எல்லாம் புதிதாயினமாதிரி
பவுல் கொரிந்துவிற்கு தன்னுடைய பயணம் தாமதமானது ஒரு நேர்மையான இருதயத்திலிருந்து வந்தது என்று அந்த மக்களுக்கு விளக்கினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நேர்மை என்பது நம்முடைய நாட்களில் இழைக்கப்பட்ட ஒரு குணம், அது அடக்குமுறைகளாலும், உண்மையை மறைப்பதினாலும், பொய்யினாலும், முகஸ்துதியினாலும் மறக்கப்பட்டு வருகிறது. நாம் ஒருவரோடு ஒருவர் மற்றும் மற்றவர்களிடமும் சுத்தமாகவும் நேர்மையாகவும் இருந்தால் கிறிஸ்துவின் சரீரம் இன்னும் எவ்வளவு உயர்ந்து இருக்கும்?
நாம் வேண்டுமென்றே இல்லைக்கு ஆமென்றும், ஆமிற்கு இல்லையென்றும் ஒருவேளை சொல்லாமல் இருப்போம், அனால் அதை தந்திரமாக செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
நாம் இதில் நிறுத்தினால் நேர்மை மற்றும் உண்மைத்தனத்தைக்குறித்து ஒரு பிரயோஜனமான பாடத்தை கற்றுக்கொள்ளமுடியும். ஆனால் நம்முடைய நேர்மையை உயர்த்திக்கொள்வதைக்காட்டிலும் அதிகமான குண மாற்றத்திற்கான பாடத்தை பவுல் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு சிறப்பம்சம் அது எதோ அறம் மிகுந்த நிலையை அடைவது அல்லது நல்லவர்கள் என்று அழைக்கப்படுவதற்காக மாத்திரம் நல்ல கிறிஸ்துவர்கள் போன்று வாழ்வது அல்ல. பவுல் ஏற்கனவே அந்த நோக்கத்தில் அதிக வாழ்நாட்களை செலவளித்திருந்தார், ஒரு சிறந்த யூத கல்வி கற்று, பரிசேயர்களில் ஒருவராக இருந்து, உயர்ந்த ரபிகளில் ஒருவரினால் பயிற்சிபெற்று, சுயநீதியை கரையில்லாமல் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய சிறப்பு எல்லாம் ஒரு குப்பைமேட்டைத்தவிர வேறு ஏதும் இல்லை என்று உணர்ந்தார் (பிலிப்பியர் 3:8).
இங்கு அவருடைய செயலை கொரிந்தியருக்கு முன்னாள் நியாயப்படுத்தும்போது, அவர்களை ஏதோ ஒன்று சொல்லி குறைவாக நடத்தினால் அது தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்ற அவருடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கும் என்று உணர்ந்தார். அவர் பொய் சொல்லமுடியாது. அவருடைய வார்த்தையை அவர் திரும்பபெறமுடியாது. அவருடைய பிள்ளைகளை மீட்பேன் என்று தேவன் வாக்கு பண்ணினார், அதன்படி இயேசுவில் எல்லா வாக்குத்தத்தமும் 'ஆம்' என்று உள்ளது. இயேசுவே நாம் வாஞ்சிக்கும் ஜீவியத்தையும் நம்பிக்கையையும் தேவனில் நமக்கு "ஆம்" என்று செய்கிறார் (2 கொரிந்தியர் 1:19-20). வேறுவிதத்தில் சொல்லவேண்டுமென்றால் "[Jesus] உடன் உறவில் இருக்கும்போது, தேவனின் ஒவ்வொரு வாக்கிக்கிற்கும் 'ஆம்' என்று பதில் கிடைக்கும்." தேவன் ஆம் என்றோ இல்லையென்றோ சொன்னதில் தயங்கவில்லையென்றால், பவுலும் தயங்கவில்லை என்றே ஆகும்.
நாம் கிறிஸ்துவின் "ஆம்"-இல் நிலையாக இல்லை என்பதினால்தான் ஒருவேளை நாம் நம் உறவுகளில் நேர்மையாகவும் உண்மையில்லாமலும் இருக்கிறோம் என்று கூறலாம். என்னுடைய வாழ்க்கை என் இஷ்ட்டபடி இருக்கவேண்டும் என்று நான் என் வாழ்வில் வஞ்சித்து வாழ்ந்திருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன். அதற்க்கு பாதிப்பில்லாமல் இருக்க ஒரு ஆம் அல்லது இல்லை என்று நிலைவரமாக சொல்ல என்னால் கூடாமல் இருந்திருக்கிறது. ஆனால் தேவனுடைய உண்மைத்தன்மையை நான் விசுவாசிக்கும்போது, அவருடைய குணமும் ஆட்சியும் என்னுடைய வாழ்வில் இருக்கும்போது, நான் நேர்மையற்று இருக்க தேவையில்லை.
நம்முடைய பாடத்தை முடிக்கும்போது, எந்த பகுதி உங்களுக்கு மிகவும் உணர்த்தக்கூடியதாக இருந்தது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.
More