அனைத்தையும் கொடுத்து, அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுமாதிரி

Giving It All Away…And Getting It All Back Again

9 ல் 2 நாள்

ஒரே ஒரு வாழ்க்கை

ஆங்கிலேய கிரிக்கெட் வீரரும் மிஷனரியுமான C. T. Studd இன் "ஒரே ஒரு வாழ்க்கை" என்ற கவிதையை நான் விரும்புகிறேன். என்னை மிகவும் கவர்ந்த வரிகள், "ஒரே ஒரு வாழ்க்கை 'விரைவில் கடந்து போகும், கிறிஸ்துவுக்காக என்ன செய்ததோ அது மட்டுமே நிலைத்திருக்கும்."

கடவுள் நம்மை இந்த பூமியில் வேலை செய்ய, சம்பாதிக்க, மற்றும் அவர் நம்மிடம் ஒப்படைத்தவர்களைக் கவனித்துக் கொள்ள வைத்திருக்கிறார். ஆயினும்கூட, வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச்செல்லும் தாராள மனப்பான்மையின் தீவிர கொள்கைக்கு நம்மை அர்ப்பணிக்க, கொடுக்க இந்த பூமியில் நாம் வைக்கப்பட்டுள்ளோம் என்று நான் நம்புகிறேன். முற்பிதாவான ஆபிரகாமுக்கு கடவுளின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் ஆசீர்வாதமாக இருக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டதைப் பற்றி பேசும்போது நாம் என்ன அர்த்தம் கொள்கிறோம்? நமது கலாச்சாரத்தில், நிதி ஆசீர்வாதமாக விளக்கப்படலாம். நிச்சயமாக, நிதி அதன் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், கடவுள் பேசும் ஆசீர்வாதம் இன்னும் பலவற்றை உள்ளடக்கியதாக நான் நம்புகிறேன்:

  • குடும்பம்
  • நண்பர்கள்
  • திறமைகள்
  • சுதந்திரம்
  • கல்வி

என்னால் தொடர முடியும்.

எனக்குக் கிடைத்த எல்லா ஆசீர்வாதங்களையும் நான் கருத்தில் கொள்ளும்போது, என் இறைவனுக்கும் என் கடவுளுக்கும் நன்றி சொல்லாமல் இருப்பது எனக்கு கடினமாக இருக்கிறது. அவரது இதயம் தாராளமானது. அவருடைய ஆசீர்வாதங்கள் விசாலமானவை மற்றும் வளமானவை.

  

விண்ணப்பம்: நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பல வழிகளில் சிலவற்றைப் பட்டியலிடுங்கள். இந்த ஆசீர்வாதங்களை நித்திய நோக்கங்களுக்காக நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Giving It All Away…And Getting It All Back Again

புத்தகத்திலிருந்து ஒரு மேற்கொள் "எல்லாவற்றையும் கொடுத்து, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளுவது". Hobby Lobbyயின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கீரின், உதாரத்துவமான வாழ்க்கை, சிறந்த பலனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், சக்தி வாய்ந்த பாரம்பரியத்தை குடும்பத்திற்கும், நாம் சந்திக்கிற அனைவரையும் மாற்றுகிற சக்தியையும் உடையது என்று பகிர்ந்து கொள்ளுகிறார்.

More

இந்தத் திட்டத்தைக்கொடுத்ததற்கு டேவிட் கீரினுக்கும், சோன்டர்வேனுக்கும் நன்றி சொல்லுகிறோம்.மேலும்வி வரங்ளுக்கு, தயவு செய்து www.zondervan.comஐ அணுகவும்