அனைத்தையும் கொடுத்து, அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுமாதிரி

Giving It All Away…And Getting It All Back Again

9 ல் 7 நாள்

தலைமுறை கையாடல் கலை

"பொருளாதாரம்" என்ற வார்த்தை ஊடகங்களில் அதிகம் பரப்பப்படுகிறது, அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியுமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இது முதன்மையாக நமது நாடு பண ரீதியாக எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆனால் அது ஒரு வழி தான். என்னைப் பொறுத்தவரை, பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ள வழி "வளங்களை கவனமாக நிர்வகித்தல்" ஆகும். இது ஒரு மேலாண்மையாளரின் தேவையை குறிக்கிறது–வளங்களை கவனமாக நிர்வகிப்பவர்.

பழைய ஏற்பாட்டு புத்தகமான நீதிமொழிகளில், இறுதி அத்தியாயம் நீதிமொழிகள் 31 பெண் என்று அறியப்பட்டதை விவரிக்கிறது. நீங்கள் அத்தியாயத்தைப் படித்தால், விவரிக்கப்பட்டுள்ள பெண் ஒரு உலகத் தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

அவர் அறிவுசார், சமூக, நிதி, ஆன்மீகம், அழகியல் போன்ற அனைத்து வளங்களையும் கவனமாக நிர்வகிக்கிறார். அவளுடைய விடாமுயற்சியான வேலை கடவுளுக்கான அவளுடைய ஆன்மீக ஆர்வத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவள் கடவுளை மதிக்கிறாள், கனப்படுத்துகிறாள். அவளுடைய வாழ்க்கை இதை அற்புதமான மேலாண்மை மூலம் வெளிப்படுத்துகிறது. கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அனைத்தையும் கவனமாக நிர்வகிப்பது எப்படி என்பதை இந்த அற்புதமான பெண்ணிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.

பயன்பாடு: நீதிமொழிகள் 31 பெண்ணின் உதாரணத்தைப் பார்க்கும்போது, நீங்கள் என்ன நன்றாக செய்கிறீர்கள்? மேம்பாட்டிற்கு எங்கே இடம் இருக்கிறது?

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Giving It All Away…And Getting It All Back Again

புத்தகத்திலிருந்து ஒரு மேற்கொள் "எல்லாவற்றையும் கொடுத்து, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளுவது". Hobby Lobbyயின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கீரின், உதாரத்துவமான வாழ்க்கை, சிறந்த பலனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், சக்தி வாய்ந்த பாரம்பரியத்தை குடும்பத்திற்கும், நாம் சந்திக்கிற அனைவரையும் மாற்றுகிற சக்தியையும் உடையது என்று பகிர்ந்து கொள்ளுகிறார்.

More

இந்தத் திட்டத்தைக்கொடுத்ததற்கு டேவிட் கீரினுக்கும், சோன்டர்வேனுக்கும் நன்றி சொல்லுகிறோம்.மேலும்வி வரங்ளுக்கு, தயவு செய்து www.zondervan.comஐ அணுகவும்