சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்மாதிரி

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

5 ல் 3 நாள்

பள்ளத்தாக்கில் நம்பிக்கை

நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். சங்கீதம் 23:4

வில்லியம் கேரி அவர்கள், “நவீன மிஷனின் தந்தை” என்று அறியப்பட்டுள்ளார். ஆனால், 1792ல் முதன் முதலாக இந்தியாவிற்கு வந்தபோது, வியாதி, தனிமை மற்றும் வறுமையினால் விரைவாகவே பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தனது மிஷனரி துணையாளரினால் கைவிடப்பட்டார், வயிற்றுப்போக்கினால் அவருடைய ஒரு மகன் இறந்துபோனான், மற்றும் கத்தியைக்கொண்டு அவரைப் பயமுறுத்துமளவுக்கு அவருடைய மனைவியின் மனநிலை மிகவும் சீர்குலைந்தது.

“கிறிஸ்தவ நண்பர்கள், ஒரு பெரிய குடும்பம் மற்றும் அவர்களுடைய தேவையை சந்திக்க எதுவுமில்லை என்று ஒரு விசித்திரமான இடத்தில் இருக்கிறேன்” என்று கேரி அவர்கள் எழுதியுள்ளார். “உண்மையில் இது எனக்கு மரண இருளின் பள்ளத்தாக்கு”.

மனிதரீதியாகப் பேசினால், கேரியினுடைய இந்த இருண்ட பள்ளத்தாக்குக் செல்லுவதற்கு முடியாததாகும். இருந்தாலும், “நான் இங்கே இருந்தாலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். தேவன் இங்கிருக்கிறார்” என்று அவரால் எழுதமுடிந்தது. கேரியின் நம்பிக்கை, 23ம் சங்கீதத்தை தாவீது பாடும்போது தாவீதுக்கு இருந்த நம்பிக்கையை எதிரொலிக்கிறது: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” (சங்கீதம் 23:4)

வாழ்வின் பள்ளத்தாக்குகளில், அவற்றினூடாக நம்முடன் நடக்கின்ற மேய்ப்பரில் நாம் நம்பிக்கையைக் கண்டுகொள்கிறோம். எவ்வாறான பள்ளத்தாக்கிற்கு நாம் முகம் கொடுத்தாலும், அது ஒரு நாள் முடிவிற்கு வரும் என்று அவர் வாக்களிக்கிறார். ஒரு நாள், அவருடைய வீட்டில் அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கும் பந்தியில் நாம் இறுதியாக வந்து அமருவோம் (வசனம் 5-6).

இன்று நீங்கள் ஒரு பள்ளத்தாக்கினூடாக நடக்கிறீர்களென்றால், சகல உறுதிப்பாட்டுக்கும் ஆதாரமாயுள்ள, உங்கள் மேய்ப்பருடன் நீங்கள் கிட்டிச்சேருகையில் அந்த மகத்துவமான எதிர்காலத்தை குறித்த ஒரு உணர்வை உங்களால் பெற்றுக்கொள்ளமுடியும். “நீர் என்னோடு இருக்கின்றீர்” (வச.4) என்று நாம் உறுதிப்படும்போது, இருளான காலங்கள் நம்பிக்கையின் காலமாக மாறும். – கிறிஸ் வேல்

பிரதிபலிப்பு: சங்கீதம் 23 இலுள்ள எந்த வாக்குத்தத்தங்கள் அல்லது உறுதிப்பாடுகள் உங்களுக்கு விசேஷமான நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கின்றன? இன்று உங்கள் மேய்ப்பரோடு நீங்கள் கிட்டிச்சேர அவை எவ்வாறு உங்களுக்கு உதவுகின்றன?

ஜெபம்: நல்ல மேய்ப்பரே, நீர் என்னோடு இருக்கிறீர் உமக்கு நன்றி. நான் முகங்கொடுக்கின்ற அல்லது கடந்துசெல்லும் காரியம் எதுவானாலும் சரி, ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு கணத்திலும் நீர் என்னோடு நடப்பீர்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread Asia Pacific க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/