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6: 23), எனவே பாவத்திற்கு பரிகாரம் செய்ய இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22). எல்லா மனிதர்களும் பாவிகளாக இருந்ததால், யாராலும் திரைக்கு அப்பால் தேவனின் பரிசுத்த மற்றும் தூய பிரசன்னத்திற்கு செல்ல முடியாது, அல்லது அவர்கள் இறந்துவிடுவார்கள். ஆண்டிற்கு ஒருமுறை திரைக்குப் பின்னால் சென்று, தேவனுடன் சமாதானம் செய்து, ஜனங்களின் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காக பலியிடப்பட்ட விலங்குகளின் இரத்தத்தை தன்னுடன் எடுத்துச் செல்வது பிரதான ஆசாரியன் மட்டுமே. திரைச்சீலையானது பாவத்தின் தடையின் ஒரு நிலையான நினைவூட்டலாக இருந்தது, இது தேவனுடன் உண்மையான ஐக்கியம் கொள்வதைத் தடுக்கிறது.
பாவம் இல்லாமல் வாழ்ந்த முதல் மற்றும் ஒரே ஒருவராக இயேசு இருந்தார், எனவே பாவம் மற்றும் மரணத்தின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது. இயேசு கல்வாரியில் சிலுவையில் மரித்தபோது, உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று நடந்தது: ஆலயத்தில் உள்ள திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத்தேயு 27: 50-51). இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தால், நம் பாவங்களுக்காக ஒருமுறை நிரந்தரமாகப் பரிகாரம் செய்து, பிதாவுக்குத் திரும்பும் வழியைத் திறந்தார், இது திரைச்சீலை கிழிப்பதன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது. இது பாவம் மற்றும் மரணத்தின் மீதான இயேசுவின் இறுதி வெற்றியின் சக்திவாய்ந்த அடையாளமாக இருந்தது. இப்போது இயேசுவின் சீஷர்களான யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாத அனைவரும் - கிருபாசனத்தண்டைக்கு வந்து ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையைபெறலாம் (எபிரேயர் 10:19-22; எபிரேயர் 4:16)!
சிறிது காலத்திற்குப் பிறகு, பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்களில் வசிப்பதற்காக பூமிக்கு வந்தார். இது புதிய உடன்படிக்கையின் தொடக்கமாக இருந்தது: ஆவியின் வாசஸ்தலமானது பௌதிக ஆலயத்தில் இல்லை, ஆனால் நாமே தேவனின் ஆலயமாக அழைக்கப்பட்டுள்ளோம்! மேலும் எருசலேமில் உள்ள ஆலயம் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்ததைப் போலவே, புதிய உடன்படிக்கையில் தேவனின் ஆலயமாகிய நாம் தேவனின் மகிமைக்காக பரிசுத்த மற்றும் தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்.
வேத வசனங்களில் உள்ள திரைச்சீலை மற்றும் இயேசுவின் வேலையின் அர்த்தத்தைப் பற்றி மேலும் படிக்கவும், இந்த சிறிய வீடியோவில் ஆலயத்தில் உள்ள திரை கிழிந்த சக்திவாய்ந்த தருணத்தை அனுபவிக்கவும்!
இந்த வேத வாசிப்புத் திட்டத்தால் நீங்கள் ஈர்க்கப்பட்டு உதவி பெற்று இருக்கீறீர்களா, மேலும் நீங்கள் அங்கு இருந்தபடியே ஒரு ஊடாடும் வீடியோ கேமில் வேதத்தில் நடந்த நிகழ்வுகளை அனுபவிக்க விரும்புகிறீர்களா? கேட் ஜீரோ பற்றி மேலும் அறிய https://gatezero.game/
இந்த திட்டத்தைப் பற்றி
முதல் நூற்றாண்டில் எருசலேம் தேவாலயத்துக்கு நேராக நடந்து சென்று அங்கு நடந்த சம்பவங்களை அனுபவிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! இந்த மூன்று நாள் திட்டம், இன்று நமக்கு தேவாலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வேத வசனங்களுடன் அதைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது கேட் ஜீரோவின் வசீகரிக்கும் வீடியோக்களைக் கொண்டுள்ளது, இது வேதத்தை நெருக்கமாக அனுபவிக்க உதவும் தனித்துவமான வீடியோ கேம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Gate Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://gatezero.game/