திட்ட விவரம்

தூக்கமின்மைமாதிரி

தூக்கமின்மை

5 ல் 1 நாள்

நள்ளிரவில்

எனக்குத் தூக்கம் வராத இரவுகளைப் பற்றி என் நண்பனிடம் நான் சொன்னபோது, "நீ படுக்கையில் படுத்திருக்கும்போது, உன் மனதில் உள்ள அனைத்தையும் மனதிற்குள் ஒரு அறையில் பூட்டிவைக்க வேண்டும். அது உனக்கு உதவும்" என்று அவர் இந்த உதவிக்குறிப்பை எனக்குக் கொடுத்தார்.

நான் அப்படிச் செய்ய முயற்சித்துப் பார்த்தேன், ஆனால் எனது சிறிய அறைகள், பல பெரிய அலமாரிகளாக மாறிவிட்டன. அதனால் நான் மிகவும் தடுமாறினேன்; மனதளவிலும் ஓய்வற்றிருந்தேன். அன்றைய நாளின் ஒவ்வொரு காரியத்தை பற்றியும் நான் கவலைப்பட்டேன், செலுத்த வேண்டிய பில்கள் அனைத்தைப் பற்றியும், அடுத்த நாளில் "செய்ய வேண்டியவை" பட்டியலில் உள்ளவற்றைப் பற்றியும் நான் சிந்தித்துக் கவலைப்பட்டேன்.

"ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்" (மத்தேயு 6:34) என்ற வசனம் உனக்குத் தெரியுமா?

என் தாயார், நான் வளரும்போது என் சிறுவயதிலிருந்தே, இந்த வசனத்தை அடிக்கடி சொல்லுவார். ஆனால் இந்த வசனத்தை நினைத்துப் பார்க்கும்போது, எனது நோக்கம் தவறாக இருந்ததை சில வருடங்கள் வயது தாண்டிய பின்புதான் நான் கவனித்தேன். "நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படட்டும்" என்று இயேசு சொல்லும்போது, தன்னிடம் விசுவாசம் கொண்டு இருக்குமாறு கூறுகிறார். (அதாவது, அவர் முன்கூட்டியே நமக்கு உதவி செய்வதாக வாக்குப்பண்ணி விட்டார்!) ஆனால் நானோ "கவலைகள் எப்போதுமே எனக்கு இருக்கும்" என்று தவறாக புரிந்துகொண்டிருந்தேன்.

நான் ஒன்றைக் கண்டுபிடித்தேன்: இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் குழப்பமான எண்ணங்களிலிருந்து வெளியேற, முதலில் நம் கண்ணோட்டத்தை சரிசெய்ய வேண்டும். இந்த வசனத்தை (மத்தேயு 6:34) நீ எவ்வாறு புரிந்துகொள்கிறாய்? உன் ஆண்டவரை நீ எப்படிப் பார்க்கிறாய்?

இதுவரை உன் வாழ்வில் வந்த அநேக பிரச்சனைகளிலிருந்து அவர் உன்னை மீட்டெடுத்திருக்கிறார் அல்லவா? அப்படியானால் இன்றும் நாளையும் அவர் அதை மீண்டும் செய்வார் என்ற நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டுமல்லவா? ஆம், ஆண்டவர் உன்னை ஒவ்வொரு நாளும் சுமந்து செல்வதாக வாக்களித்திருக்கிறார், ஆதலால் நீ ஒவ்வொரு நாளும் இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்!

உன் தூக்கத்தை மீட்டெடுப்பதற்கான முதலாவதும், மிக முக்கியமானதுமான திறவுகோல் இதுதான்: உன் சிந்தனையை சரிசெய்! ஆம், இது உன் கண்ணோட்டத்தைப் பற்றிய ஒரு காரியமாய் இருக்கிறது. என் கடந்த காலத்தில் நான் கண்டதுபோல், இந்த வசனத்தில் கவலைகளை மட்டுமே பார்க்கிறாயா? அல்லது ஆண்டவர் உனக்கு ஒவ்வொரு புதிய நாளிலும் உதவ விரும்புவதை காண்கிறாயா?

இந்த வசனத்தை சரியான கண்ணோட்டத்துடன் மனப்பாடம் செய்யுமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!... முக்கியமாக இரவு நேர உறக்கத்திற்கு முன்பாக இதைச் செய்தே ஆக‌ வேண்டும்.

உனக்கு சமாதானம் உண்டாக வேண்டும் என்று என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உனக்காய் நான் ஜெபிக்கிறேன்!

நீ ஒரு அதிசயம்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

தூக்கமின்மை

தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறக...

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்