திட்ட விவரம்

தூக்கமின்மைமாதிரி

தூக்கமின்மை

5 ல் 2 நாள்

தூக்கமின்மையில் சமாதானம் காண்

ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு இலக்கு இருக்கும்போது,​ உதாரணமாக, அடுத்த புத்தகத்தில் எழுத விரும்புகிற ஒரு சிந்தனையாக இருக்கலாம், புதிய இசையாக இருக்கலாம் அல்லது 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலுக்கான ஒரு புதிய யோசனையாக இருக்கலாம். இப்படி என் இருதயத்தில் ஏதாவது ஒன்றை சிந்திக்கையில், அது மீண்டும் வருகிறது: தூக்கமில்லாத இரவுகள்.

நீ முழுவதும் கவலையினால் மேற்கொள்ளப்பட்டு, படைப்பாற்றலுக்காக போராடி, தெளிந்த புத்தியோடு வேலை செய்ய முடியாது என்று நீ உணரும்போது, அது எவ்வளவு மனச்சோர்வை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். ஒருவேளை நீ ஒரு தாயாக இருந்தால், "இன்று என் குழந்தைகளுக்கு நான் எந்த விதத்தில் உதவப் போகிறேன்?" என்று நீ சிந்திக்கத் தொடங்கலாம். அல்லது நீ உன் பணியிடத்தில் ஒரு விளக்கக்காட்சியைக் (presentation) கொடுக்க வேண்டியிருக்கலாம், ஆனால் உன் மனம் முற்றிலும் குழப்பமடைந்த சூழ்நிலையில் உள்ளது.

இப்படிப்பட்ட குழப்பமான சூழலில்தான் நாம் சமாதானத்தைத் தேட வேண்டும். "அது எப்படி சாத்தியமாகும்?" என்று ஒருவேளை நீ ஆச்சரியத்துடன் கேட்கலாம்! தாவீது அதை எப்படி சாத்தியமாக்கினார் என்று சங்கீதத்தில் கூறுகிறார். தனது தூக்கமில்லாத தருணங்களை அவர் ஆண்டவருடன் செலவிட்டார்:

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது, உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது" (சங்கீதம் 63:6-8)

உன்னால் தூங்க முடியாதபோது கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் இதோ:

  1. ஆண்டவரைப் பற்றி சிந்தனை செய்... உன் மனது அவரையே சுற்றிச் சுற்றி சிந்திக்கட்டும்.
  2. அவர் உனக்கு எப்பொழுதும் உதவி செய்திருக்கிறார் என்பதையும், நாளைய தினத்தில் (நீ சோர்வாக இருந்தாலும்) மீண்டும் உனக்கு உதவுவார் என்பதையும் நினைவில் கொள்.
  3. தேவனைத்‌ துதி! ஆம், அதுதான் சரி ... உன் தூக்கமின்மையில் அவரைத் துதி! அவ்வாறு செய்வதன் மூலம், நீ ஆழ் மனதில் அவரைப் பற்றிக்கொள்வாய். அவர் இன்னும் உன்னை எப்படிப் பயன்படுத்துவார் என்பதையும், அடுத்த நாள் முழுவதும் உன்னை எப்படி வழிநடத்திச் செல்வார் என்பதையும் நீ காண்பாய்!

இளைப்பாறுதல் என்பது நன்றாகத் தூங்கி எழும்புவது அல்ல. எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவருடைய அருகாண்மையை நாடுவதுதான் இளைப்பாறுதல். நீ படுக்கையில் தூங்காமல் படுத்திருந்தாலும் கூட அதுதான் இளைப்பாறுதல். இந்த மூன்று படிகளைப் பின்பற்றும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன், மற்றும் அந்த நேரங்களில், "நீர் எனக்கு என்ன வெளிப்படுத்த விரும்புகிறீர்?" என ஆண்டவரிடத்தில் கேள்.

ஆண்டவர் உனக்காக நல்ல விஷயங்களைத் திட்டமிட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்பு!

நீ ஒரு அதிசயம்!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

தூக்கமின்மை

தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறக...

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்