எல்லாம் புதிதாயினமாதிரி
நான் ஒருவேளையில், நான் தேவனை நேசித்து, நிச்சயமான வேதாகம தெரிந்துகொள்ளுதல்களை செய்தால், ஒரு சோகமில்லாத, சுகவீனமில்லாத நல்ல ஜீவியத்தினால் ஆசீர்வதிக்கப்படுவேன் என்பதாக யோசித்தேன். நான் முதிர்ச்சியடைந்தபோது தேவனை பின்பற்றுவதினால் எனக்கு இந்த பாதுகாப்பான ஐசுவரியமான வாழ்க்கை கிடைத்துவிடாது என்று மெல்ல மெல்ல உணர்ந்தேன். ஆனாலும், நான் என்னுடைய பங்கை செய்தால், தேவன் தம் பங்கை செய்ய கடமைப்பட்டுள்ளார் என்று நான் நம்பினேன்: அதாவது அமெரிக்கா தேசத்தில் நாங்கள் விரும்பும் வாழ்க்கையை அளித்து என்னை வேதனையில் இருந்து பாதுகாப்பாரென்று.
நான் ஒத்துக்கொள்கிறேன், கீழ்ப்படிதல் ஆசீர்வாதங்களை கொண்டுவரும், தேவன் நமக்கு உலகப்பிரிகாரமான உறவுகள் மற்றும் சொத்துக்களின் ஈவுகளையும் தர விரும்புகிறார், நாம் அவரை பின்பற்றும்போது இவைகள் நடக்குமென்று நான் நம்புகிறேன். ஆனாலும்,இந்த பெரிய கிறிஸ்துவ விசுவாசத்திற்குள் பாடுகள் எவ்வாறு பொருந்துகின்றன அல்லது பொருந்தவில்லை என்பதைக் குறித்த புரிதல் எனக்கு குறைவாக இருந்தது. வேதாகமம் பாடுகள் நம்முடைய வாழ்வில் ஒரு அங்கம் வகிக்கிறது என்று வெளிப்படுத்துகிறது, எபிரேயர்: 2:10 கூட இயேசு எவ்வாறு பாடுகளினிமித்தம் பரிபூரணரானார் என்பதை விளக்குகிறது. என் மீது வந்துவிடும் (யோபுவின் வரிகள்) என்று எண்ணி பயந்து என்னை பாதுகாத்துக்கொள்ள, பாதுகாப்பாக உணர, நான் எதையெல்லாம் இழந்தேனோ, அவைகள் உண்மையில் எளிமையாக சொல்லவேண்டுமென்றால்: பாடுகள் வழியான என் ஆசீர்வாதத்தின் பங்கு.
பாடுகள் என்றாலே நமக்கு பதற்றம் ஏற்பட வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் தேவன் நம்முடைய பாடுகளின்வேளையில் விசேஷமாக நம்மோடு இருக்கிறார். ஆனால் நாம் இயேசுவின் நாமத்தில் ஒரு வலிநிறைந்த, இரத்தசாட்சியின் மற்றும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட ஜீவியத்திற்குள்ளாக நம்மை நாமாகவே செலுத்தக்கூடாது. முடிவாக, நாம் பாடுகளை கண்டு அஞ்சவேண்டாம், ஆனால் பாடுகளை தேடி பெற்றுக்கொள்ளவும் வேண்டாம்.
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிரூபத்தை நம்முடைய பாடுகளில் (கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள்) நம்மை சந்திக்கும் தேவனுடைய இரண்டு குணாதீசயங்களை சொல்லி துவங்குகிறார். பவுல் தேவனை இரக்கமுள்ள பிதாவென்று அழைக்காமல், இரங்கங்களின் பிதா என்று அழைப்பதை கவனியுங்கள். அவரே எல்லா மனதுருக்கத்திற்கும் ஊற்றாக துவக்கமாக இருக்கிறார். அவரே இரக்கத்தின் முதல் மற்றும் ஒரே ஊற்று - எல்லா மனதுருக்கங்களின் ஊற்றான பிதா. தேவன் எதோ நல்ல சமயங்களில் மாத்திரம் நம் பக்கத்தில் வந்து போவதாக யோசிக்கும் நபருக்கு இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கண்ணோட்ட மாற்றம்.
இந்த இரக்கங்கள் (மனதுருக்கம்) வார்த்தையின் நிஜ அர்த்தத்தை புரிந்துகொள்வோம். அதற்கு அர்த்தம் "மனதுருக்கம் வாழும் இடம், இரக்கம், உணர்ச்சிகள், பரிதாபகுணம் -இவைகள் தங்கும் ஒரு இருதயம்" அல்லது "உட்பகுதி". இந்த வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்க்கும்பொழுது, நாம் ஒரு ஆழமான உணர்வை பெற்றுக்கொள்கிறோம். வேதத்தின்படி, இன்று நீ தேவன் உனக்காக மனதுருக்கம் கொண்டிருக்கிறார் என்று அறிய விரும்புகிறேன். அவர் இரக்கத்தோடும் மனதுருக்கத்தோடும் உன்னை நேசிக்கிறார்.
இந்த திட்டத்தைப் பற்றி
2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.
More