நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி
ஒரு சாயங்கால வேலையில், ஜஸ்டின் வேலை முடிந்து வீடு திரும்பியதும், அவரது மனைவி ஏஞ்சலா எல்லாம் சரி செய்து ஒரு அழகான அலங்காரத்தில் இருபதை காண்கிறார். அவள் தனக்கு ஆச்சரியம் ஏதாவது தருவாள் என எண்ணி, அதே போல் ஆடை அணிவதற்கும் அவர் முடிவு செய்கிறார்.
சற்று குழப்பமான ஏஞ்சலா, “அன்பே, நான் இன்று இரவு டோனியுடன் வெளியே செல்கிறேன். நாங்கள் இரவு உணவைப் முடித்துவிட்டு, ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மேலும் ஃபேர்மாண்ட் ஹோட்டலுக்குச் செல்லப் போகிறோம். நான் அதிகாலையில் தான் திரும்பி வருவேன். " என்றாள்
“யார் டோனி ?!” என ஜஸ்டின் கேட்டான்.
"அவர் என் உயர்நிலைப் பள்ளியில் இருந்து என் காதலன்," என்று அவள் பதிலளித்தாள்
"நீ அவனுடன் வெளியே செல்லக்கூடாது! ”
“ஏன் செல்லக்கூடாது”
அவன் அவளிடம், “நாம் திருமணம் ஆனவர்கள், நாம் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டுள்ளோம், நாம் மற்றொருவருடன் வெளியே போக கூடாது" , என்றான், தான் செல்லுவது சரி எனவும் நினைத்தான்.
"நீங்கள் எனக்கு மிகவும் பிடித்தவர். எனது பழைய ஆண் நண்பர்களை விட நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன், ஆனால் இனிமேல் நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நான் அவர்களில் சிலருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி உள்ளேன், நான் இன்னும் அவர்களை நேசிக்கிறேன், அவர்களுடன் நேரத்தை அனுபவிக்க விரும்புகிறேன். இதில் என்ன தவறு? ” என ஏஞ்சலா பதிலளித்தார்.
உண்மையில், இவர்கள் ஒரு சரியான ஜோடி அல்ல. திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட உறவு என்று யாராவது புரிந்து கொள்ளாமல் இருப்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, பழைய காதலர்களுடன் தொடர்ந்து செல்வோம் என்று எதிர்பார்த்த ஏஞ்சலாவைப் போன்ற ஒருவரை நாம் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம்.
இப்படி தான் நம்மில் பலரும் இயேசுவோடு உள்ள உறவில் இருக்கிறோம்.
வேதத்தின் மூலமாக, தேவன் நமக்கும் அவருக்கும் உள்ள உறவை திருமண உறவுடன் ஒப்பிடுகிறார். இதேபோல தான் தேவன் தன்னுடன் இஸ்ரவேல் உறவையும் பழைய ஏற்பாட்டில் பேசியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் விக்கிரகங்களை வணங்கியதின் மூலம், தனக்கு விரோதமாக எவ்வாறு விபச்சாரம் செய்தார்கள் என்பதை தீர்க்கதரிசிகள் மூலமாய் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தினார்.
நாம் சில வேளை நினைக்கலாம் விக்கிராக ஆராதனை என்பது விக்கிரகங்களை வணங்குவது என, ஆனால் இது ஆராதனையில் ஒன்று. ஆபிரகாம் ஈசாக்கு கதையில் முதலாவது ஆராதனை என்பதை நாம் வேதத்தில் பார்க்கும் போது, இங்கு ஆராதனை என்பது கீழ்ப்படிதல் என்று தேவன் விளக்குகிறார்.
ஆராதனை என்பது அருமையான மெதுவான பாடல்கள் அல்ல, அது கீழ்ப்படிதல். நீங்கள் சபையில் எந்த அளவு "நடிக்கிறீர்கள்" என்பது விசயமல்ல, நாம் தின வாழ்வில் தேவனுக்கு கீழ்படிய வில்லை என்றால், நாம் அவரை உண்மையாக ஆராதிக்கவில்லை என்பது தான் உண்மை, மேலும் நாமும் ஏஞ்சலா போல விபச்சாரத்தில் வாழ்கிறோம் என்பது தான் உண்மை.
ஆராதனை பற்றிய இந்த புரிதல் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தை எவ்வாறு மாற்றுகிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
More