உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்மாதிரி

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்

7 ல் 7 நாள்

வாக்குத்தத்தங்களின் வல்லமை!

ஒரே நாளில் எத்தனை சின்ன சின்ன வாக்குறுதிகளைக் கொடுக்கிறாய் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

"நான் ஒரு நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்."

"நான் அந்த ப்ராஜெக்டை உனக்கு 4 மணிக்குள் தருகிறேன்."

"நான் ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்."

"நான் உடனே வந்துவிடுவேன்."

இந்த வாக்குறுதிகள் சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றலாம், குறிப்பாக வாக்குறுதியைப் பெறும் நபருக்கு ஒவ்வொரு அறிக்கையும் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போகிறது என்பதை நினைத்துப் பார்ப்பது கடினம். நீ அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி, இன்றைய நாளை ஒரு அதிசயமான நாளாக்கு என்று சொல்லி நான் உனக்கு சவால் விட விரும்புகிறேன். இந்த சவாலை நானும் எதிர்கொள்வேன்!

ஆண்டவர் ஒருபோதும் தமது வாக்குத்தத்தத்தை மீறுவதில்லை, அவருடைய மக்களும் அவ்வாறே மீறக்கூடாது. நம்முடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதில் நம்முடைய பங்கைப் பற்றிய ஆண்டவருடைய வார்த்தை நமக்குச் சொல்வதைக் கேள். உனக்கான நேரத்தை எடுத்துக் கொள், ஆண்டவருடைய வார்த்தை உன் ஆத்துமாவில் ஆழமாக ஊடுருவிச் செல்ல அனுமதி. கவனச்சிதறல்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு, கூர்ந்து கவனித்து, உனக்கான ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு அறிந்து கொள்.

வேதாகமம் கூறுகிறது:

"செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்." (நீதிமொழிகள் 11:3)

"பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்." (நீதிமொழிகள் 20:25)

“தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. (பிரசங்கி 5:2)

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. (உபாகமம் 23:21-23)

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு. (பிரசங்கி 5:4-7)

உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." (மத்தேயு 5:37)

ஆண்டவருடைய வாக்குத்தத்தம் எவ்வளவு முக்கியமானதோ, நம்முடைய வாக்கும் அவ்வளவு முக்கியம்! நாம் வார்த்தையாகிய ஆண்டவரின் ஜனங்கள், நமது வார்த்தையைக் காத்து நடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு வாக்குத்தத்தத்துடன் தொடர்புடைய நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் மதித்து நடக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், நம் திருமணத்திலும், நட்பிலும், வணிகத்திலும், பெற்றோருக்குரிய விஷயத்திலும் நாம் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் நிறைவேற்றினால், அது எத்தனை அதிசயம்!

ஆண்டவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டு அவற்றை நிறைவேற்றுகிறாரோ, அதேபோல் நாமும் நமது வாக்குத்தத்தங்களை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது இன்றைய ஜெபமாகும்!

இன்று, நீ பண்ணிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பகுதி எது? நிறைவேற்ற முடியாமல்போன வாக்குத்தத்திற்காக, நீ திரும்பிச் சென்று நேர்மையாக மன்னிப்புக் கேட்க வேண்டிய இடம் எது? இன்று, உன் வாழ்க்கையில் வாக்குப்பண்ணியதை நிறைவேற்றிய ஒரு நபருக்கு ஒரு அன்பளிப்பை வழங்கி உற்சாகப்படுத்து. அப்படிச் செய்வதன்மூலம், நீயும் இயேசுவைப் போலவே வாழ்வாய்!

நீ ஒரு அதிசயம்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=7promisesofgod