சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்மாதிரி

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

5 ல் 2 நாள்

சிருஷ்டிப்பினூடாக தேவனை சந்தித்தல்

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது……..அவைகளின் சத்தம் பூமியெங்கும் செல்லுகிறது. சங்கீதம் 19:1-6

மிருதுவான, குளிர்காற்றினூடாக ‘ஓ ஓ ஓ’ மற்றும் ‘ஆ ஆ ஆ’ என்று நீச்சல்வீரர்களின் பாடல் பாடிக்கொண்டு, கிட்டத்தட்ட உறைந்துகொண்டிருக்கிற நீரினுள் தன்னுடைய தோள்களை அவள் அமிழ்த்துகிறாள். கோவிட் தொற்று ஏற்பட்ட காலங்களில் இங்கிலாந்து தேசத்தில் எழும்பிவரும் அலைகளில் நீந்துகின்ற புராதன வழக்கம் - அதைப்பற்றி நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் ஏற்படுகின்றது! ஆனால் சிவந்த கன்னங்களையுடைய ஒரு நீச்சல் வீரருடைய வார்த்தைகள் எனது கற்பனையை சிறைப்படுத்தியது: “நாங்கள் வெளியில், இயற்கையோடு இணைகிறோம். ஒருவிசை இங்கே நீங்கள் இருப்பீர்கள் என்றால், நீங்களும் மிகவும் ஆழமாக பெருமூச்சு விட்டிருக்க முடியும். நாம் எப்பொழுதும் மீன் கொத்திக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்………….அது மிகவும் அழகானது. “

இயற்கையுடன் தொடர்புகொள்வது, தேவனைக் குறித்ததான நமது விழிப்புணர்வை மேலும் உயர்த்துகிறது என்று சங்கீதக்காரர் பரிந்துரைக்கிறார். சிருஷ்டிப்புகள் தம்முடைய சிருஷ்டிகரின் மெய்யான தன்மையையும் அழகினையும் வெளிப்படுத்துகின்றன (சங்கீதம் 19:1). பகலும் இரவும், வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது: “அவைகளின் சத்தம் பூமியெங்கும் செல்லுகிறது” (வசனம் 2-4). சூரியனின் கதிர்வீச்சின் வெளிச்சம் சகலத்தையும் தொடுகின்றதுபோல, தேவனுடைய அன்பின் பராமரிப்பிலிருந்து ஒருவரும் மறைக்கப்படுவதில்லை – அவரால் சிருஷ்டிக்கப்பட்ட உலகம் முழுவதினூடாகவும் இந்தப் பராமரிப்பு வெளிப்படுத்தப்படுகிறது (வசனம் 4-6).

நாம் எங்கிருந்தாலும், இயற்கையினூடாக நம்மால் தேவனோடு இணைந்துகொள்ள முடியும் - ஜன்னலினூடாக வானத்தைப் பார்ப்பதினூடாகக்கூட, அவருடைய வெளிப்படுத்தலுக்கு நமது இருதயங்களைத் திறக்கமுடியும். பறவைகளின் பாடல்ளுக்கு செவிகொடுத்தல், ஓடிக்கொண்டிருக்கும் நமது சிந்தனைகளை நிலைநிறுத்தி, நம்மைப் புதுப்பிக்குமாறு அவரை அழைக்கிறது. நமது இல்லங்களில் நுழைகின்ற தேவனுடைய சூரிய அஸ்தமன வண்ணக் கீறல்களை ரசித்துப் போற்றுவது, அவருடைய பிரசன்னத்தை நமக்கு உறுதிப்படுத்துகிறது. தேவன் நமக்குள் மேம்படுத்துகிற குறித்த சிந்தனைகளை பருவகால மாற்றங்கள் தூண்டுகின்றன. டெய்சி மலர் தார் நிலத்திலும் கூட அழகாக மலர்ந்து தன் புகழை வெளிப்படுத்துகிறது. அதுபோல நாமும் வெளிப்படையான தடைகள் பல இருப்பினும் தேவன் ஈந்த ஆற்றல்களை நிறைவேற்ற முடியும்.

இன்றே தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியதான சிருஷ்டிப்பிலுள்ள முடிவில்லா கொடைகள் நம்முடையதே. அற்புதம்! – ஆன் லீ டிசியர்

பிரதிபலிப்பு: கடந்த காலத்தில் தேவன், தமது அன்பு, பிரசன்னம் அல்லது உத்வேகத்தை வெளிப்படுத்துவதற்கு என்னென்ன வழிகளில் இயற்கையைப் பயன்படுத்தினார்? சற்று இடைநிறுத்தி, ஆழமாக மூச்சு எடுத்து, இன்றே தேவனுடைய சிருஷ்டிப்பினூடாக அவரைச் சந்திப்பதில் ஏன் மகிழ்ந்திருக்கக்கூடாது?

ஜெபம்: சிருஷ்டி கர்த்தரே! உம்மை இன்னும் நன்றாய் அறிந்துக்கொள்ள உதவும்படி இந்த உலகத்தை கொடையாகத் தந்ததற்காக உமக்கு நன்றி.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread Asia Pacific க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/