எல்லாம் புதிதாயினமாதிரி
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது சந்தேகமின்றி ஒரு வகை முரண்பாடு. இயேசு சிறந்ததாக வைப்பது நாம் நம்முடைய இயற்கையான நிலையில் விடாமல் பற்றிக்கொண்டு இருக்கும் காரியங்களுக்கு எதிரானவைதான்.
இரண்டு கொரிந்தியர் எதிர்மறையான காரியங்களை சொல்லும் ஒரு நிரூபம். நம்முடைய பெலனையும் பெருமையையும் நம்பி நம் வாழ்க்கையை நடத்துவதே சிறந்ததும் சுலபமானதுமாக தோன்றினாலும், தேவன்மீது நம்முடைய நம்பிக்கையை வைத்து நடக்கும் சாகசமிக்க விசுவாசம் குறித்த நிரூபமாக அது இருக்கிறது. நம்முடைய பாவங்களை அவர்மீது ஏற்றுகொண்ட தம்முடைய குமாரன் இயேசுவை தேவன் இந்த உலகத்திற்கு அனுப்பினத்தினால், நாம் தேவனிற்கு விரோதமாக செய்த பாவங்கள் இனியும் எண்ணப்படுவதில்லை என்பதினால் நம்முடைய ஆத்துமாவின் ஆழத்தில் இருக்கும் நிலையான சமாதானத்தை குறித்த நிரூபம் அது. பவுல் அதை ஒப்புரவாகுதல் என்று அழைக்கிறார்.
பவுல் கொரித்துவிற்கு கி.பி. 50களில் வந்தபோது, கொரிந்து பட்டணம் வளர்ச்சியின் உச்சியில் இருந்தது. தென் கிரேக்க நாட்டின் வர்த்தக மையமாக கொரிந்து, ரோம மற்றும் கிரேக்க கலாச்சாரத்தின் சாராம்சத்திலும் பணத்திலும் செழித்துக்கொண்டு இருந்தது. பழங்கால கொரிந்துப்பட்டணம் நீ விரும்பினதனைத்தும் கொண்டு தன்னைத்தானே மெச்சிக்கொண்டது. ஆனால் நாம் அறிந்தபடி: நமக்கு எல்லாம் கிடைக்கும்படி கொண்டிருப்பது எப்போதும் நமக்கு தேவையானதைக் கொண்டிருப்பதற்கு இணையாகாது.
நம்முடைய தற்கால நாகரிக பட்டணங்கள் கொண்டிருப்பதுபோல, செழிப்பான கொரிந்துவின் கலாச்சாரமும் அதன் கீழ்நிலைகளை கொண்டிருந்தது. விபச்சாரம், அடிமைத்தனம், மற்றும் எல்லாவித காமவிகார அசுத்தங்கள் அதன் எல்லைகளில் காணப்பட்டன. போலி தேவர்கள் எங்குப்பார்த்தாலும் இருந்தன.
இந்த நிரூபம் அதிக ஊக்கத்தை தருவதாக நான் காண்கிறேன், ஏனென்றால் சபை கொரிந்துவில் வேலைசெய்யமுடியும் என்றால் நீயும் நானும் வாழும் இடத்திலும் நிச்சயம் அதனால் வேலை செய்யமுடியும். நான் ஒத்துக்கொள்கிறேன் சில வேளைகளில் நம் உலகம் அதிகமாக துஷ்பிரயோகம், இனவாதம் மற்றும் சன்மார்க்க சீர்கெடுக்குள்ளாக சென்றிருப்பதாக நான் உணருகிறேன்.ஆனால் இயேசுவின் சுவிசேஷம் கொரிந்துவின் வேசிகளையும், பணக்கார கொடூரர்களையும், விக்கிரகாராதனை செய்பவர்களையும், தேவாலய தலைவர்களையும் மாற்றுமென்றால், நிச்சயம் இயேசுவின் நற்செய்தி நம்முடைய இன்றைய பட்டணங்களின் மக்களையும் மாற்றும். நான் சிலவேளைகளில் தேவனுடைய பிள்ளைகள் பக்தியான இடங்களில்தான் இருப்பார்களென்று நினைக்க சோதிக்கப்பட்டாலும், தேவன் அவருடைய பிள்ளைகளை கொரிந்துவிலேகூட வைத்திருந்தார். உன்னையும் என்னையும் நாம் வாழும் கலாச்சாரத்தில் இன்று கொண்டிருப்பதுபோல. இரண்டு கொரிந்தியர் ஏற்கனவே ஒளிரூட்டப்பட்ட இடங்களைப்பார்க்கிலும் இருளில்தான் அதிகமாய் தேவனுடையசபையின் வெளிச்சம் வீசும் எனபதை நமக்கு நினைவூட்டுகிறது.
நீங்கள் இரண்டு கொரிந்தியரை வாசிக்கும்பொழுது, முரண்பாடுகளை தேடிக்கொண்டே இருங்கள். பவுல் நிபந்தனையின்றி கொரிந்தியர்களை எவ்வாறு நேசிக்கிறார் எனபதை கவனியுங்கள். இந்த அதீத முரண்பாடுகளை காணும்பொழுது நீங்கள் அழகாக ஜீவிக்க, பிரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களென்பதை மறந்துவிடாதீர்கள், ஏனென்றால் - இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலிலிருந்து - பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின, கடைசியாக எனக்குத்தெரிந்தவரையில், பழயதும் புதிதும் முற்றிலும் முரண்பாடானவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.
More