அனைத்தையும் கொடுத்து, அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுமாதிரி
ஒரு நீடித்து நிற்கும் மரபு
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் நாம் எதிர் நோக்கும் கேள்விகள் வேறுபட்டவை. இருபதுகளில் நமது கேள்வி, "நான் யாரை திருமணம் செய்துகொள்வேன், என் தொழில் என்னவாக இருக்கும்?" என்பது. முப்பதுகளில், "என்னுடைய வாழ்க்கையில் நான் எவ்வாறு நிலைத்து இருப்பது, என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?"என்று கேட்க ஆரம்பிக்கிறோம்.
நாற்பதுகளில், "நான் உண்மையில் விரும்பிய வேலை இதுதானா, ஏன் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது?" என்று கேட்கிறோம். ஐம்பதுகளில், நாம் பின்நோக்கியும் முன்னோக்கியும் பார்க்கத் தொடங்கி, "இதுவரை எப்படி மாறிவிட்டது, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் குறிப்பிடதக்கது என்ன செய்வேன்? என்று கேட்கிறோம்"
நமது அறுபதுகளில், “எனது உடல்நலம் தாக்குப்பிடிக்குமா, என் பேரக்குழந்தைகளை எப்போது பார்ப்பேன்?” போன்ற எளிமையான கேள்விகளைக் கேட்கிறோம். எழுபதுகளில், நாம் உண்மையில் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து, “அதெல்லாம் மதிப்புள்ளதா, அல்லது யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? என்று கேட்கிறோம் ”
எண்பது வயதில், நம்முடைய உடைமைகள் குறைவாக பிரகாசிக்கக்கூடும். மறுபுறம், நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விஷயங்கள் தொட்டு உணர முடியாதவை:
- நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு
- உங்கள் மனைவியின் கை தொடுதல்
- கடவுளின் படைப்பைக் கவனித்துக்கொண்டு அமைதியான நடை
- உங்கள் குழந்தைகள்
- உங்கள் பேரக்குழந்தைகளின் சிரிப்பு
வாழ்க்கையின் கேள்விகளில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இறுதியில் நாம் கேட்கும் கேள்வியைதான், முதலாவது கேட்க வேண்டும். நம் முடிவைக் கருத்தில் கொள்ளாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குவது கடினம்: நாம் எதை எதிர்பார்க்கிறோம், நம் வாழ்க்கை, நம் குடும்பம், நம் குழந்தைகள் என எதைப் பற்றி கனவு காண்கிறோம்?
நாம் தள்ளிப்போடும் சில கேள்விகள்-நமது இறப்பு, நமது அர்த்தமுள்ள வாழ்க்கை, மற்றும் வெற்றி பற்றி-இப்போதே இவைகளை எதிர் நோக்க ஆரம்பிக்கலாம் என்று நம்புகிறேன். முடிவுகளைப் பற்றி நாம் பேசவில்லை, ஆனால் நீடித்த மரபுகளைப் பற்றி பேசுகிறோம்.
செயல் முறை: நீங்கள் வெற்றியை எப்படி உணர்வீர்கள்? வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் இருக்கும் போது, வெற்றி உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றுமா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
புத்தகத்திலிருந்து ஒரு மேற்கொள் "எல்லாவற்றையும் கொடுத்து, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளுவது". Hobby Lobbyயின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கீரின், உதாரத்துவமான வாழ்க்கை, சிறந்த பலனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், சக்தி வாய்ந்த பாரம்பரியத்தை குடும்பத்திற்கும், நாம் சந்திக்கிற அனைவரையும் மாற்றுகிற சக்தியையும் உடையது என்று பகிர்ந்து கொள்ளுகிறார்.
More