நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி
விசுவாசிகளுக்கும் பாவத்திற்கும் உடனான உறவை குறித்து பேசவேண்டுமானால், அனைவரையும் ஒரே கட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது. அவர்களை 3 வகையாக பிரிக்க முடியும்.
முதல் வகை கிறிஸ்த்தவர்கள் எவர்களென்றால், இருதய கடினத்தின் நிமித்தம் பாவத்தை விரும்பி செய்பவர்கள். இரண்டாம் வகை கிறிஸ்தவர்கள் எவர்களென்றால், நாம் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்கள் எனவே அனைவருக்குள்ளும் பாவம் இருக்கிறது என்கிற பொய்யை நம்பி வாழ்பவர்கள். இயேசுவின் மரணம் பாவத்தின் விளைவுகளிலிருந்து மட்டுமே நம்மை விடுவித்திருக்கிறது, அதன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவில்லை என்று நம்புகிறவர்கள். இந்த இரண்டு வகை கிறிஸ்தவர்களும் அவர்களாகவே தங்களை பாவத்திற்குள் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். இவர்களது கீழ்ப்படியாமை கிறிஸ்துவின் சரீரமாகிய முழு சபைக்கும் க்ரிப்டோனைட் போன்று மிக பெரிய பெலவீனமாக இருக்கிறது.
மூன்றாவது வகை கிறிஸ்த்தவர்கள், பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்கி இருந்தாலும், அதிலிருந்து எப்படியாகிலும் விடுதலை பெற வேண்டுமென்று விரும்பி முயற்சிப்பவர்கள். இந்த வகை கிறிஸ்தவர்களோடு தான் நான் இன்று பேச விரும்புகிறேன்.
முதலாவதாக நான் கூற விரும்புவது, தேவனுடைய மன்னிப்பு அநாதியாய் என்றென்றைக்கும் உங்கள் மீது இருக்கிறது. அவருடைய மன்னிப்பு உங்கள் மீதிலிருந்து எடுக்கப்பட போவதேயில்லை. நீங்கள் பாவத்தின் பிடியில் சிக்கி, அதனால் படும் வேதனையை அவரால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் முழு மனதோடு விடுதலையை விரும்புவதை அவர் அறிந்திருக்கிறார். உங்களின் விடுதலைக்கு இந்த வார்த்தைகள் உதவும் என்று தேவ கிருபையினாலே நம்புகிறேன்.
நானும் பல ஆண்டுகளாக இந்த வகை கிறிஸ்தவனாக தான் இருந்தேன். ஆபாச காணொளிகளுக்கு அடிமைப்பட்டிருந்தேன். நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பதாக இருந்தே இந்த அடிமைத்தனம் எனக்குள் இருந்தது. இரட்சிக்கப்பட்ட பின்பும், ஊழிய வாழ்க்கை, திருமண வாழ்க்கைக்குள் வந்த பின்பும் இதிலிருந்து மீள முடியாமல் இருந்தேன். ஒரு முறை பிரசித்தி பெற்ற ஒரு அமெரிக்க ஊழியரிடம் அவர் கரங்களை என்மேல் வைத்து ஜெபிக்க கேட்டேன். எல்லா வகையிலும் முயன்றும் பலனில்லை.
என்னுடைய முன்னுரிமைகளை மாற்றுகிற வரையிலும் என்னால் விடுதலையை பெற முடியவில்லை. இந்த அடிமைத்தனம் என் ஊழியத்தை பாதிக்கும் என்பதாலேயே என்னை விடுவிக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எனது பார்வையை திருப்பினேன். இந்த அடிமைத்தனம் எனக்கும் தேவனுக்கும் இடையிலே இருந்த நெருக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர ஆரம்பித்தேன். இந்த பாவத்தில் நான் வாழ்வது தேவனின் இருதயத்தை எந்தளவுக்கு நோகடிக்கிறது என்பதில் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன்.
2 கொரிந்தியர் 7:10ல் நாம் வாசிக்கும்போது, லௌகிக துக்கம், தேவனுக்கேற்ற துக்கம் என்று இரண்டு வகையான துக்கங்களை வேறுபடுத்தி காண்பிக்கிறார். லௌகிக துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது.. தேவனுக்கேற்ற துக்கம் இரட்சிப்புக்கேதுவான மனம்திரும்புதலை உண்டாக்குகிறது. இவை இரண்டுமே என் வாழ்வில் இடம்பெற்றிருந்தது. முதலில் எனது துக்கம் உலகத்திற்கேதுவாக இருந்தது. லௌகிக துக்கத்தில் இருந்த வரையிலும் என்னால் விடுதலையை அனுபவிக்க முடியவில்லை. பின்னர், எனது பாவ வாழ்க்கை தேவனின் இருதயத்தை எவ்வளவு நோகடிக்கும், என் குடும்பத்தாரை எவ்வளவு வேதனைப்படுத்தும் என்ற தேவனுக்கேற்ற துக்கமாக மாறியது.
பிரியமான தேவ பிள்ளைகளே, உங்கள் பாவ கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்கு ஆசீர்வாதமான வாழ்வை கொடுப்பதற்கு தேவன் வாஞ்சையுள்ளவராகவே இருக்கிறார். மனம்திரும்புதலுக்கு நேராக உங்கள் உள்ளம் பயணிக்கட்டும். தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் அந்த மேலான புதிய வாழ்வை அனுபவியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
More