எல்லாம் புதிதாயினமாதிரி

All Things New

5 ல் 3 நாள்

பவுல் கிறிஸ்துவின் பாடுகள் நம் வாழ்விழலும் சிந்தியிருப்பது குறித்து சொல்லும்பொழுது, சில ஒன்றுபட்ட அர்த்தங்களை அவர் சொல்லியிருக்கக்கூடும்: 1. கிறிஸ்துவின் வழியாக படும் பாடுகள் 2. கிறிஸ்துவினால் நமக்கு அனுமதிக்கப்பட்ட பாடுகள் 3. கிறிஸ்துவோடு தொடர்புகொண்டிருக்கும் பாடுகள் 4. கிறிஸ்து அனுபவித்ததுபோன்ற பாடுகள்.[1] விசுவாசிகளாக நாம் அறிந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதும் காரியம் என்னவென்றால், கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவினால் அதற்கேற்ற சில பாடுகளை நாம் அனுபவிக்கத்தான் செய்வோம். உலகத்தை சுற்றிலும் அநேக கிறிஸ்தவர்கள் பெரிய பாடுகளை அனுபவிக்கிறார்கள், மற்ற சிலர் விசுவாசத்திற்காக குறைவாக ஆனால் அதே அளவிலான வலியை உண்டுபன்னும் பாடுகளை அனுபவிக்கிறார்கள். நாம் பாடுகளை அனுபவிக்கும் நேரங்களில் நமக்கு இயேசுவுடன் ஒரு குறிப்பிட்ட உறவு உருவாகும் ஏனென்றால் அவரை விட பாடுகளை நன்றாக அறிந்தவர்கள் இல்லை என பவுல் அறிந்துகொண்டார்.

நான் இன்னும் பாடுகளை விரும்பும் ஒரு நபரையும் கண்டதில்லை, ஆனால் பாடுகளின் நடுவில் இயேசுவோடு ஆழமான தொடர்பை அறிந்த மக்களை நான் கண்டிருக்கிறேன். இயேசுவின் சில பகுதிகளை நீ ஒரு சுலபமான வழியில் அறியமுடியாது, அவருடன் அந்த தொடர்பை நீ அனுபவித்தபிறகு நீ சுலபமான வழியை தெரிந்தெடுக்கமாட்டாய். இயேசுவோடு ஒரு விசேஷித்த ஐக்கியத்தை அனுபவிப்பதோடு (பிலிப்பியர் 3:10), பவுல் பாடுகள் ஏன் ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது என்ற காரணத்தையும் விளக்குகிறார்.

எப்போதெல்லாம் கிறிஸ்துவின் பாடுகள் நம்முடைய ஜீவியத்தில் நிரம்பிவழிகின்றதோ அப்போதெல்லாம் தேவனுடைய ஆறுதல் நம்மிலிருந்து வழிகின்றது. (2 கொரிந்தியர் 1:5). இது மிகவும் நல்ல செய்தி!

எல்லா வேதவசனங்களிலும் அழகான அறிவிப்பு வசனம் 4-இல் இருக்கிறது, "தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்". நாம் கஷ்டங்களினூடாய் செல்லும்போதெல்லாம், நம்முடைய வலியை தாண்டி நோக்குவது கடினம்தான்.ஆனால் நம்முடைய அனுபவங்கள் நம்மைப்போல பாடுகளினூடாய் செல்பவர்களுக்கு ஆறுதலை அளிக்குமென்று உணரும்பொழுது நாம் பாடுகளில் ஒரு உன்னத தீர்மானத்தை காண்போம்.

கிறிஸ்துவின் பாடுகளும் ஆறுதலும் நம்முடைய ஜீவியத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருகின்றன. கிறிஸ்துவர்களாக நாம் கிறிஸ்துவின் ஆறுதலில்லாமல் பாடு அனுபவிக்கவேண்டியதில்லை, நம்முடைய பாடுகளில்லாமல் சில ஆறுதல்களை நாம் அறியவே முடியாது என்பதாக நான் நினைக்கிறன்.நீ சகிக்கமுடியாத ஒரு பாடை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், இயேசு என்பவரிடமிருந்து நேராக உன் ஜீவியத்திற்குள்ளாக பாய்ந்தோடும் தேவ ஆறுதலை நீ பெற்றுக்கொள். உன்னுடைய வலிக்கு அத்தனையாக அதை உனக்கு அவர் வாக்களிக்கிறார். நீ தேவ ஆறுதலைப் பெற்றுக்கொள்ளும்போது, நீ வலியிருக்கும் இன்னும் ஒரு நபரின் காயத்தைக் கட்ட முற்படுவாய், ஏனென்றால் தேவ ஆறுதல் இயற்கையில் புரண்டோடுகின்றது. மற்றவர்களுக்கு கொடுத்தாலும் அது நம்மிலிருந்து உனக்கு மீதியாயிருக்கும்.


[1] David E. Garland, The New American Commentary, Volume 29, 2 Corinthians (Nashville: Broadman & Holman Publishers, 1999) accessed on August 7, 2017 via mywsb.com.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

All Things New

2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeWay Womenக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://www.lifeway.com/allthingsnewஐ பார்வையிடுங்கள்