திட்ட விவரம்

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வுமாதிரி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 ல் 1 நாள்

எகிப்தில் திருமணம் - சிறையிருப்பு

யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். யாத்திராகமம்- 1:8, 9, 11a

எகிப்தில் இஸ்ரவேல்: யாக்கோபின் நாட்களில் கானானில் பஞ்சம் ஏற்பட்டது, எனவே இஸ்ரவேலர்கள் (யாக்கோபு மற்றும்அவரது குடும்பத்தினர்) எகிப்துக்குச் சென்றனர், அங்கு யோசேப்பு ஒரு வலிமைவாய்ந்த தலைவராக இருந்தார். அவர்கள் கோசேனின் நன்மையை அனுபவித்தனர்; இஸ்ரவேலர் கனிகொடுத்து பெருகினர்.

யோசேப்பை அறியாத ஒரு ராஜா எகிப்தை ஆள தொடங்கியபோது, ​​இஸ்ரவேலை தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கண்டான். அதனால் இஸ்ரவேலர் கடும் உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக துன்பப்பட்டதுமல்லாமல் அடிமைத்தனத்திலும் இருந்தனர்(யாத்திராகமம் 1:13,14). அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால் அதிலிருந்து விடுவிக்கப்பட விரும்பினர்.

ஒரு தேசமாக, இஸ்ரவேல் மீண்டும் கானானுக்குள் செல்ல முன் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தேவனின் திட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தேவனை நோக்கி முறையிட்டார்கள். தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அவருடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார் (யாத்திராகமம் 2:23,24).

எகிப்தில் திருமணம்: முதலாவது நம் திருமணத்தை ஆராய்வோம். நாம் எங்கு இருக்கிறோம்? நாம் எகிப்தில் இருக்கிறோமா? கணவன் மனைவிக்கிடையில்,யாராவது ஒருவரிடத்திலாவது பாவம் அல்லது அடிமைத்தனம் இருந்தால், அந்த திருமணம் எகிப்தில் உள்ளது. எகிப்தில் திருமணம் இருக்கும் போது அது சாத்தானின் ஆளுகையில் உள்ளது என்று அர்த்தம். பிசாசின் ஆளுகையில் பாவம் பெருகும் (மத்தேயு 12:45). இந்த திருமணத்தில் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

திருமணம் ஒரு இருண்ட அறையைப் போல் இருக்கும்; வாழ்க்கைத் துணை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி, விரக்தி அடைவார்கள்;பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் மாறுவார்கள்; பெற்றோருக்கிடையில் எப்போதும் சண்டை இருப்பதை பிள்ளைகள் காண்பார்கள்.

பிள்ளைகள் அந்த சூழ்நிலையை விரும்ப மாட்டார்கள். இதினிமித்தம், எதிரியின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்வார்கள் அல்லது இச்சூழ்நிலையிலிருந்து தப்பிக்க தவறான மற்றும் அவசர முடிவை எடுப்பார்கள் - இது வருந்த்ததக்கது. இந்த சூழ்நிலைக்குத் தீர்வு காண கணவனோ, மனைவியோ பல்வேறு முயற்சிகள் எடுக்கலாம்.

நற்செய்தி: நீங்கள் எகிப்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை - சிலுவையில் சத்துருவை ஏற்கனவே தோற்கடித்த நம் மீட்பர் இயேசு கிறிஸ்து இருக்கிறார்! சிலுவையில் அவர் பாவம், சாபம், மற்றும் நோய்களை ஜெயித்துவிட்டார்! நீங்கள் அதை விசுவாசித்து, அந்த வெற்றியை உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திலும் உரித்தாக்கிக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கை,
திருமணம் மற்றும் குடும்பத்திலிருந்து எதிரியை வெளியேற்றும் அதிகாரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கை, திருமணம் மற்றும் குடும்பத்தில் இயேசு கிறிஸ்து ஆட்சிசெய்து, ஆளுகை செய்யம்படி அழையுங்கள்.

பாவத்தை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதை தீவிரமாக எதிர்த்து நிற்க வேண்டும். அந்த பாவமே, நம் வாழ்க்கை, திருமணம் மற்றும் பிள்ளைகளை திருடி, கொன்று, அழிப்பதற்கு எதிரி பயன்படுத்தும் ஆயுதம். (யோவான் 10:10). தேவன் பாவத்தை வெறுக்கிறார், நாமும் அதை வெறுக்க வேண்டும். எதிரியின் தந்திரங்கள் மற்றும் திட்டங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எகிப்தில் தங்குவதை தேவன் விரும்புவதில்லை – ஆகையால் வெளியேற வேண்டும்.

ஜெபம்:பிதாவே, எங்கள் வாழ்க்கை மற்றும் திருமணத்திற்கு நீர் வைத்திருக்கும் திட்டத்திற்காக உமக்கு நன்றி. எங்கள் வாழ்க்கையும் திருமணமும் சாத்தானின் ஆளுகையின் கீழ் இருப்பது உமது விருப்பம் அல்ல என்பதை நான் நம்புகிறேன். எதிரிக்கு, எங்கள் வாழ்வில் இடங்கொடுக்க என் பாவங்களே வழிவகுத்ததென்று நான் ஒப்புக்கொள்கிறேன்.எல்லா பாவங்களுக்கும் நான் மனம் வருந்துகிறேன். எங்கள் திருமணத்தை ஆளும்படி எதிரிக்கு நான் கொடுத்த ஒவ்வொரு அழைப்பையும் இயேசுவின் நாமத்தில் ரத்து செய்கிறேன். என் திருமணத்தில் இருக்கும் பாவத்தின் வல்லமையை நிர்மூலமாக்குகிறேன்.இயேசுவே, என் வாழ்க்கையிலும், திருமணத்திலும் நீர் ஆட்சி செய்து, ஆளுகை செய்யும்படி உம்மை அழைக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த தி...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCEக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்