உப்பும் வெளிச்சமும்மாதிரி
ஒரு சபை உப்பாகவும் வெளிச்சமாகவும் செயல்படும்போது, அநேகருடைய வாழ்க்கை மருரூபமாகும். அப்படி செயல்பட்ட ஒருவர் தான் உகாண்டா தேசத்தை சேர்ந்த எலிசபெத். 64 வயதாகும் இவருக்கு பதினான்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எட்டு வருடங்களுக்கு முன்பாக, அவர்கள் திருச்சபையாக சமுகதொண்டாற்றும்படி முடிவெடுத்தார்கள். அதின்படி, அவர்கள் தங்களிடம் இருப்பதை கொண்டே அவர்கள் சமுதாயத்தின் தேவைகளை சரி செய்ய ஆரம்பித்தார்கள்.
இதன்மூலம் எலிசபெத் அவர்களின் சமுதாயத்திற்கு தேவன் அவர்களுக்கென்று வைத்திருந்த நோக்கங்கள் புரிய ஆராம்பித்தது. அவர்கள் சொன்னார்கள்: “இந்த செயல்முறையில் நாங்கள் வேதத்தை படிக்க ஆரம்பித்த பின்னர், எங்கள் சபையில் ஒரு எழுச்சியை எங்களால் காண முடிந்தது.”
தங்களுடைய கரங்களில் எதுவும் இல்லையே என்று எண்ணுவதற்கு பதிலாக தாங்கள் இருக்கிறோமே என்று உணர ஆரம்பித்தார்கள். அவர்களுடைய சமுகத்தின் மிகப்பெரிய தேவைகளை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு, மாற்றத்திற்காக இணைந்து செயல்பட்டார்கள்.
அதற்கு முன்பாக அவர்களுக்கு தண்ணீர் தட்டுபாடு ஒரு பிரச்சனையாக இருந்தது. சமைப்பதற்கு, குடிப்பதற்கு மற்றும் சுத்திகரிப்புக்கு தேவையான தண்ணீருக்காக மக்கள் ஒவ்வொருநாளும் 5 கிலோமீட்டர் வரையிலும் நடக்க வேண்டியிருந்தது. இந்த தேவையை உணர்ந்து, அனைவரும் சேர்ந்து தங்களுடைய வீடுகளுக்கு அருகாமையிலேயே கிணறு தோண்டினார்கள்.
அதேபோல அவர்கள் சமுதாயத்தில் பிரசவ மரணங்கள் அதிகளவில் ஏற்பட்டு கொண்டிருந்தது. அதற்கு காரணம், அவர்களுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருத்துவமனை, ஏறக்குறைய 13 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதுவும் இரவு நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டால், அவர்களால் அவ்வளவு தொலைவு பிரயாணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உதவி செய்வதற்கு, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த பத்து பெண்களுக்கு பயிற்சி கொடுத்து, பிரசவ காலங்களில் உதவி செய்யும் மருத்துவச்சிகளாக அவர்களை ஏற்படுத்தினார்கள்.
இப்போது எலிசபெத் அவர்களின் சமுதாயம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இப்போது மக்கள் செங்கல்களை கொண்டு பாதுகாப்பான வீடுகளை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், வீடுகளில் விலங்குகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், மீன்பிடி குளங்களை வெட்ட ஆரம்பித்துவிட்டார்கள், அநேக மரங்களையும் செடிகளையும் நட ஆரம்பித்துவிட்டார்கள், விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சபை மக்கள் தங்கள் தனித்துவத்தை உணர்ந்து, தங்கள் சமுதாயத்தில் இயேசுவின் கரங்களாக பாதங்களாக செயல்பட ஆரம்பித்த பிற்பாடு, அவர்களுடைய சமுதாயம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை பாதையில் நாம் எப்படி உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க முடியும் என்பதை இந்த வேதப்பாடம் மூலமாக கற்றுக்கொள்வோம்.
More