நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி
இந்த முதல் நாள் தியானத்தின் மூலம் உங்களை சினம் கொள்ளச் செய்வது தான் எனது நோக்கமே என்று சொன்னால், ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏன் என்ற காரணத்தையும் சொல்கிறேன்.
ஆதி திருச்சபையையும் இக்கால திருச்சபையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்ப்பீர்கள் என்றால், மிக பெரிய அளவில் இரண்டும் வேறுபட்டிருப்பதை உங்களால் எளிதாக கண்டு உணர முடியும். இதற்கு காரணம் பல்வேறு வேற்றுமைகளால் பிரிந்திருக்கும் ஸ்தாபனங்கள், தெய்வபயமில்லாத சபை தலைவர்கள், சீரழிந்த இக்கால கலாச்சாரம் என்று எளிதில் மற்றவர் மீது பழி சுமத்தி சென்றுவிடலாம். ஆனால் இன்றைய தியானத்தில், இந்த நிலைமைக்கு நாமும் எந்த எந்த விதங்களில் காரணமாகிறோம் என்று நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.
மிகைப்படுத்தப்படாத ஓர் உண்மை என்னவென்றால், ஆதி திருச்சபை கிறிஸ்தவர்கள் அசாதாரணமான மனிதர்களாக சமுதாயத்தில் வலம் வந்தார்கள். அவர்களை கண்டு உலகமே வியந்து நின்றது. எடுத்துக்காட்டாக சில வசனங்களை வேதத்திலிருந்து உங்களுக்கு காண்பித்து கொடுக்க விரும்புகிறேன்:
அன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒருவர் கூட குறைவுபட்டிருக்கவில்லை. உலகப்பிரகாரமான தேவைகளோடும் சரீர தேவைகளோடும் ஒருவரையும் காணமுடியவில்லை. அவர்களுக்கு எந்த மனுஷீக உதவியோ, அரசாங்கத்தின் உதவியோ கிடைத்திருக்கவில்லை (அப்போஸ்தலர் 4:33-35). ஊழியங்களின் அறுவடைக்கு அவர்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நொடிப்பொழுதில் முழு பட்டணமும் இயேசுவினிடத்தில் வந்தது. மிகவும் குறுகிய காலகட்டத்தில் சுவிசேஷம் ஒரு பட்டணத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீயாக பரவியது (அப்போஸ்தலர் 9:32-35, 19:10).
நாங்களும் மனிதர்கள் தான், கடவுள் அல்ல என்று மற்றவர்களுக்கு நம்ப வைக்க தடுமாறுகிற அளவிற்கு ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களுக்குள் தேவனுடைய வல்லமை வெளிப்பட்டது. (அப்போஸ்தலர் 10:25-26, 14:8-18) - இவைகளை சற்று நேரம் யோசித்து பாருங்கள். அவர்கள் கூடி ஆராதித்தபோது அவர்கள் கூடியிருந்த இடத்தையே அசைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டிருந்தது (அப்போஸ்தலர் 4:31). இப்படிப்பட்ட காரியங்களால் அவர்கள் உலகத்தை கலக்குகிறவர்கள் என்று மக்களிடையே பெயர் பெற்றிருந்தார்கள் (அப்போஸ்தலர் 17:6).
நமக்கு இன்று சவாலாக அமைவது என்னவென்றால், ஆதிகால கிறிஸ்தவர்களை காட்டிலும், கடைசி கால கிறிஸ்தவர்கள் மூலம் தேவ வல்லமை அதிகமாக வெளிப்படும் என்று தேவ வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டிருக்க, நம்மூலம் ஏன் இன்னும் அத்தகைய மேலான காரியங்கள் நடக்கவில்லை?
ஒரு திரைப்படத்தில் எப்படி கதாநாயகனுக்கு நெருக்கடி கொடுக்க, அவனை பெலவீனப்படுத்த ஒரு வில்லன் இருப்பானோ, அதே போன்று இக்கால திருச்சபைக்கும், திருச்சபை மக்களுக்கும் நெருக்கடி கொடுக்க, அவர்களை பெலவீனப்படுத்தும் சில வில்லன்கள் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சூப்பர்மேன் என்கிற ஒரு கற்பனை கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தை எடுத்துக்கூற விரும்புகிறேன். சூப்பர்மேன் என்ற அந்த கற்பனை கதாபாத்திரம், ஒரு சராசரி மனிதனுக்கு இல்லாத சக்திகளை கொண்ட ஒரு கதாபாத்திரம். ஆனால் அந்த கதையில் கிரிப்டோனைட் என்றொரு பொருள் உண்டு. அதை எப்பொழுதெல்லாம் சூப்பர்மேன் நெருங்கிறானோ அவன் தனது சக்திகளை இழந்து ஒரு சராசரி மனிதனை காட்டிலும் பெலவீனமான ஒரு மனிதனாக மாறிவிடுவான். இன்றைய திருச்சபை, திருச்சபை மக்களின் நிலையும் அதே தான். விவாகரத்துகள், ஆபாச அடிமைத்தனங்கள், வேசித்தன விபச்சார பாவங்கள் என்று எல்லாமே உலக மக்களை காட்டிலும் அதிகமாக கிறிஸ்த்தவர்களிடையே தான் காணப்படுகிறது. சூப்பர்மேனுக்கு க்ரிப்டோனைட் போன்று நமக்கும் நம்மை பெலவீனப்படுத்தும் காரியம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது திருச்சபையும் தேவனின் நோக்கத்திற்கும் திட்டத்திற்கும் மாறாக சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு, கட்டாயம் உங்களை சினம் கொள்ள செய்யவேண்டும்.
இந்த தியான திட்டத்தில் நமக்கு விரோதமாக கிரியை செய்யும் அந்த 'க்ரிப்டோனைட்கள்' எவை என்று அடையாளம் கண்டுகொண்டு, அவைகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை தியானித்து கற்றுக்கொள்வோம். அதற்கு மிகவும் அவசியமான ஒன்று, நாம் யார், நமது ஆற்றல் என்ன என்பதை நாம் முதலில் கண்டுகொண்டு அவைகளில் நம்பிக்கையாக இருக்க வேண்டும். உங்களது ஆற்றலை நீங்களே கண்டுகொள்ளாத பட்சத்தில் ஒருவராலும் அதற்குள் உங்களை ஊக்குவிக்க முடியாது, நீங்களும் அவைகளில் வளர முடியாது.
உங்களது ஆற்றலை தெரிந்துகொள்வதற்கு நீங்கள் இப்போது என்ன செய்ய போகிறீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
More