உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்மாதிரி
![உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42991%2F1280x720.jpg&w=3840&q=75)
ஆண்டவர் உனக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவார்...
எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் அப்போதுதான் ஒரு அற்புதமான பயணத்தை முடித்து வந்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மிகப்பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டது, அதன் விளைவாக, இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றார். ஒரு வருடத்திற்கும் மேலாக, என் நண்பர் ஒரு இருதய பம்ப் யூனிட்டை தன்னுடன் வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆற்றும் இயக்கத்தின் உதவியால், அது அவருடைய இரத்தத்தை சுழற்சி செய்து அவரை உயிருடன் வைத்திருந்தது! ஆண்டவர் அவருக்கு ஒரு புதிய இதயத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவரது நெருங்கிய நண்பர்களாகிய நாங்கள், எங்களால் இயன்ற மட்டும் பொறுமையுடன் ஜெபம்செய்தோம். நாங்கள் ஜெபம் செய்து காத்திருந்தோம், மீண்டும் காத்திருந்தோம் மற்றும் மீண்டும் ஜெபம் செய்தோம்.
ஒரு நாள், நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் நண்பர் மாநிலத்தின் மறுபக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று சில நாட்களிலேயே ஒரு புதிய இருதயத்தைப் பொறுத்தி வந்தார். தற்போது, அவர் உடல் நலம் தேறி, குணமடைந்து வருகிறார், அவரது மார்பில் அதிசயம் என்று சொல்லத்தக்க இருதயம் துடித்துக் கொண்டிருக்கிறது!
என் நண்பனுடன் பழகிய நாட்களில், நான் கற்றுக்கொண்ட சில பாடங்கள் இவை: உன் அதிசயத்திற்காக ஆண்டவரிடத்தில் தொடர்ந்து கேள். அதே நேரத்தில், விடாமுயற்சி மட்டுமே பொறுமையை வளர்க்கும் ஒரு அற்புதமான வழியாகும். ஆண்டவருடைய நேரம் எப்போதும் சரியானது மற்றும் வல்லமை வாய்ந்தது என்று நம்பு. நம்பிக்கையையும் உன் சுற்றத்தாரையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாக ஜெபத்தைப் பயன்படுத்து.
எனது ஆவிக்குரிய பயணத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்க, எனது நண்பனின் வாழ்க்கைப் பயணம் எனக்கு அதிகமாக உதவியது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நானும் சில சமயங்களில் மனசோர்வு மற்றும் கவலையால் பாதிக்கப்படுகிறேன். இந்த உடைந்துபோன உலகத்தினால் உண்டாகும் சோர்வு உனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், நான் நன்மை செய்வதில் சோர்ந்துபோகும்போது, ஆண்டவருடைய குரலுக்கு செவி கொடுப்பது கடினம் என்பதுபோல் என் இதயம் உணர்கிறது, எசேக்கியேல் புஸ்தகத்திலிருந்து என்னைத் தாங்கி உயர்த்தும் ஒரு வாக்குத்தத்தத்தை நான் நினைவுகூருகிறேன்:
“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 36:26)
எத்தனை அருமையான ஒரு வாக்குத்தத்தம் இது! என் இருதயம் கடினமாகவும் சோர்வாகவும் இருக்கும்போது, என்னால் ஆண்டவரிடத்தில் புதிய இருதயத்தைக் கேட்க முடியும்! அவரால் மட்டுமே சகலத்தையும் புதிதாக்க முடியும்!
இன்று ஒரு நல்ல செய்தி வேண்டுமா? நம் ஆண்டவர் தம்முடைய இருதயத்தை நமக்காக தானம் செய்தவராவார்! நாம் ஒரு புதிய இருதயத்தைக் கேட்கும்போது, அவர் தமது இருதயத்தை நமக்கு வழங்குகிறார்! நித்திய ஜீவன், இரட்சிப்பு மற்றும் ஆண்டவருடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஒரு இருதயத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படி, இயேசு தம்முடைய ஜீவனையே கொடுத்தார்! நீ ஆண்டவருடைய இருதயத்தைக் கொண்டிருப்பாயானால், நீ வித்தியாசமாக வாழ்வாய், நீ வித்தியாசமாக நேசிப்பாய், நீ வித்தியாசமாக மன்னிப்பாய், மற்றும் நாளைய தினத்தை வேறு விதமாக எதிர்கொள்வாய்.
சற்று நேரம் ஒதுக்கி, ஒரு புதிய இருதயத்தைத் தருவேன் என்று வாக்குப்பண்ணிய ஆண்டவருக்கு நன்றி சொல். உன் இருதயம் களைப்பாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தாலும், புத்தம் புதிய இருதயத்தைப் பெறுவதைப் பற்றிய அவருடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்!
நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம். ஏன்? அந்த ஊக்குவிப்புடன் ஒரு வாக்குத்தத்தமும் இணைக்கப்பட்டுள்ளது.
"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." (கலாத்தியர் 6:9)
ஆண்டவருடைய நோக்கத்தை நம் முழு இருதயத்தோடு நிறைவேற்றினால், நாம் அற்புதமான அறுவடையைக் காண்போம்!
இன்று உனக்கு ஒரு புதிய இருதயம் தேவைப்பட்டால் - ஆண்டவரிடத்தில் ஒரு புதிய இருதயத்தைக் கேள்!! ஆண்டவர் வாக்குப்பண்ணியபடியே, எப்போதும் அவர் 'சரி உனக்குத் தருகிறேன்' என்று சொல்லுகிறவராய் இருக்கிறார்.
நீ ஒரு அதிசயம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42991%2F1280x720.jpg&w=3840&q=75)
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=7promisesofgod
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52714%2F320x180.jpg&w=640&q=75)
விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)