உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்மாதிரி
![உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42991%2F1280x720.jpg&w=3840&q=75)
வானவில் அடையாளமாகிய வாக்குத்தத்தம்
சில மாதங்களுக்கு முன்பு, நானும் என் மனைவியும் விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்க வேறு இடத்திற்கு சென்றிருந்தோம். ஒரு நாள் காலையில் எழுந்து காலை உணவு உன்ன திறந்த வெளியில் உணவு பரிமாறிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றோம். அங்கு நாங்கள் கண்டதான தண்ணீர் மற்றும் மரங்களின் கண்கவர் காட்சியையும், ஆண்டவருடைய படைப்பின் மகத்துவத்தையும் அழகையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம். இதை இன்னும் சிறப்புறச் செய்யும்படி, அங்கே ஒரு பளிச்சிடும் வானவில் தோன்றியிருந்தது! ஒரு நேர்த்தியான வளைவில், ஆண்டவர் அட்டகாசமான வண்ணம் மற்றும் அழகுடன் வானத்தை வண்ணக் கோடுகளால் ஒளிரச் செய்திருந்தார். அது திளைக்க வைப்பதாக இருந்தது! அந்தத் தருணம் மறைவதற்குள் மக்கள் படங்களைப் பிடிக்கப் பொருத்தமான இடத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த அற்புதமான வானவில்லைப் படம்பிடித்துவிட என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் எனது கேமராவால் அதைத் தத்ரூபமாய் படம் எடுக்க இயலவில்லை!!
வானவில்லை வைத்து ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் உனக்கு நினைவிருக்கிறதா? வெள்ளத்தின் மூலம் பூமியிலிருந்து தீமையை அகற்றிய பிறகு, ஆண்டவர் ஒரு வாக்குத்தத்தத்தை அளித்தார். ஆதியாகமம் 9 ஆம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கவும்.
"அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்." (ஆதியாகமம் 9:12-16)
இது ஒரு பாதுகாப்பு, மீட்பு மற்றும் நம்பிக்கைக்கான ஒரு அழகான வாக்குத்தத்தம்! மேலும், ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறார்.
நான் வாக்குத்தத்தத்தை விரும்புகிறேன், அதேநேரத்தில் அதனுடன் கூடவே வரும் பாடத்தையும் விரும்புகிறேன். மழை இல்லாமல் வானவில் வராது. இன்று புயல்களையும் சவால்களையும் நாம் சந்தித்துக் கொண்டிருந்தாலும், மழை பெய்து குறையும்போது, இயேசுவின் மூலமாக ஒரு அழகான வாக்குத்தத்தம் எப்பொழுதும் நமக்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... புயல் நிச்சயமாக அடங்கும்! நீ இந்தப் புயலைக் கடந்து செல்லுவாய், நீ அவ்வாறு கடந்து செல்லும்போது, ஆண்டவர் தம்முடைய அன்பையும் தம்முடைய வாக்குத்தத்தத்தையும் நீ தவறவிடாத வகையில் காண்பிப்பார்!
சிறிது நேரம் ஒதுக்கி தேவனை நோக்கி ஜெபம் செய்வோம்: “இயேசுவே, உமது அன்பு எனக்கு உண்டு என்பதை நீர் எப்பொழுதும் நினைவூட்டுகிறீர்! உமது வாக்குத்தத்தங்கள் மற்றும் மாறாத வார்த்தையின் வெளிச்சத்தில் உம்மைக் காண இன்று எனக்கு உதவும். நாங்கள் எந்த மழையை சகித்துக்கொண்டிருக்கிறோமோ, அது எதிர்காலத்தில் உமது வாக்குத்தத்தத்தின் நிமித்தமாக ஆசீர்வாதத்தைத் தரும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆமென்.”
நீ ஒரு அதிசயம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42991%2F1280x720.jpg&w=3840&q=75)
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=7promisesofgod
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52714%2F320x180.jpg&w=640&q=75)
விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)